Tag Archive: விஷ்ணுபுரம் விருது

இன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன

  நண்பர்களுக்கு, 2016 க்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கும் விழாவை ஒட்டி நிகழும் விவாத அமர்வுகள் இன்று காலை முதல் குஜராத்தி சமாஜில் தொடங்குகின்றன. அங்கேயே தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் எச்.எஸ். சிவப்பிரகாஷ், வண்ணதாசன், இரா.முருகன், பவா.செல்லத்துரை கு சிவராமன் ஆகியோர் பங்கெடுக்கிறார்கள். விவாதங்களில் நாஞ்சில் நாடன்,  ஜோ டி குரூஸ், தேவதேவன், எம்.கோபாலகிருஷ்ணன், சாம்ராஜ், புவியரசு ,சு.வேணுகோபால், கலாப்ரியா, அராத்து, பாரதிமணி, சுகா, லட்சுமி மணிவண்ணன், ரோஸ் ஆன்ரோ, கே.என்.செந்தில்,  இசை, முருகவேள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93500

ரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’

“At the edge of madness you howl diamonds and pearls.” ― Aberjhani, இலக்கிய வடிவங்களில் கவிதையே மிகவும் துருவித்தேடும் தன்மை கொண்டது .அது கிளைத்து பிரிந்து தேறும் பாதை இன்னதென்று யாருமே வகுத்துவிட முடியாது. மோப்ப நாயை மூச்சிறைக்க பின்தொடரும் பயிற்றுனர் போலே நாம் அதன் காலடித்தடங்களை பின்தொடர மட்டுமே முடியும் .அந்த நாய்க்கு எப்படி எதை தேடுவது தெரியும் ஆனாலும் கூட அது தேடும் பொருள் என்னவென்று அறியாது. தேவதச்சனின் கவிதைகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81295

‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1

’இரண்டு சூரியன்’ தொகுப்பில் இத்தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை உள்ளது தன் நாவு நீட்டி மின்மினிப்பூச்சியை கவ்வுகிறது தவளை ஒன்று தவளையும் பூச்சியும் கலந்து புதிய ஜீவராசி ஒன்று ஒரு விநாடி தோன்றியது அதற்கு தேவதச்சம் என்று பெயர் வைத்தேன் தவளை ஒரு குழப்பமான ஜீவராசி,மனிதனைப் போலவே.தன் வீடு எதுவென்று அறியாது குழம்பித் தவிக்கும் ஒரு வகையினம்.அதுவே அதன் அலைபடலுக்குக் காரணமாக அமையப்பெற்றது.மாறாக,மின்மினி என்ற சொல்லே பரவசத்தில் படபடக்கும் இமையென ஒலிக்கிறது.முதலில், அது பறக்கத் தெரிந்த ஓர் உயிர்.மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81291

கவிதை மீது சிறகசைக்கும் தேவதச்சனின் கவிதை– ‘மண்குதிரை’

எப்போவெல்லாம் மைனாவைப் பார்க்கிறேனோ அப்போவெல்லாம் தெரிகிறது நான் நீராலானவன் என்று அதன் குறுஞ்சிறகசைவில் என் மேலேயே தெறிக்கிறேன் நான் இந்தக் கவிதையில் இருக்கும் மைனா ஓர் அனுபவம்; அன்றாட கணத்தின் அசாதாரணம். அதன் சிறகசைவு நினைவில் இருக்கும் வேறோர் ஞாபகத்தை/அனுபவத்தை/வரலாற்றைத் தூண்டிவிடுகிறது. நமக்குள்ளிருக்கும் ஞாபகச் சுமைகொண்ட ஒரு நானும் அனுபவத்தின் நினைவைக்கொண்ட ஒரு நானும் சந்திக்கும் புள்ளிதான் இங்கே தெறிப்பாகத் தொழிற்படுகிறது. இது தேவதச்சன் என்னும் கவிஞன் உருவாக்கும் ஒரு பேருணர்வு; பல்லாயிரம் மழைத் துளிகளில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81284

மண்குதிரை

இயற்பெயர் ஜெய்குமார். பொறியியல் படித்தவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றுகிறார். 2000-ல் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். புதிய அறையின் சித்திரம் என்னும் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அத்தொகுப்பிற்காக ‘ராஜமார்த்தாண்டன் விருது’ பெற்றுள்ளார். ‘வெம்பா’ உள்ளிட்ட மூன்று சிறுகதைகள் வெளியாகியுள்ளன. முன்னோடிக் கவிஞர்களின் கவிதைகளை மதிப்பிட்டுக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ============================================================ தேவதச்சன் உருவாக்கும் பேருணர்வு [ஜெய்குமார்/மண்குதிரை] தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 27 அன்று கோவையில் நிகழ்கிறது. முந்தையநாள் 26 ஆம் தேதி காலைமுதலே நிகழ்ச்சிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81286

வாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்

தேவதச்சனின் கவிதைகள் அன்றாடத்திலிருந்து தன்னை வடித்து கொள்கின்றன. அவருக்கு கவிதை எழுதுவது கூட ‘ஒரு குண்டு பல்பை ஹோல்டரில் மாட்டுவது போலிருக்கிறது’. சமையலறையில் பொங்கி வழியும் பால் கேலிப் புன்னகையுடன் ‘முன்னொரு காலத்தில்’ என கதைக்கத் துவங்குகிறது. ரேஷன் கடை வரிசையில் நிற்பது கூட அவருக்கு ஒரு யாத்திரை ஆகிறது. அசாதாரணமான சூழல்களை அவர் எதிர்கொள்வதில்லை. ஆனால் அன்றாடத்தில் ஒளிந்திருக்கும் வசீகரமான சிறு மர்மத்தை அவருடைய கவிதைகள் தொட்டெடுக்க முயல்கின்றன. சுநீல் கிருஷ்ணன் [நரோபா ]எழுதிய கட்டுரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81282

விஷ்ணுபுரமும் மனுஷ்யபுத்திரனும்

ஜெ எதிர்காலத்தில் தனக்கு வழங்கப்படவிருக்கும் விஷ்ணுபுரம் விருதை இப்போதே திருப்பியனுப்புபதாக மனுஷ்யபுத்திரன் சொல்லியிருக்கிறாரே? உங்கள் எதிர்வினை என்ன? ஜெயராமன் அன்புள்ள ஜெயராமன், உண்மையிலேயே மனுஷ்யபுத்திரனுக்கும் சாரு நிவேதிதாவுக்குமெல்லாம் விஷ்ணுபுரம் விருது வழங்கவிருக்கிறோம். சீனியாரிட்டிதான் பிரச்சினை. சாரு நிவேதிதா மறுக்கமாட்டார் என நினைக்கிறேன், அவருக்கு வேறு எவரும் விருது வழங்க வாய்ப்பே இல்லை. மனுஷ்யபுத்திரன் மீது எங்களுக்கு பெருமதிப்புண்டு, பல்லாயிரம்தான் இருந்தாலும் அவர் நல்ல கவிஞர் அவருக்கு அவர் ஆற்றும் சொற்பொழிவுகளுக்காக திமுக விருதுகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/79676

தேவதச்சன் விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் 2

அன்புள்ள ஜெ தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றிய செய்தி மகிழ்ச்சி அளித்தது. நான் எண்பதுகளில் ஓரளவு கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் கவிதைகளுக்கான மனநிலை இல்லாமல் போய்விட்டது. கவிதைக்கான மனநிலை ஏன் இல்லாது போகிறது என்பதை யோசித்தபோது எனக்கு முக்கியமாகத் தோன்றிய விஷயம் ஒன்றுதான். கவிதை நம்முடைய அன்றாட வாழ்க்கையைப்பற்றியதானாலும் அதன் சாராம்சம் நம் அன்றாட வாழ்க்கையில் இல்லை. அது ஆன்மிகமானது. தத்துவார்த்தகனமானது. ஆகவேநாம் நம்முடைய சொந்த முயற்சியினால் அதை வைத்துக்கொண்டிருக்கவேண்டும். பென்சிலைக் கூர் சீவுகிற மாதிரி நம்முடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78475

தேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1

வணக்கம் ஜெயமோகன் , எப்படி இருக்கீங்க? அஜிதன் இப்ப என்ன பண்ணுகிறார் ? குடிப்பழக்கம் எந்த அளவிற்கு அடிமட்ட மக்களைப் பாதிக்கிறது என்று நீங்கள் தி இந்துவில் எழுதிய கட்டுரை மதுவின் கோரத்தை நெருக்கமாக உணர வைத்தது. சமகாலத்தில் என்னை மிகவும் பாதித்த கவிஞரான தேவதச்சன் அவர்களுக்கு உங்கள் அமைப்பிலிருந்து விஷ்ணுபுரம் விருது அறிவித்திருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். கவிதை நூல்களில் தேவதச்சனின் கவிதை நூல்கள் மட்டுமே வாங்கியிருக்கிறேன் ; படித்திருக்கிறேன். நான் வாசித்தவரையில் வேறு எவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78471

தேவதச்சன்,விஷ்ணுபுரம் விருது- நவீனப்படிமம் என்பது…

ஜெ தேவதச்சனின் இந்தக்கவிதை என்னை ஒருவகை சோர்வுக்கும் பின்பு ஒரு நிம்மதிக்கும் தள்ளியது. இந்த நீலநிற பலூன் இந்த நீலநிற பலூன் மலரினும் மெலிதாக இருக்கிறது. எனினும் யாராவது பூமியை விட கனமானது எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன். நீங்களாவது கூறுங்களேன், இந்த நாற்பது வயதில் ஒரு பலூனை எப்படி கையில் வைத்திருப்பது என்று… பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன. எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/78296

Older posts «