Tag Archive: விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்: பத்தாண்டு, பத்து நூல்கள்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கி பத்தாண்டுகள் ஆகின்றன. இப்பத்தாண்டுகளில் இதில் வாசகர்களாகப் பங்கெடுத்தவர்கள் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாக எழுந்திருக்கின்றனர். தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களாக வளர்ந்திருக்கின்றனர். பலர் தாங்களே இலக்கிய அமைப்புக்களை நிறுவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். இப்பத்தாண்டு நிறைவை ஒட்டி நம் நண்பர்கள் எழுதிய பத்து நூல்களின் வெளியீட்டுவிழா ஒன்றை நடத்தலாம் என எண்ணினோம். இதில் இந்த ஆண்டு தங்கள் முதல்நூலை வெளியிடும் நண்பர்கள் பத்துபேரின் நூல்களை அறிமுகம் செய்வது எங்கள் நோக்கம். முதல் சிறுகதைத் தொகுதிகள், மொழியாக்க நூல்கள் இதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/128835/

சென்னையில் பூமணி விழா

இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்களின் சார்பில் ஒரு பாராட்டுக்கூட்டம் சென்னையில் ஏற்பாடாகியிருக்கிறது. இது இவ்வருடம் நாங்கள் நடத்தும் முதல் கூட்டம். நாள் 11- 1-2015 ஞாயிறு இடம் சர் பி டி தியாகராஜர் அரங்கம் ஜி என் செட்டி சாலை, தி நகர், சென்னை நேரம் மாலை ஐந்துமணி செந்தில்குமார் தேவன், சிறில் அலெக்ஸ், ஜா ராஜகோபாலன், தனசேகர், ஜெயமோகன் கவிதா சொர்ணவல்லி , யுவன் சந்திரசேகர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69269/

ராஜகோபாலன் – விழா அமைப்புரை

நண்பர்களே ! அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். தமிழ் இலக்கியத்தின் ஆகப் பெரிய சாதனைகளில் ஒன்றான வெண்முரசு நாவல் வரிசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது . உலகில் 7 சிரஞ்சீவிகள் உண்டு என்கிறது இந்திய புராணங்கள். அதில் 6 பேர் தத்தம் குண இயல்புகளால் அழிவற்ற நிலை எய்தியவர்கள். அந்த குண இயல்புகள் இருக்கும் வரை அவர்களும் இப்புவியில் இருப்பார்கள். இந்த குண இயல்புகளையும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65945/

ஏற்காடு -விஷ்ணுபுரம் இலக்கிய முகாம் – 2013

ஏற்காட்டில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய மூன்றுநாள் இலக்கிய முகாம் குறித்த புகைப்படங்கள் , பதிவுகள்.   புகைப்படங்களின் தொகுப்பு  எம் ஏ சுசீலா அவர்களின் பதிவு  //ஒவ்வொரு நாளும் காலை அமர்வுகள் ஒன்பதரை மணிக்குத் தொடங்கி மதியம் ஒன்றரை அல்லது இரண்டு மணி வரை கூட நீள்வதுண்டு. அதே போல தினந்தோறும் பிற்பகலில் இரு அமர்வுகள். மதியம் இரண்டரை மணி அல்லது 3 மணி முதல் 5 அல்லது ஆறு வரை ஒரு அமர்வு; பிறகு ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37442/

விழா:கோபி ராமமூர்த்தி

இது போன்ற விழாக்கள் வாசகனுக்குப் பல புதிய வாசல்களைத் திறக்கின்றன. ஏற்கனவே வாசித்த புத்தகங்களில் தவறவிட்ட இடங்களை அடையாளங் காட்டுகின்றன. இன்னும் தீவிரமாக வாசிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றன. இவையனைத்தையும் சாத்தியமாக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அன்பர்களுக்கும், உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். கோபி ராமமூர்த்தி பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/23354/

திருவண்ணாமலையில்

நாளை காலை திருவண்ணாமலைக்குச் சென்று சேர்வதாக திட்டம். அங்கே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச்சேர்ந்த நண்பர் ஆனந்த் உன்னத் இலக்கியவட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான உஷா மதிவாணனின் மகள் ரீங்காவை மணக்கிறார். அனேகமாக இலக்கியவட்ட நண்பர்கள் அனைவருமே வந்து சேர்கிறார்கள். வம்சி பதிப்பக வெளியீடான ‘அறம்’ சிறுகதை தொகுதி வெளிவந்துவிட்டது. திருமணத்தில் அறம் வருகையாளர்களுக்குப் பரிசாக அளிக்கப்படுகிறது. ஆறாம் தேதியும் ஏழாம் தேதியும் திருவண்ணாமலையில் இருந்துவிட்டு ஏழாம் தேதி மாலை திரும்புகிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/22259/

கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கடவுள் மற்றும் அங்காடித்தெரு இரு அற்புத படைப்புகளை தந்ததற்கு என் வாழ்த்துகள். ஈசன், ஒரு குத்துப்பாட்டு எனும் தலைப்பில் தங்கள் தளத்தில் ஒரு கட்டுரை கண்டேன். படம் பார்க்கையில் என்னை வெறுப்பேற்றிய காட்சி, அந்த பெண் பாடியதும் அழும் அந்த சில நொடிகள்தான். தங்களுக்கு பிடித்துள்ளதாக கூறியுள்ளீர்கள். விபசாரம் செய்வது கேவலம் என்பது தெரிந்தும் இத்தகைய புல்லரிப்பு காட்சிகளுக்கு ஆதரவு தரலாமா? ரஜினி கூட ஒரு மேடையில்“விபச்சாரிகள் வயிற்று பிழைப்பிற்காக செய்கிறார்கள்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11406/

உண்டாட்டு – நாஞ்சில் விழா

இன்று மாலை நாஞ்சிலுடன் திருவண்ணாமலைக்கு ,நாளை ஞாயிறு மாலையில் பவா நண்பர்களின் உண்டாட்டு,  நண்பர்கள் அனைவரும் வரலாம். திங்கள் அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு செல்கிறோம் , விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ள நாஞ்சில்நாடனுக்கு பாராட்டுவிழா மற்றும் நாஞ்சிலின் புத்தக வெளீயீட்டு விழா. ஜனவரி 3 திங்கள் மாலை 6.30 க்கு சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் – அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது . குடும்ப விழாவிற்க்கு நண்பர்களின் வரவை எதிர்நோக்குகிறோம், அனைவரும் வருக.

Permanent link to this article: https://www.jeyamohan.in/11273/

ஜனவரி 3

நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றமைக்காக பாராட்டு விழா நாள் : ஜனவரி 3 திங்கட்கிழமை மாலை 6.30 இடம் : ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் – கஸ்தூரி ரங்கன் ரோடு – சென்னை (சோழா ஹோட்டல் பின்புறம்) . வரவேற்புரை : சிறில் அலெக்ஸ் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தலைமை : சிறுகதையாசிரியர் ராஜேந்திரசோழன் நாஞ்சில்நாடனின் ”கான்சாகிப்” புத்தகம் வெளியிடுபவர் : இயக்குனர் பாலுமகேந்திரா புத்தகம் பெற்றுக்கொள்பவர் : பாரதி மணி வாழ்த்துரை : இயக்குனர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11160/

வாசகர்ளுடனான சந்திப்பு

அன்புள்ள ஜெ, இன்று உடுமலை சிதம்பரத்திடம் பேசினேன். என் பெயரை ஏற்கனவே உங்கள் தளம் மூலமும், மற்ற சில வாசக நண்பர்கள் மூலமும் அறிந்தேன் என்று ஆச்சர்யப்படுத்தினார். தற்போது தான் படிக்கத் தொடங்கிய புதிய வாசகர்கள் கூட கவனிக்கப்படுகிறார்களா என வியந்தேன். பேசப்பேச மேலும் பல தகவல்கள் தந்து ஆச்சர்யப்படுத்தினார். முக்கியமாக ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’. ஏற்கனவே அதை சுருக்கமாக அறிந்திருந்தேன். சற்றே அதிகம் கேட்டவுடன், இன்றிரவே தளத்தில் தேடி அனைத்தையும் படித்து முடித்தேன். இப்போது என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8778/

Older posts «