Tag Archive: விவேக் ஷன்பேக்

புத்தக வெளியீட்டு விழா – நாளை திருவண்ணாமலையில்

திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் மூன்று நூல்களுக்கான வெளியீட்டுவிழா 10-03-2012 அன்று எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் ‘வேங்கைச்சவாரி’. நாளை காலையிலேயே எஸ்கேபி கல்லூரிக்கு வருகிறேன். நண்பர்களுக்கும் நல்வரவு. விவரங்கள் கீழே: ;

Permanent link to this article: https://www.jeyamohan.in/25801/

திருவண்ணாமலையில்…

திருவண்ணாமலையில் வம்சி புத்தகநிலையத்தின் மூன்று நூல்களுக்கான வெளியீட்டு விழா 10-03-2012 அன்று நிகழவுள்ளது. அதில் ஒன்று நானும் நண்பர்களும் மொழியாக்கம் செய்த விவேக் ஷன்பேகின் ‘வேங்கைச்சவாரி’. விழாவில் மலையாள எழுத்தாளர் பால் சகரியா, கன்னட எழுத்தாளர் விவேக் ஷன்பேக், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். நானும் கலந்துகொள்கிறேன். நண்பர்களை வரவேற்கிறேன்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/25715/

நம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]

கொல்லையை சுற்றிவந்தபடி தினமும் செய்யும் வேலையைத்தான் பாயக்கா அன்றும் மேற்கொண்டாள். முதிர்ந்த முந்திரிக்கொட்டைகளைப் பறித்தாள்; பிடிமானமின்றித் துவளும் முல்லைக்கொடியை நீவிக் கொடிப்பந்தலில் படரவிட்டாள்; மண்ணில் உதிர்ந்த நாவற்பழங்களைப் பொறுக்கினாள்; வெந்நீர் அடுப்புக்காய் மரப்பட்டைகளை செத்திக் கட்டினாள். வீட்டுக்குள் நுழையும் முன்பு வேலியைஒட்டி சற்று நின்றாள். ரெண்டு வீடு தள்ளி  வித்தியாசமான ஆடையணிந்த ஒரு கிழவி வராண்டாவில் அமர்ந்திருப்பதாய் பாயக்காவுக்குப் பட்டது.அது சங்கரனின் அம்மா கமலக்காவாக இருக்குமோ? ஆனால் ஏனிப்படி எதையோ அணிந்திருக்கிறாள்? அந்தவழியே வந்து கொண்டிருந்தவனைப் பாயக்கா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20829/

விவேக் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் வணக்கம். நலம்தானே? விவேக் கதைகளின் மொழிபெயர்ப்பைத் தொடர்ந்து வெளியிடுவது மகிழ்ச்சியாகவே உள்ளது. அவர் பெயரில் ஒரு சிறு திருத்தம் செய்யுங்கள். அவர் பெயரை விவேக் ஷான்பாக் என்று எழுதவேண்டும். மற்றபடி எல்லாம் சரி. அன்புடன் பாவண்ணன் அன்புள்ள பாவண்ணன் திருத்திவிடுகிறேன் ஆனால் சித்தலிங்கய்யா அவரது மண்ணும் மனிதரும் மொழியாக்கத்தில் ஷன்பேகர்கள் என்றே எழுதியிருக்கிறார் என நினைவு ஜெ அன்புள்ள ஜெயமோகன். விவேக் ஷன்பேக் கதைகள் உங்கள் பதிவில் படித்தேன். பிடித்திருக்கிறது. ஆனால், ஒரு மனிதனின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21181/

ஷரவணா சர்வீஸ் [விவேக் ஷன்பேக்]

-1-     “இன்னைக்கு வேண்டாம் சார். செவ்வாய்கிழமை.” என்று ஷரவணன் சொன்னபோது நான் ஒத்துக்கொண்டேன். அது எனக்கு வசதியாயிருந்தது. சாயங்காலத்துக்குள் முடிக்கவேண்டியவை நிறைய இருந்தன. ஷரவணனோடு போய் மனைகளைப் பார்க்க முடியாது. இந்த ‘செவ்வாய்’ விஷயம் தோதாக வந்ததால் உடனே சரி என்று சொன்னேன். நானாகவே அதைச் சொல்வதுபோலவே சொன்னேன் “அரே! இன்னைக்கு செவ்வாய்கிழமை! நானும் வேலைக்கு நடுவில மறந்துட்டேன் பாரு.” இரண்டு நாட்கள் கழிந்தபின்னும் ஷரவணன் இடம் பார்க்கப்போவது குறித்து எதுவுமே சொல்லவில்லை. வழக்கமாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20460/

ஜாமீன் சாஹேப்-2

[தொடர்ச்சி] -4- தனது உறவினரின் மகள் திருமணத்துக்காக ஒருமுறை தயானந்தா,சாகர் வரை செல்ல வேண்டியிருந்தது.அந்த சமயத்தில் மீனாட்சி என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் அவள் கணவனைக் கைது செய்திருந்தது.மீனாட்சியின் தாய்,தயானந்தாவின் அம்மாவுக்கு தூரத்து உறவினள்;அதை விட அவர்கள் முன்பு அண்டை வீட்டுக்காரர்களாக இருந்தவர்கள் என்பது,இன்னும் கூட முக்கியமானது.அந்தக் குடும்பத்திலிருந்த நான்கு பெண்களில் மீனாட்சியே இளையவள்.அவளுடைய தந்தை வாசுதேவ்,ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார்.முதல் மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பயங்கரமான அனுபவத்திற்குப் பிறகும்,மெட்ரிக் தேர்வை எழுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20450/

ஜாமீன் சாஹேப்- [விவேக் ஷன்பேக்]-1

1- தயானந்தா முதன்முதலாக அளித்த ஜாமீன் அவனுடைய தந்தைக்குத்தான்! அப்போது அவனுக்கு வயது இருபத்திரண்டு. பி.ஏ.,பரீட்சையில் முதல் இரண்டு முயற்சிகளில் தோற்றுப் போனபிறகு,எப்படியாவது அதை முடித்து விட வேண்டும் என்று அவன் போராடிக் கொண்டிருந்த நேரம் அது. தங்களது விடுமுறை நாட்களில் ஒன்றுகூடும் அவனது பட்டதாரி நண்பர்கள்,தங்களது ஊதிய விகிதம்,கடன் வாங்கும் தகுதி,தங்களுக்குரிய விடுப்புக் காலம்,வீட்டிலிருந்து தள்ளி இருக்கும்போது ஏற்படும் சாப்பாட்டுப் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது,தானும் ஒரு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20448/

சுதீரின் அம்மா – விவேக் ஷன்பேக்

1 ஓரிரு ஸ்பூன் கீர் குடித்ததோடு சரி, சுதீரின் அம்மா விருந்தில் பரிமாறப்பட்ட எந்த இனிப்பையும் தொட்டே பார்க்கவில்லை.  பேரப்பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஏகப்பட்ட இனிப்புகள் வாங்கிய விஷயம் அவளுக்கு தெரியும்.  ஆனால் ”போதும் வயிறு  ஒத்துக்கொள்ளாது” என்று சொல்லிவிட்டாள்.  ஆனால் மருமகள் கௌசல்யா இதை வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு புறக்கணிப்பாக நினைத்தாள்.  அவளுக்கு பயங்கரமான கோபம். ”எல்லாம் சாப்பிட வேணாம்.  கொஞ்சம் கொஞ்சம் வாயில போட்டு ருசியாவது பாத்திருக்கலாமே?”  கௌசல்யா சொன்னாள்.  இன்றைக்கும் வழக்கம்போல சரோஜினி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19620/

சில்லறை-கடிதங்கள்

முதலில் சில்லறை  கதையைப் பாதிவரை படித்து விட்டுவிட்டேன். இணையத்தில் படிப்பது ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் குறைக்கிறது. திருமதி சுசீலாவின் கடிதத்தையும் திரு.ஜெயமோகனின் பதிலையும் படித்துவிட்டு (சில்லறை-கடிதம்)மீண்டும் கதையை முதலில் இருந்து படித்து முடித்தேன். புதிய பரிமாணத்தைக் கதை கொடுத்தது. நம்பியின் செயல் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சில்லறைத்தனமாக இருக்கிறது. சும்மா இது ஒரு கதை என்பதுபோல தெரிகிறது. ஆனால் இதுபோன்ற நபர்களை நடைமுறையில் பார்க்கும்போது கதை புதிய பரிமாணத்தைத் தருகிறது. எனக்குத் தெரிந்து முன்பு என்னோடு தங்கியிருந்த நண்பர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19626/

சில்லறை-கடிதம்

அன்பின் ஜெ.எம்., விவேக் ஷன்பேக்கின் சில்லறை ,எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும்,அதிசயத்தையும் கொடுக்கும் கதையாக அமைந்து விட்டது. காரணம் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் அம்மாவுக்கு இதே போல-ஒன்று விடாமல்-கணக்கெழுதும் பழக்கம் இருந்திருக்கிறது.அவர்கள் தலைமை ஆசிரியையாக இருந்தவர்.’50களில் அவருக்குக் கிடைத்த 60,70 ரூபாய் சம்பளத்தைச் சிக்கனமாய்ச் சேமித்துக் குடும்பத்தை நடத்த வேண்டும் என்னும் எண்ணத்தில் அந்தப் பழக்கம் ஏற்பட்டதா..அல்லது அம்மாவின் மூதாதையர் யாருக்கும்(நான் யாரையும் பார்த்ததில்லை)அந்தப் பழக்கம்  உண்டா,தெரியாது. அம்மா 76 வயதில் நோய்ப் படுக்கையில் விழும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19568/

Older posts «