Tag Archive: விழித்திருப்பவனின் இரவு

இரு இளைஞர் கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். வயது 24. இங்கே சாப்பிடுவதற்கு விடுதி மெஸ். மெஸ்ஸில் சில பணியாளர்கள் என் ஒத்த வயதுடையவர்கள், அல்லது சற்றுச் சிறியவர்கள் (குழந்தைத் தொழிலாளர்கள் அல்ல).இதனால் என்னால் சிலசமயம், சாப்பிடவே முடிவதில்லை. அவர்களைக் கண்டுவருத்தப்பட்டுக்கொண்டிருப்பேன். ஆனால் தாழ்வாகக் கருதியதில்லை. ஏனோகுறுகுறுவென்று மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். அதே போல், முதியபணியாளர்களைக் கண்டாலும் மனம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.இதற்கு முன்னால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன்.அலுவகத்துக்குள் நுழையும் முன்னர், பைகளைச் சோதனை செய்ய இரண்டுபேர்நின்றுகொண்டிருப்பார்கள். சிலசமயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21381

உலக இலக்கியச்சிமிழ்

இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் காசர்கோடு தபால் தந்தி ஊழியர்சங்கத்தின் கம்யூனில் தங்கியிருந்த காலகட்டம் ஒருவகையில் கேரளத்தின் பொற்காலம். சொல்லப்போனால் பொற்காலத்தின் திரைவிழும் காலம் அது. நான் சென்றிறங்கியபோது கண்டது எல்லாருமே ஏதோ வாசிக்கிறார்கள் என்பதுதான். வட கேரளத்தில் அப்போது வேறு பொழுதுபோக்கே கிடையாது. சினிமா மீது பெரிய மோகம் அன்று மலையாளிகளுக்கு இல்லை. சினிமாவைப்பற்றிப் பேசுவது கொஞ்சம் குறைவான செயல் என்ற எண்ணம் சாதாரணமானவர்களிடம்கூட உண்டு. அரசியலும் இலக்கியமும்தான் விருப்பமான விஷயங்கள். அரசியல்கூட அன்றாட அரசியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6223