Tag Archive: விழா

கோவையில் பூமணி

கோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது நாள் 8-02-15 இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு நேரம் காலை 10 மணி நாஞ்சில்நாடன்,நல்ல.வி பழனிச்சாமி, சு.துரை, சோ.தருமன், கவிஞர் அறிவன், செல்வேந்திரன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/70713

ராஜகோபாலன் – விழா அமைப்புரை

நண்பர்களே ! அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். தமிழ் இலக்கியத்தின் ஆகப் பெரிய சாதனைகளில் ஒன்றான வெண்முரசு நாவல் வரிசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது . உலகில் 7 சிரஞ்சீவிகள் உண்டு என்கிறது இந்திய புராணங்கள். அதில் 6 பேர் தத்தம் குண இயல்புகளால் அழிவற்ற நிலை எய்தியவர்கள். அந்த குண இயல்புகள் இருக்கும் வரை அவர்களும் இப்புவியில் இருப்பார்கள். இந்த குண இயல்புகளையும், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65945

வெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை

அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். இது ஒரு வழக்கமான புத்தக வெளியீட்டு விழா அல்ல. இது ஒரு கொண்டாட்டம். கால எந்திரத்திம் ஒன்றில் பின்னோக்கிச் சென்று கம்பனோ வியாசனோ வள்ளுவரோ இளங்கோவோ எழுதிக்கொண்டிருக்கும் காலத்திலேயே அவர்களின் படைப்பை படித்து அவர்களுடன் உரையாடுவது எத்தனை இனிமையான அனுபவமாய் இருக்குமோ அந்த அனுபவத்தை ஜெயமோகன் நவீன இலக்கிய வாசகர்களுக்கு தந்துகொண்டிருக்கிறார். மகாபாரதத்தை நாவல் வடிவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் எழுத திட்டமிட்டிருக்கிறார். வெண்முரசு முடிவடையும்போது கிட்டத்தட்ட 30ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65762

விழா பதிவு 5, இது தமிழ்

தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். “வெண்முரசு” என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65653

விழா பதிவு 4 இட்லிவடை

ஐநூறு பார்வையாளர் இருக்கைகளும், சிறப்புப் பார்வையாளர் இருக்கைகளும், படிக்கட்டுகளும் சேர்த்து எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருப்பார்கள். வழக்கமான மேடைகள் போல் இல்லாமல் நவீனமாகவே மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது, “காக்கைச் சிறகினிலே” என்ற வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது விழா. இட்லிவடை பதிவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/65650

விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு

நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிசாரி மோகன் கங்குலி என்ற வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே எனக்குத் தொடைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. “கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட “The Mahabharata” புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அருட்செல்வப்பேரரசன் செய்து வருகிறார். பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியதைத் தனி ஒருவராக செய்துவருகிறார். மேலும் ஆடியோ கோப்புகளையும் பதிவிறக்கத்திற்குத் தந்து வருகிறார். அவரைக் கவுரவிக்கும் விதமாக பிரபஞ்சன் அவர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்குவார்” என்று அறிவித்தார். அருட்செல்வப்பேரரசன் பதிவு வெண்முரசு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65620

விழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி

நேற்று நடந்த வெண்முரசு நாவல்கள் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். எழும்பூர் மியூசியம் தியேட்டர் வளாகத்துக்குச் செல்லும் வழியில் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் வண்டியை வழிமாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்கும் நாள். அதற்கு அனுமதி தந்தும் தராமலுமான ஒரு குழப்பமான நிலை. பலர் கைது செய்யப்பட்டிருந்தனர் போலும். கூட்டம் நிரம்பி, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள். பலர் நின்றுகொண்டிருந்தனர். நான் பிரசன்னாவுக்கும் ஜடாயுவுக்கு இடையில் மிக வசதியான ஓரிடத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். 5.15-க்கு சிறப்பு விருந்தினர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65614

விழா- நன்றிகள்

வெண்முரசு நூல் அறிமுக விழா நேற்று மாலை சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தின் விழாக்கள் அனைத்துமே எப்போதும் பிரம்மாண்டமானவையாகவும் அதேசமயம் முழுமையான இலக்கிய அனுபவம் அளிக்கும் விழாக்களாகவும் அமைவது வழக்கம். இவ்விழாவும் அப்படியே. நண்பர்கள் குழுமத்தின் சிறந்த எதிர்விமர்சகரான கிருஷ்ணன் ‘இதுவரை நிகழ்ந்த விழாக்களில் கிட்டத்தட்ட பிழையற்றது’ என்று பாராட்டினார். அதுவே விழாக்குழுவினருக்கு கிடைக்கச்சாத்தியமான அதிகபட்சப் பாராட்டு. நிறைவளிக்கும் விழா. விழாவை நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது நண்பர் பாலாவிடம். அவரே தலைமை ஒருங்கிணைப்பாளர். அவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65509

விழா- தினமணி

வெண்முரசு விழா தினமணி செய்தி

Permanent link to this article: https://www.jeyamohan.in/65510

வெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு

மேலும் புகைப்படங்களுக்கு : வெண்முரசு விழா 2014 புகைப்படத்தொகுப்பு  

Permanent link to this article: https://www.jeyamohan.in/65497

Older posts «