Tag Archive: விளக்கு விருது

ஆ.சிவசுப்ரமணியம் அவர்களுக்கு விளக்கு விருது

ஆ.சிவசுப்ரமணியன் விக்கிப்பீடியா   ஆய்வாளர் ஆ.சிவசுப்ரமணியன் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இயல்பிரிவு விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர் ஆ.சிவசுப்ரமணியன். ஆய்வாளர் நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டவர். மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்தவர். ஆகவே பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அமைந்த ஆய்வுகள் அவை   1984ல் சுந்தர ராமசாமி ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய அடிமை முறையும் தமிழகமும் என்னும் நூலை எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127636

பாவண்ணனுக்கு விளக்கு விருது

பாவண்ணன் கதைகள் பாவண்ணன் இணையப்பக்கம் 2019 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது எழுத்தாளர் பாவண்ணனுக்கு வழங்கப்படுகிறது. இன்றைய எழுத்தாளர்களில் இலக்கியத்தை மட்டுமே பற்றிக்கொண்டு, தானறிந்த வாழ்க்கையின் உள்ளடுக்குகளை மட்டுமே ஆராய்ந்துகொண்டு, தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாவண்ணன் ஒரு முக்கியமான படைப்பாளி.   பாவண்ணனுக்கு வாழ்த்துக்கள்   [பாவண்ணன் [email protected] ] பாவண்ணனுடன் ஒரு சந்திப்பு அபிக்கு வாழ்த்து- பாவண்ணன் பாவண்ணன், பி.கே.சிவக்குமார் -சுட்டிகள் சென்னையில் பாவண்ணன் விழா பாவண்ணன் சிறப்பிதழ் உப்புவேலி பற்றி பாவண்ணன் ஞானக்கூத்தன் பற்றி- பாவண்ணன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/127604

சி.மோகனுக்கு விளக்கு விருது

எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், நூல்தொகுப்பாளரும்,கலை, இலக்கிய விமர்சகருமான சி.மோகனுக்கு இவ்வாண்டுக்கால விளக்கு விருது அளிக்கப்படுகிறது. சி.மோகன் அதிக முனைப்பின்றிச் செயல்படும் இயல்பு கொண்டவர். ஆகவே குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் தமிழிலக்கியப்பரப்பில் முக்கியமான பங்களிப்பை தன் விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் நிகழ்த்தியவர். குறிப்பிடும்படியான சிறுகதைகளையும் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்னும் சிறியநாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ தமிழ் மொழியாக்கங்களில் ஓர் அலையை உருவாக்கியபடைப்பு சி.மோகனுக்கு வாழ்த்துக்கள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/78842

கோணங்கிக்கு விளக்கு

தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான கோணங்கிக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. விளக்கு விருது பெறும் கோணங்கிக்கு வாழ்த்துக்கள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62720

தேவதச்சனுக்கு விளக்கு விருது

தேவதச்சனுக்கு இரு முகம். ஒன்று தமிழின் முக்கியமான முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். இன்னொன்று, நவீனத் தமிழிலக்கியத்தைக் கட்டமைத்த இலக்கிய மையங்களில் ஒன்று அவர். மிகச்சிறந்த உரையாடல்காரர். தேவதச்சனுக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.நவீனக்கவிதையின் வாசகர்கள் அனைவருக்கும் மனநிறைவூட்டும் விருது. இந்த இந்தியப்பயணம் இல்லையேல் தேவதச்சனுக்கு ஒரு விழா உடனடியாக ஏற்பாடு செய்திருப்பேன். வேறுவழியில்லை. ஆகவே மார்ச் மாதம் தேவதச்சனை வாசகர்கள் சந்திக்கவும் விவாதிக்கவும் வாழ்த்தவுமாக ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை நிகழ்த்தலாமென நினைக்கிறேன்.சென்னையில் எனத் திட்டம்.நண்பர்களின் ஒத்துழைப்பை ஒட்டிச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23570

விக்கிரமாதித்யனுக்கு விளக்கு

கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா நாள்: 31 ஜனவரி 2010 நேரம்: மாலை 6 மணி இடம்: இக்ஸா செண்டர், 107 பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 8 (எழும்பூர் மியூசியம் எதிரே) வண்ணநிலவன் சி.மோகன் அ.மார்க்ஸ், எஸ்.ராமகிருஷ்ணன் சமயவேல் சங்கர ராம சுப்ரமணியன் வித்யாசங்கர் விக்கிரமாதித்யன் பற்றி பேசுகிறார்கள். கடைசியில் விக்கிரமாதித்யன் ஏற்புரை நிகழ்த்துகிறார். ‘நாடக வெளி’ ரங்கராஜன் ‘விளக்கு விருது’ அமைப்பினர் சார்பாக இக்கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பு செய்துள்ளார். அனைவரும் வருக.

Permanent link to this article: https://www.jeyamohan.in/6353

விக்கிக்கு விளக்கு

நவீனத்தமிழின் முக்கியமான கவிஞராகிய விக்கிரமாதித்யனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டிருக்கிறது. அனேகமாக விக்கி பெறும் முதல் முக்கியமான விருது இது என்று நினைக்கிறேன். அதை அளித்த விளக்கு அமைப்பு தன்னை கௌரவப்படுத்திக்கொண்டிருக்கிறது. எதன் பின்னாலும் செல்லாத படைப்பாளிக்குப் பின்னால் செல்லும்போதே அமைப்புகள் கௌரவத்தைப் பெறுகின்றன. அமைப்புக்குள் ஒடுங்காத ஒரு மனிதரேனும் இருக்கும்போதே அமைப்புகள் அந்த மனநிலையை அடைகின்றன. இப்போதைக்கு அந்த தகுதி ‘விளக்கு’ தவிர வேறெந்த விருது அமைப்புக்கும் இல்லை. விக்கிரமாதித்யன் எண்பதுகளில் தமிழிலக்கிய உலகுக்குள் வந்தார். அன்னம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5997

எஸ்.வைத்தீஸ்வரனுக்கு விளக்கு விருது

  தமிழ் புதுக்கவிதையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவரான எஸ்.வைத்தீஸ்வரனுக்கு இவ்வருடத்திய விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தியில் தொடங்கி நீளும் ஒரு நேர்ப்பாதை ஒன்று உண்டு. தி.சொ.வேணுகோபாலன் நாரணோ ஜெயராமன் போன்றவர்களை அதற்கு உதாரணமாகச் சொல்வதுண்டு. அவ்வரிசையைச்சேர்ந்தவர் வைத்தீஸ்வரன். இவ்வரிசையினரின் கவிதைகளில் எப்போதும் ஒரு நேரடித்தன்மை உண்டு. படிமங்களின் தனிமொழி வழியாக ஆழ்பிரதியை மட்டும் உண்டுபண்ணும் நவீனப்புதுக்கவிதைகளின் நடுவே இவை எளிய சித்தரிப்புகள் என்ற பாவனையை மேற்கொண்டு பேச முற்படுகின்றன. ஆனாலும் இவற்றின் மொழி படிமங்களினால் ஆனதே. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1190

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விளக்கு விருது விழா

திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். சுந்தர ராமசாமி முக்கிய விருந்தினராக வந்து கலந்து கொண்டு விருதை வழங்கினார். புதுமைப் பித்தனின் படத்தை தமிழ்ச் சங்க கட்டிடத்திலும் அவர் திறந்து வைத்தார். ரங்கராஜன் விளக்கு அமைப்பு சார்பில் வழங்கப் படும் இவ்விருது எளிமையான ஒன்று என்றாலும் முக்கியமான இலக்கிய படைப்பாளிகளுக்காக மட்டுமே இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/132