Tag Archive: விருஷாலி

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–61
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 6 கர்ணனின் அரண்மனையில் சிற்றவையை ஒட்டிய சிறிய ஊட்டறையில் விருஷாலி தாரைக்கு அருகே பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள். இப்போதுகூட பிழையென ஏதும் நிகழவில்லை, எழுந்து சென்றுவிடலாம் என அவள் எண்ணினாள். ஆனால் உடலை எழுப்பமுடியவில்லை. அவள் கைவிரல்களை பின்னிக்கொண்டே இருப்பதைக் கண்ட தாரை “அரசி, இது முறைமைமீறல் அல்ல. இது அரசரின் அவை அல்ல. அவைக்குத்தான் அரசமுறைமைகள்” என்றாள். “அறியாது பேசுகிறாய் நீ. உனக்கு இங்குள்ள நடைமுறைகள் தெரியாது” என்றாள் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/106585

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–60
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 5 காவலர்தலைவன் வந்து சேய்மையிலேயே நின்று தலைவணங்கி “அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள், அரசி” என்றான். சேடி விருஷாலியின் ஆடைகளை சீரமைத்தாள். இன்னொருத்தி அவள் படைப்பன்னம் உண்ட இலைகளையும் தொன்னைகளையும் அகற்றினாள். கூந்தலை சீரமைத்து விருஷாலி நிமிர்ந்து அமர்ந்தாள். தொலைவில் ஹரிதர் வழிநடத்த விகர்ணனும் குண்டாசியும் அவர்களுக்குப் பின்னால் தாரையும் நடந்துவருவதை அவள் கண்டாள். அவர்களுக்கு முன்னால் வீரன் ஒருவன் எதிரே எவரும் வராமல் விலக்கியபடி வந்தான். இடையில் அறிவிப்புச்சங்கு செருகியிருந்தான். தொலைவில் நடந்தணையும் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/106630

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 4 அஸ்தினபுரியிலிருந்து விகர்ணனும் அவன் துணைவி தாரையும் உடன்பிறந்தான் குண்டாசியுடன் சம்பாபுரிக்கு வந்திருக்கும் செய்தியை முன்புலரியில் கதிரவன் ஆலயத்திற்கு செல்லும்போதுதான் விருஷாலி அறிந்தாள். தேரில் செல்லும்போதுதான் அணுக்கச்சேடி ஒவ்வொரு செய்தியாக அவளிடம் சொல்வது வழக்கம். சூழ்ந்தமைந்த அன்னையரை வழிபட்டு, கதிர்முகம் எழுகையில் தாமரை மலர்களை படைத்து நாளவனை வணங்கும்பொருட்டு அவள் உள்முற்றத்தில் இறங்குகையில் அவளைக் காத்து ஹரிதர் நின்றிருந்தார். உடன் துணையமைச்சர் துங்கரும் இருந்தார். “இன்று ஏன் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/106573

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–58
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 3 கலிங்கச் சிற்பிகளால் மூலஸ்தான நகரியிலிருந்த மாபெரும் சூரியதேவன் ஆலயத்தின் அதே வடிவில் செந்நிற மென்கற்களைக் கொண்டு சம்பாபுரியின் மையத்தில் கட்டப்பட்ட நாளவன்கோட்டம் பன்னிரு வாயில்கள் கொண்டு வட்ட வடிவில் அமைந்திருந்தது. தரையிலிருந்து நான்கு ஆள் உயரத்தில் எழுப்பப்பட்ட அரைக்கோள வடிவிலான பீடத்தின் மீது ஒன்றன்மேல் ஒன்றென அடுக்கப்பட்ட ஏழு முகடுகளுடன், உச்சியில் கூர்ந்துநின்ற பொன்முலாம் பூசப்பட்ட கலத்துடன், மணிமுடிசூடிய தலைபோல் தொலைவிலிருந்தே அது தெரிந்தது. விருஷாலி …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/106529

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 2 அக்கோடையில் கர்ணன் சம்பாபுரிக்கு தெற்காக அமைந்த தென்புரி என்னும் அரண்மனையில் தங்கியிருந்தான். அரண்மனையை ஒட்டிய சிறிய அவைக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் குடியவையும் அரசவையும் கூடின. ஆனால் அவை மிகச் சிறிய அளவில் வெறும் சடங்கென்றே நிகழ்ந்தன. குடியவைக்கு முதிர்ந்து, விழியும் செவியும் மங்கிய மூன்று குடித்தலைவர்கள் தங்கள் கொடிகளுடனும் முறையாடைகளுடனும் சென்று அமர்ந்தனர். அரசவையில் சிற்றமைச்சர் கருணர் தன் மைந்தனுடன் சென்று முறைமைகள் அனைத்தையும் இயற்றினார். அவற்றை எவரும் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. நகர்மையத்திலிருந்த அரண்மனையை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/106459

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–56
பகுதி ஒன்பது : கதிர் இருள் பொழுது – 1 அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் வந்திருப்பதை அங்கநாட்டின் பேரமைச்சர் ஹரிதர் விருஷசேனனின் அவையிலிருந்து நேரில் வந்து உரைத்தபோதுதான் விருஷாலி அறிந்தாள். அஸ்தினபுரியிலிருந்து சுஜாதன் முந்தைய நாள் மாலையிலேயே சம்பாபுரிக்கு வந்தான் என்றும், சம்பாபுரியின் அரசப்பெருமாளிகையில் விருஷசேனனும் உடன்பிறந்தாரும் அமர்ந்து பின்னிரவு வரை சொல்சூழ்ந்தனர் என்றும், மறுநாள் சம்பாபுரியின் குடிப்பேரவை ஒன்று கூட்டப்பட்டு அதில் அஸ்தினபுரியில் நிகழ்ந்தவை அனைத்தையும் சுஜாதன் விரித்துரைத்தான் என்றும் ஹரிதர் சொன்னார். “நம் அரசரை அஸ்தினபுரியின் அரசவைக்கு அழைக்கவில்லை. …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/106444

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 19
பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 7 மாளிகையின் முன் தேர் நிற்பதுவரை கர்ணன் எதையும் அறிந்திருக்கவில்லை. புரவிகளின் குளம்படியோசைத்தொடர் அடுக்கழிந்து உலைந்ததை உணர்ந்து அவன் விழித்து எழுந்தபோது சகடங்கள் கிரீச்சிட்டு தேர் முன்னும் பின்னும் சலித்தது. அவன் இறங்கி பாகனை நோக்கி தலையசைத்துவிட்டு தன் மாளிகை நோக்கி நடந்தான். காவலர் தலைவன் ஊஷரன் அவனை நோக்கி வந்து தலைவணங்கி “பெரும்புகழ் அங்கத்தின் அரசரை வாழ்த்துகிறேன். இந்த மாலை இனிதாகுக!” என்றான். தலையசைத்துவிட்டு மாளிகையின் படிகளில் ஏறினான். …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/82852

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 17
பகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 5 பரிசுகள் பெற்று சூதனும் கூட்டரும் அவை விட்டு வெளியேறும் வரை பானுமதி அப்பாடலில் இருந்து வெளிவரவில்லை என்று தோன்றியது. அணுக்கன் வந்து துரியோதனன் அருகே தலைவணங்கி மெல்லிய குரலில் “மாலை அவை கூட இன்னும் இரண்டு நாழிகையே பொழுதுள்ளது. தாங்கள் ஓய்வெடுக்கலாம்” என்றான். “ஆம். அதைத்தான் நானும் எண்ணினேன்” என்றபடி திரும்பி நோக்க அணுக்கன் சால்வையை எடுத்து அவன் தோளில் அணிவித்தான். கர்ணனை நோக்கி திரும்பிய துரியோதனன் “இக்குல …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/82760

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11

11
பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 8 அவைக்கூடத்திற்குள் கர்ணன் நுழைந்தபோது அவை கடல் அலை எழுவதுபோல எழுந்தது. எப்போது எழுவது என்று அவையினருக்கு தெரியாதாகையால் முன்வரிசை எழக்கண்டு பின்வரிசையினர் எழுந்தனர். முன்வரிசை அமரக்கண்டு பின்வரிசை அமர்ந்தபோது சென்ற அலை திரும்பிவந்தது. அஸ்தினபுரியின் அவை தடாகத்தில் நீர் எழுவதுபோல எழும். சீராக, அமைதியாக. வாழ்த்தொலிகள் கலைந்த பறவைக்கூட்டம் போல ஒலித்தன. வைதிகர் வேதம் ஓதி கங்கைநீர் தெளித்து வாழ்த்த முதுவைதிகர் அவனை அழைத்துச்சென்று அரியணையில் அமரச்செய்தார். குலமூத்தோர் …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/82353

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 7
பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 4 அங்க நாட்டிற்கு கர்ணன் குடிவந்தபோது சம்பாபுரியின் அரண்மனை வளாகத்திற்குள் குடியிருப்பதற்கு ராதை உறுதியாக மறுத்துவிட்டாள். அதிரதனுக்கு அதில் பெருவிருப்பிருந்தது. “இல்லை, ஒருபோதும் அங்கு நாம் குடியிருக்கப்போவதில்லை” என்று ராதை சொன்னபோது பதைக்கும் கீழ்த்தாடையுடன் அவளையும் கர்ணனையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம். அதுவே உகந்தது” என்றார் அதிரதன். “எங்களுக்கு சூதர்களின் குடியிருப்பிலேயே இல்லம் ஒன்றை ஒதுக்கு” என்றாள் ராதை. “ஆம். அங்கும் மாளிகைகள் உண்டல்லவா?” என்றார் அதிரதன். “மாளிகை …

மேலும் »
Permanent link to this article: https://www.jeyamohan.in/82034

Older posts «