Tag Archive: விருது

அசோகமித்திரனுக்கும் ஷோபா சக்திக்கும் விருது

  கனடா இலக்கியத்தோட்ட விருது  கண்டிவீரன் என்னும் தொகுதிக்காக ஷோபா சக்திக்கும் அபுனைவு பிரிவில் குறுக்குவெட்டுக்கள் என்னும் தொகுப்புக்காக அசோகமித்திரனுக்கும் வழங்கபட்டுள்ளன ஷோபா சக்தியும் அசோகமித்திரனும் தமிழ் இலக்கிய உலகின் இரு பெரும் படைப்பாளிகள். இருவருக்கும் என் வணக்கமும் வாழ்த்தும்   ஜெ  

Permanent link to this article: https://www.jeyamohan.in/88399

சகிப்புத்தன்மையின்மை- ஆறுதல்

ஜெமோ சகிப்பின்மை பற்றிய குறிப்பு [விஷக்கொடுக்கு ] கண்டேன். சரி, இடதுசாரி அறிவுஜீவிகள் எல்லாம் புரோக்கர்கள், அதிகார அடிவருடிகள். அவர்களுக்கு கொடுக்கிற சலுகைகள் தவறு. வீடுகள் பிடுங்கப்படவேண்டும். அவர்களின் முதுகெலும்பு முறிக்கப்படவேண்டும். பதிலுக்கு என்ன? உங்களைப்போன்ற வலதுசாரி அறிவுஜீவிகளுக்கு அதெல்லாம் தரப்படவேண்டும்? அவ்வளவுதானே? சங்கர் அன்புள்ள சங்கர், 1. இடதுசாரி அறிவுஜீவிகளைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. என் எழுத்துக்களில் எப்போதுமே அவர்களை மேற்கோளாக்கி வருகிறேன். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்பவன் நான் 2. எந்த ஒரு அறிவுச்சூழலுக்கும் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81451

வெற்றிமாறனுக்கு விருது

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ என்ற திரைப்படம் உலகப்புகழ்பெற்ற வெனிஸ் திரைவிழாவில் போட்டிப்பிரிவில் கலந்துகொண்டிருக்கிறது. இந்தியத் திரைப்படங்கள் போட்டிப்பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதே அபூர்வம் என்னும் நிலையில் அப்படம் மனித உரிமைப்போராட்ட நோக்கம் கொண்ட படம் என சிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பது பெரிய வெற்றி வெற்றிமாறனையும் படக்குழுவையும் மனமார வாழ்த்துகிறேன். தரமான தமிழ் சினிமா இயக்கத்தின் ஒரு தொடக்கமாக இது அமையட்டும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/78775

ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது

நண்பர்களே 2014 ஆம் வருடத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் ஞானக்கூத்தனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் 28 ஞாயிறு அன்று கோவை நானி கலையரங்கு – மணி மேல்நிலைப்பள்ளியில் மாலை 5.30 க்கு விழா நிகழும். 27 சனிக்கிழமை முதல் கருத்தரங்குகள், சந்திப்புகள் என ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம் .இடம் பங்கேற்பாளர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள் கசடதபற இதழ்மூலம் நவீன இலக்கியத்திற்குள் ஆழமாக காலூன்றிய ஞானக்கூத்தன் தமிழ்த்தேசிய நோக்குள்ளவர். மபொசியின் நண்பர். தமிழரசுக்கழகத்தில் உறுப்பினராக இருந்து தமிழக எல்லைப்போராட்டங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65693

நோபல்-ஐரோப்பா-கடிதம்

ஆசிரியருக்கு, வணக்கம். அருண் எழுதிய கடிதம் பார்த்தேன். அவர் யார் என்று எனக்கு தெரியாது. phd செய்வார் என நினைக்கின்றேன். அவரது பதில் பார்த்தேன். அவருக்கு எனது கடைசி பதில். புண்படுத்தும் நோக்கத்தில் எதுவும் சொல்லவில்லை. ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும். ஒரு மாதம் கடந்தால் ஊடகக்காரர்களுக்கு மறந்து விடும் நோபெல் பரிசு என்று சொல்லி விட்டு , பெரிதாக ஒன்றுமே தமிழில் சொல்வதில்லை என்று முடிவு எடுத்த பின்னர் சும்மா இருந்திருக்கலாம். ஆனால் சுட சுட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63778

இலக்கியமும் நோபலும்

ஜெ சார் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்ற மோதியானோ பற்றி உங்கள் எண்ணம் என்ன? கருத்துக்களை எதிர்பார்த்தேன் சாமி அன்புள்ள சாமி நான் அவரை நோபல் பரிசுக்குப்பிறகுதான் கேள்விப்படுகிறேன். உடனே பாய்ந்து போய் படித்துப்பார்க்கவும் போவதில்லை. ஏனென்றால் அப்படிப் படித்த ஆசிரியர்களெல்லாம் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள். இலக்கியப்பித்து ஓங்கியிருந்த காலகட்டத்தில் நோபல் ஆசிரியர்களை அப்போதே வாசித்துவிடுவேன். 1983ல் நோபல் பரிசுபெற்ற வில்லியம் கோல்டிங் என் முதல் ஏமாற்றம். அடுத்து பரிசு பெற்ற கிளாட் சீமோங் அடுத்த ஏமாற்றம். அவரது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63684

சத்யார்த்தி- அமெரிக்கா- கடிதங்கள்

கட்டாயத்தின் பெயரில் (!!!!) சதிகார (!!!!) ஐரோப்பியர்களின் கல்வி நிலையத்தில் அறிவு தேட சென்று இருக்கும் நண்பர் நோபல் பரிசு பற்றி வாரி இறைத்திருக்கும் அன்பை (!!!) படித்தேன். அவர் ஏன் அந்த சதிகாரர்களின் வலையில் விழுந்து சின்னாபின்னாமாக வேண்டும். அவரை கை பிடித்து காப்பாற்ற யார் முன் வருவாரோ என மனம் பதை பதைக்கின்றது. ஐரோப்பியர்களின் கல்வி நிலையம் காந்தியை, நேருவை, அம்பேத்கரை உருவாக்கி இருக்கின்றது. இன்னமும் பல வழிகளில் மனித இனம் முன்னே செல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63707

நோபல்பரிசுகள் -விவாதம்

அன்புள்ள ஜெ இந்த இணைப்பை உங்களுக்கு அனுப்புகிறேன். அறிவியல் தவிர்த்து அளிக்கப்படும் நோபல்பரிசுகள் எவையுமே புறவயமானவை அல்ல என்று கருதுகிறேன். இலக்கியவிருதுகள் எப்போதுமே ஐரோப்பிய விருதுகள்தான். ஐரோப்பிய [அமெரிக்க] படைப்புகளும், ஐரோப்பிய ரசனைக்கு உரிய படைப்புகளும்தான் வழமையாக விருதுக்குரியவையாக தேர்வுசெய்யப்படுகின்றன. விருதுபெற்ற படைப்பாளிகளில் முக்கால்வாசிப்பேருக்கு எந்த விதமான உலகளாவிய மதிப்பும் கிடையாது. இவ்வருடம் பரிசுபெற்ற பட்ரிக் மொடியானோ [Patrick Modiano]வை நான் வாசித்திருக்கிறேன். நான் வாசிக்கும் கலாசாலைக்கும் அவர் வந்திருக்கிறார்.ஒரு சராசரி ஐரோப்பிய எழுத்தாளர். இந்த வருடம் மட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63606

சத்யார்த்தியின் நோபல் -ஐயங்கள்

இந்த இணைப்பை குழுமத்தில் நமது நண்பர் அனுப்பியிருந்தார், சந்தேகத்திற்கு இடமானவாறு தான் உள்ளது. கலைமாமணி , சாகித்ய அகாடமி, நிதிக்காக எழுதுபவர்கள், தான்னார்வத் தொன்டு நிறுவனம் நிறுவி செயல்படுபவர்கள் ,யானை டாக்டரில் வருவது போல பத்மஸ்ரீ , இப்படி எல்லா விருதுகளும் லாபியில் முந்துபவர்களுக்கே என்றாகிறபோது நமது விஷ்ணுபுரம் விருதும் எப்போது இந்த நிலைக்கு முன்னேறும். விஷ்ணுபுரம் தேர்வுக் கமிட்டி என ஒன்றை வெளித்தெரிகிறவாறு விளம்பரப் படுத்தி அதில் என் பெயரையும் சேர்க்க வேண்டுகிறேன். என்னையும் அணுகட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63696

நோபல் பரிசுகள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம், இந்த வருட உலக அமைதிக்கான நோபல் பரிசு நமது நாட்டைச்சேர்ந்த திரு.கைலாஷ் சத்யார்த்தி,அவர்களுக்கும்,அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலா அவர்களுக்கும் கூட்டாக வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறீவீர்கள்.இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவெனில்,60வயதான திரு.கைலாஷ் அவர்கள் தனது 26 வயது முதல் சிறுவர்,சிறுமியர்களை பணியில் ஈடுபடுத்துவதை எதிர்த்தும்,அவர்களுக்கு முறையாக கல்வி வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அமைதியாக காந்தீய வழியில் ஒரு சமூக இயக்கம் நடத்தி வந்துள்ளார்.இந்த 34 வருடங்களில் குழந்தை தொழிலாளர் முறையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63524

Older posts «