கதையில் அவன் தோல்வியடைந்தவனாக சித்தரிக்கும்போது உண்மையில் அப்படி அவன் தோல்வியடைய முடியாது என்று தோன்றியது. இளமை எண்ணங்களை வைத்து அவன் முதுமையில் பிடிக்கும் இடத்தை ஒரு நேர்க்கோட்டால் இணைத்து சொல்லிவிட முடியவில்லை. காடு நாவல் பற்றி கே.ஜே.அசோக் குமார் அவரது இணையதளத்தில் எழுதியிருக்கும் கட்டுரை காடுபற்றிய அனைத்து விவாதங்களும்
Tag Archive: விமர்சகனின் பரிந்துரை
Permanent link to this article: https://www.jeyamohan.in/71104
பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி
பனிமனிதன் சாகசம், நீதி, கற்பனை, தத்துவம் என்று அனைத்தையும் கலந்து குழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதை. ஜெயமோகனின் மற்ற கதைகள் அனைத்தும் படு சீரியசானவை, பெரியவர்களுக்கானவை. அவரால் குழந்தைகளுக்கும் எழுத முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார். நல்ல கதை சொல்லி குழந்தைகளை கவர்ந்துவிடுவான். ரெங்கசுப்ரமணி விமர்சனம் பனிமனிதன் விவாதங்கள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/57923
கொல்லும் வெள்ளை யானை
யானையைப் பற்றி எழுதினாலும் சரி, யானையை ஒரு உருவகமாக எழுதினாலும் சரி, ஜெயமோகன் சிலிர்க்க வைத்து விடுகிறார். அயல் நாட்டின் ஏதோ ஓர் ஏரியில் உறைந்து கிடந்த பிரம்மாண்டப் பனி மிருகத்தைத் தூக்க மருந்துகள் கொடுத்துப் பெயர்த்து எடுத்து, உறக்கத்திலேயே அதை ஓர் வெப்ப நாட்டுக்குக் கொண்டு வந்து வியர்வையில் உருகச் செய்து வெறியேற்றி விட்டால் கண்மண் தெரியாமல் கொல்லத்தானே செய்யும். ஐஸ் ஹவுஸிற்கு வந்திறங்கி இருக்கும் பனிக்கட்டியை முதல் முறை விவரித்து அதை ஒரு மதம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/57429
காடு-கேசவ மணி
நாவலை வாசித்து முடித்ததும் பல நாட்களுக்கு காடு நம் மனம் முழுதும் நிரம்பித் தளும்புகிறது, நீலியின் உருவம் போல. நம்மைச் சுற்றியும் காடு இருப்பதான உணர்வு, மனக்கிளர்ச்சியாக, கனவுலகில் சஞ்சரிக்கும் பாவனையாக, நம்முள் இருந்துகொண்டே இருக்கிறது. இத்தனை நாளும் வெறும் சொல்லாக நமக்குள் இருந்துவந்த காடு இந்நாவலின் வாசிப்பின் மூலம் நம் அனுபவமாக மாறிவிடும் விந்தை நேரும் தருணங்கள் பிரமிப்பை ஊட்டுபவை கேசவமணியின் கட்டுரை பழையகட்டுரைகள் பெருங்காடும் நுனிப்புல்லும் – சீனு காடு ஒரு கடிதம் காடு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/56244
எத்தனை கைகள்! -சாம்ராஜ்
விஷ்ணுபுரம் பெருங்கனவு. மனிதர்களின் அகத்திலும் புறத்திலும் ஒவ்வொரு காலத்திலும் அது உருவாகிறது. அழிகிறது. விஷ்ணுபுரம் ஒரு மகா சக்கரமெனில் காலமெனும் சக்கரத்தின் மீதே அது எப்போதும் சுழன்று கொண்டிருக்கிறது. பிங்கலனும், திருவடியும் ஒரே குஷ்டரோகியின் காலையே தரிசிக்கின்றனர். அதுவும் நாமத்தைப் போலவே விரிந்திருக்கிறது. விஷ்ணுபுரம் குறித்து சொல்லில் அடங்காத புனைவுகள் விஷ்ணுபுரம் நகரத்திலும், மற்ற உலகத்திலும் நிலவுகிறது. அப்புனைவுகள் வரலாறு ஆகின்றது. வரலாறு புனைவாகின்றது. ஒவ்வொரு முறையும் அது காவியங்களாலும், கற்களாலும் உருவாகின்றன. பின் அதுவே சொற்களாகவும், …
Permanent link to this article: https://www.jeyamohan.in/35791