Tag Archive: விமரிசகனின் பரிந்துரை

சித்திரவனம்

எப்போதோ திரு.அதீன் பந்தோத்பாத்யாயா எழுதிய சித்திரங்கள், சு. கிருஷ்ணமூர்த்தி பற்பல வருடங்களுக்கு முன் தமிழில் மொழிபெயர்த்த, ஆயிரக்கணக்கான எழுத்துக்களால் ஆன (ஆக்கப்பட்ட) சித்திரங்கள், படிக்கப் படிக்க இருளில் இருந்து வாசகனுக்காக உயிர் பெறுகின்றன. அபார அனுபவம் – திரைச்சித்திரங்களும் எழுத்துச் சித்திரங்களும் http://solvanam.com/?p=35957#sthash.36aPef1O.dpuf அதீன் பந்த்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடி பற்றி சிவா கிருஷ்ண மூர்த்தி

Permanent link to this article: https://www.jeyamohan.in/63216

மழை இசையும் மழை ஓவியமும்

மழைப்பாடல் பிதாமகர் பீஷ்மர் கூர்ஜரத்துக்குப் பயணம் செய்யும் காட்சியுடன்  தொடங்கி மனதில் அபாரமான கற்பனையை விரித்து நம்மை ஆகர்ஷித்து உள்ளே இழுத்துக்கொள்கிறது. வார்த்தைகளில் உருக்கொண்டு கண்முன் விரியும் கடலின் பிரம்மாண்டமும் பெய்யும் மழையும் மிகுந்த மன எழுச்சியைத்தர நாம் நாவலுக்குள் பிரவேசிக்கிறோம் மழைப்பாடலின் மழைபற்றிய ஒரு பார்வை. மழைப்பாடல் பற்றி கேசவமணி எழுதிய விமர்சனம் ‘மழை இசையும் மழை ஓவியமும்’ அவரது இணையதளத்தில் வெளிவரும் தொடரின் முதல் பகுதி வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும் மழையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63250

ஓலைச்சிலுவை -கேசவமணி

“அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகளக் கண்டு வளர்ந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டுக் கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாமல் சாகணுமின்னு அந்த தெய்வங்க நினைச்சா அப்படி நடக்கட்டு” என்று சிறுவனின் அம்மா, இறந்துபோன தன் கணவனை விட்டுச் செல்லுவது நமக்கு நியாயமாகவே படுகிறது. ஓலைச்சிலுவை பற்றி கேசவமணி அறம் அனைத்துவிவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62991

வலியிலிருந்து தப்ப முடியாத தீவு

நான் காசர்கோட்டில் பணியாற்றியபோது புணிஞ்சித்தாய என்ற ஓவியர் ஒருவர் மங்களூரில் இருந்தார். கர்நாடகத்தில் பிரபலமான நவீன ஓவியர். நேரடியாக ஓவியம் வரைந்து விளக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்காக அவர் காசர்கோடு வந்திருந்தார். நான் உயிரோடு ஒரு நவீன ஓவியரை அப்போதுதான் பார்த்தேன் அவர் வரையும் விதம் ஆச்சரியமானது. முதலில் திரையில் வண்ணங்களை அள்ளி வீசுவார். அவை வழிந்துவர வர அவற்றை கத்தியால் நீவி ஓவியமாக்குவார். தற்செயலும் அவரும் சேர்ந்து வரையும் ஓவியங்கள். தரையில் அமர்ந்து நீர்வண்ண ஓவியம் வரைந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62687

காமமும் காடும்

நாவலின் இரண்டு சரடுகள் காடு, காதல் (காமம் என்றும் பொருள் கொள்ளலாம்). கிரிதரனை இரண்டும் சேர்ந்து அடிக்கின்றது. கிரிதரனின் காதல் காமம், இரண்டும் காட்டில் பொங்கி வழிகின்றது. காமம் தரும் குற்றவுணர்ச்சி, காதல் தரும் பரவசம் இரண்டிற்குமிடையில் சிக்கி விழிக்கும் ஒரு சராசரி. எளிதில் உணர்ச்சி வசப்படும் பாத்திரம். குளிக்கும் நீலியை காணும் அவனிடம் எழுவது காமமல்ல காதல், வெறித்தனமான காதல் ரெங்கசுப்ரமணி விமர்சனம் காடு அனைத்து விமர்சனங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/61864

காந்தியும் தலித்துக்களும்

மிகையான எளிமைப்படுத்துதலின் சாத்தியம் இருந்தாலும், காந்தியமும் இந்திய மார்க்சியமும் தலித்துகளின் பிரச்சனைகளை நிலம் மற்றும் அற மதிப்பீடு சார்ந்தே எதிர்கொள்கின்றன என்பதே என் வாதம். இவை ஒன்றையொன்று சாராமல் தனித்து இருக்கவில்லை டி.ஆர்.நாகராஜ் எழுதிய கட்டுரை. காந்தி டுடே இணைய இதழில்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63046

அரசியலின் அறம்

அரசியலில் உள்ளவனின் அறம் என்பது என்ன? தனிமனிதனாக அவன் செய்யக்கூடியது என்ன, தனிமனித தர்மம் என்பது அரசியலில் வந்த உடன் மாறக்கூடுமா? தனிமனித அறமும் அரசியல் தர்மமும் முரண்படும் போது ஒருவன் என்ன செய்யக்கூடும்? பல கேள்விகள். ரெங்கசுப்ரமணி பின் தொடரும் நிழலின் குரல் பற்றி பின் தொடரும் நிழலின் குரல் அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/61862

ஆழி- கடலூர் சீனு

ஒரு முறை கரூரில் சித்தி வீட்டில் தங்கி இருந்தேன். சித்தியின் மாமியார் தீவிரப் பகுத்தறிவுவாதி பரபரப்பாக அன்று நக்கீரன் இதழில் வெளிவந்திருந்த தொடரின் ஒரு பகுதியைக் காட்டினார். அக்னிஹோத்ரம் எதோ ஒரு ஆச்சாரியர் எழுதிய ஹிந்துமதம் எங்கே செல்கிறது எனும் தொடரில் வேதங்களில் வரும் அஸ்வமேதம் அதன் சடங்குகள் குறித்த பகுதி. முகத்தில் ‘’பாத்தேளா! அவாளே ஒத்துனுட்டா. அவாள்லாம் அக்யூஸ்ட்தான்’’ எனும் பாவனை. நான் புன்னகையுடன் சொன்னேன் ‘’பாட்டி எந்தக் காரணமும் இல்லாமல் மனித மனத்தால் பிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62278

நகரும் கற்கள்

என் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை அவ்வப்போது வாசிப்பதுண்டு. அறிவியலை அறிமுகம் செய்வதற்குரிய நேரடியான, சுருக்கமான , புறவயமான மொழி. தகவல்களாலேயே சுவாரசியத்தை உருவாக்கக்கூடிய திறன். பாலைவனத்தில் கற்கள் நகர்வது பற்றிய இந்தக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. அந்தத் தகவல்கள் மட்டும் அல்ல, அந்த நிலப்பரப்பு. இந்த விளக்கமெல்லாம் மானுட மனதில் உதிக்காத பதினான்காம் நூற்றாண்டின் செவ்விந்தியர்கள் அந்த நிகழ்வை எப்படிப்புரிந்துகொண்டிருப்பார்கள் என நினைத்தேன். மனம் பரவசம் அடைந்தது

Permanent link to this article: https://www.jeyamohan.in/61277

யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம் ஒரு மதிப்புரை

சில புத்தகங்கள் ஒரு சில பெயர்களைப்போலே நம் ஞாபக அடுக்குகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும், இப்போதில்லை, இப்போதில்லை என்று சில சந்திப்புக்களைத் தவிர்ப்பதைப்போல, சில புத்தகங்களை கையிலெடுத்து விட்டு இப்போதில்ல்லையென தள்ளிவைத்து விட்டு அடுத்த அடுக்குக்கு கை தாவும், ஆனாலும் சதா எண்ணத்தில் தங்கிய படியே இருக்கும். சிறு வயதில் உணவில் மிகவும் பிடித்த காய் கறியை கடைசியாக தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடுவோமே அது போல் ஒரு நீண்ட காத்திருப்புக்கு நம்மை தயார் செய்துகொள்ள வைக்கும். அப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61424

Older posts «

» Newer posts