Tag Archive: விமரிசகனின் பரிந்துரை

”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”

‘நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது’– மிகப்பழைமையான சொலவடை இது. சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது. இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. ‘அம்மையை அடித்தாலும் அதிலிமிருக்கும் இரண்டு பக்கம்’ என்று மலையாளப் பழமொழி. அப்படியானால் நியாயம் என்றும் தர்மம் என்றும் ஒன்றுமில்லையா என்ன? உண்டுதான். கலைஞன் எப்போதுமே நீதியின்குரல்தான். நீதி என்பது பலவகை. அன்றாட உலகியல் நீதி ஒன்று நம் கண்ணுக்குப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மண்ணில் மனிதரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17235

பிரயாகை- கேசவமணி

கேசவமணி பிரயாகை பற்றி எழுதத்தொடங்கியிருக்கும் விமர்சனத்தொடர். அவரது இணையதளத்தில் வெண்முரசு விவாதங்கள் அனைத்தும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/75429

வெண்முரசு- சுயராஜ்யா கட்டுரை

ஜடாயு சுவராஜ்யா இதழில் வெண்முரசு பற்றி எழுதிய கட்டுரை Venmurasu: A sublime literary masterpiece in the making வெண்முரசு அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/65759

நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்

சர்தார் படேல் பற்றி பி ஏ கிருஷ்ணன் எழுதியிருக்கும் ஆணித்தரமான கட்டுரை இது. இன்றைய சூழலில் மிக முக்கியமான குரலாக ஒலிக்கிறது. எத்திசையிலும் வெறுப்புக்குரல்களே ஒலிக்கும் சூழல் இது. வெறுப்பு வெறுப்புக்குப் பதிலாகிறது. முற்போக்கு என்றும் ஜனநாயகம் என்றும் பாவனைகாட்டி ஒருசாரார் ஒட்டுமொத்த இந்தியமரபையே, சிந்தனையையே கீழ்த்தரமாக வசைபாடுகிறார்கள். காலை எழுந்ததுமே சாபம் போட்டுக்கொண்டு பேசத்தொடங்குகிறார்கள். எதிர்வினையாக அத்தனை மதச்சார்பற்ற- ஜனநாயக நம்பிக்கை கொண்ட ஆளுமைகளையும் அடித்து நொறுக்க இந்துத்துவர் முயல்கிறார்கள். நியாயம், சமநிலை பற்றி எவருக்குமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64530

ஆகவே கொலைபுரிக!- கடிதம்

சமீபத்தில் தங்களின் ‘ஆகவே கொலை புரிக’ நூலை படித்தேன். [கயல் கவின் பதிப்பக வெளியீடு] குடும்ப வரலாறு குடும்ப வரலாற்றை அனைவரும் தெரிந்துவைத்துருக்க வேண்டும் என்று முன்பே எங்கே படித்திருக்கிறேன். அனேகமாக இது எந்தக் குடும்பத்திலும் இல்லை எனலாம். அதிகபட்சம் இவருடைய மகன்/மகள் இவர் என்று பெயர்களை மட்டும் குறித்துவைத்திருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம், எப்படித் திரட்டலாம் என யோசித்ததில் விக்கிபீடியா போன்ற இணையதளம் அமைத்தால் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. குடும்பத்தின் வாரிசிகள் உலகெங்கிலும் எங்கிருந்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/64121

அகமறியும் ஒளி

  பார்வை என்பது என்ன? ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான். அது இல்லையேல் ஒலி. அது இல்லையேல் தொடுகை. மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி இல்லை. அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின் கூர்மையையும், நிதானத்தையும் நம்பியே உள்ளது. பார்வையிழந்த ஒருவருடைய உலகம் நுண்ணிய தகவல்களால் மட்டுமே நாமறிவதில் இருந்து வேறுபட்டது. பிறவியிலேயே பார்வையிழந்த ஒருவர் ஒருபோதும் இந்த வேறுபாட்டை அறிய முடியாது. ஆனால் பார்வை இருந்து பின் அதை இழந்து பலவருடங்கள் வாழ்ந்து மீண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6142

பதிற்றுப்பத்து ஆங்கிலத்தில்

செல்லையா மிகக் கடினமான வார்த்தைகளையோ தொடரமைப்புகளையோ தேடுவதில்லை. அது மட்டுமல்ல, சிறுசிறு வாக்கியங்களாக மூலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு தமது மொழிபெயர்ப்பை அமைக்கிறார். சான்றாக, இங்கு பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பை நோக்கலாம். அதில், அரசியின் மாளிகைக்குக் கதவுகளை எவ்விதம் அமைக்கிறார்கள் என்பதை விளக்கவரும் பகுதிகளை எவ்விதம் மொழிபெயர்க்கிறார் என்பதைப் பார்க்கலாம். செல்லையா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள பதிற்றுப்பத்து நூலுக்கான க.பூரணசந்திரனின் மதிப்புரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/62344

வாழ்க்கையை காட்டுவதும் வாழ்க்கையை ஆராய்வதும்

இந்நாவலைப்படிக்க நான் முன்பு பலமுறை மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுவிட்டன. எனவே நாவலின் பாதகமான அம்சங்களாக எதையெல்லாம் கருதுகிறோமோ அதையெல்லாம் சாதகமாக எண்ணிக்கொள்ளாமல் இந்நாவலுக்குள் நுழைய முடியாது.முதலில் கதாபாத்திரங்களை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கலைத் தாண்டியதுமே நாம் நாவலுக்குள் அடியெடுத்துவைத்தவர்களாக ஆவோம். தஸ்தயேவ்ஸ்கி வாழ்க்கையைச் சொல்லவில்லை வாழ்க்கையை ஆராய்கிறார் என்று புரிந்துகொண்டால் மட்டுமே அவரை நெருங்கமுடியும் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்களைப் பற்றி கேசவமணி எழுதிய பதிவு.

Permanent link to this article: https://www.jeyamohan.in/63290

ஓர் இந்து சமூகம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு, இந்தியரல்லாத பண்டைய இந்துச்சமூகங்களுள் இன்றும் உயிர்ப்புடன் வாழும் இரண்டு சமூகங்களுள் ஒன்றான பாலமொன் சாம் சமூகத்தைப் பற்றிய கட்டுரை. ***THE CHAM HINDUS OF VIETNAM ARE one of only two surviving non-Indic indigenous Hindu peoples in the world with a culture dating back thousands of years ***Hinduism continues to thrive in India, yet today it is only among …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60982

கன்யாகுமரி

பிரவீணா நாவல் முழுக்க வருகிறாள். ஒரு குண்டூசியின் நுணி போல பளபளக்கிறாள். அவள் பேசும் சொற்கள் ஒவ்வொன்றிலும் அதே குண்டூசி நுனியின் கூர் ஜொலிக்கிறது. அவனை அறியாமல் அவன் மனதை முழுமையாக அறிகிறாள். வாத விவாதங்களில் அவனை வெல்ல வைப்பதாக விட்டுக்கொடுத்து ஒவ்வொரு கணத்திலும் அவனை அவள் வென்று வருகிறாள் கன்யாகுமரி விமர்சனம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/62019

Older posts «