Tag Archive: விப்ரர்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74

[ 21 ] நான்கு நாட்கள் துரியோதனன் இளகவில்லை. கர்ணன் “நீங்கள் சென்று ஒருமுறை நேரில் கேளுங்கள், அரசே. உங்கள் தந்தை என அவர் என்றும் நெகிழ்வுடனேயே இருந்திருக்கிறார். இன்று நீங்கள் மானுடனாக வாழ்வதும் அவரது கருணையினாலேயே” என்றான். “அந்நாட்கள் கடந்துசென்றுவிட்டன… எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கப்போகிறார்? இருபது நாட்களா? களிறு உணவில்லாது முப்பது நாட்களிருக்கும் என்கிறார்கள். முப்பது நாட்கள் பார்க்கிறேன். எரிமேடையில் உடல் அனல்கொண்ட பின்னர் விடுதலை பெறுகிறேன்” என்றான். “ஆனால் அவர் என் தந்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88165

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73

[ 18 ] இரவெல்லாம் கர்ணன் துரியோதனனுடன் அவனது மஞ்சத்தறையில் துணையிருந்தான். ஒருகணமும் படுக்க முடியாது எழுந்து உலாவியும், சாளரத்தினூடாக இருள் நிறைந்த வானை நோக்கி பற்களை நெரித்து உறுமியும், கைகளால் தலையை தட்டிக் கொண்டும், பொருளெனத்திரளா சொற்களை கூவியபடி தூண்களையும் சுவர்களையும் கைகளால் குத்தியும் துரியோதனன் கொந்தளித்துக் கொண்டிருந்தான். இரும்புருக்கை குளிரச்செய்வதுபோல படிப்படியாக அவனை மெல்ல கீழிறக்கிக் கொண்டு வந்தான் கர்ணன். ஒரு போர் அத்தருணத்தில் எப்படி பேரழிவை கொண்டுவரக்கூடுமென்று சொன்னான். “அரசே, இப்போரில் நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88154

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 71

[ 15 ] பீஷ்மர் விதுரர் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே கூச்சலிடத் தொடங்கிவிட்டார். கையிலிருந்த அம்பை வீசிவிட்டு அவரை நோக்கி விரைந்து காலடி எடுத்துவைத்து “என்ன சொல்கிறாய்? மூடா! இதையா அந்த முடவன் உன்னிடம் சொல்லியனுப்பினான்? என்னவென்று நினைத்தான்? அஸ்தினபுரியின் அரசகுலத்துடன் விளையாடுகிறானா அவன்?” என்று கூவினார். “இல்லை, இது ஒருபோதும் நிகழப்போவதில்லை. குருவின் குருதிவழிவந்தவர்கள் களிமகன்கள் போல் சூதாடி இழிவுசூடமாட்டார்கள்” என்றார். “அப்படியென்றால் போர்தான். நான் அனைத்து வழிகளையும் எண்ணிவிட்டேன்” என்றார் விதுரர். பீஷ்மர் தோள்தளர “ஆனால், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88130

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67

[ 8 ] துரியோதனன் கர்ணனுடன் தனியாக வருவதை படகில் ஏறியபின்னரே  விதுரர் அறிந்தார். பறவைச்செய்திகள் வழியாக ஒற்றர்களுக்கு செய்தி அறிவித்து இருவரும் வரும் பாதையை கண்காணிக்க வைத்தார். புறாக்கள் படகிலேயே திரும்பி வந்து அவர்களின் பயணத்தை காட்டின. விரித்த தோல்வரைபடத்தில் செந்நிற மையால் இருவரும் வரும் வழியை அவர் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். கௌரவர்கள் படகில் ஏறிய போதே தனிமையும்  துயரும் கொண்டிருந்தனர். இந்திரப்பிரஸ்தத்திற்குள் நுழைந்த போதும் ராஜசூய வேள்வியின் போதும் இருந்த கொண்டாட்டமும் சிரிப்பும் முழுமையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/88066

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 47

[ 7 ]  இசைச்சூதர் விதுரரை ஓரவிழியால் நோக்கியபின் விழிபரிமாறி விரைந்து பண்ணுச்சத்தை அடைந்து, குடம் ரீங்கரிக்க விரல் நிறுத்தினர். பெருமூச்சுடன் கலைந்து கைகளால் பீடத்தை தட்டியபின் “நன்று” என்றார் திருதராஷ்டிரர். “இனிது! வசந்தத்தில் வண்டுகள் சிறகுகளால்தான் பாடமுடியும்.” பெருமூச்சுவிட்டு “பறத்தலும் பாடுவதும் ஒன்றேயான ஒரு வாழ்க்கை… நன்று” என்றார். மேலும் பெருமூச்சுடன் “விதுரா, வசந்தங்கள் வந்து செல்கின்றன. எண்ணி அளிக்கப்பட்டிருக்கின்றன மானுடருக்கு நாட்கள்” என்றார். “வணங்குகிறேன், மூத்தவரே” என்றார் விதுரர். சூதர்கள் எழுந்து ஒவ்வொருவராக ஓசையின்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87647

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 46

[ 4 ] இரவு முழுக்க மஞ்சத்தில் துயிலாதிருந்து மறுநாள் காலையை கசந்த வாயுடனும் எரியும் விழிகளுடனும் சோர்ந்த உடலுடனும் எதிர்கொண்ட விதுரர் முதல் புள் குரல் கேட்டதுமே நீராட்டறை நோக்கி சென்றார். ஆடையணிந்து கொண்டிருக்கையில் சுருதை அவர் அறைவாயிலில் வந்து நின்றாள். அவர் திரும்பாமல் “இன்று அவை கூடுகிறது” என்றார். காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. இருவரும் இரு தனியர்களென ஆகிவிட்டதுபோல. விழிமுட்டுகையில் ஒருவர் அறிந்த பிறரது ஆழம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87613

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37

 பகுதி நான்கு : கூற்றெனும் கேள் – 14 அறைவாயிலில் நின்ற பிரமோதர் மெல்லிய குரலில் “அரசே” என்றார். அணியறையிலிருந்து முழுதணிக் கோலத்தில் வந்த கர்ணன் அவரை நோக்கி புன்னகைத்து “பிந்திவிட்டதா பிரமோதரே?” என்றான். அவர் புன்னகைத்து தலைவணங்க “செல்வோம்” என்றபடி தலை நிமிர்ந்து கைகளை வீசி இடைநாழியில் நடந்தான். அவன் காலடிகள் அரண்மனையின் நெஞ்சுத் துடிப்பென எதிரொலி எழுப்ப படிகளில் இறங்கி கூடத்தை அவன் அடைந்தபோது மூச்சிரைக்க தொடர்ந்து வந்த பிரமோதர் “பேரரசரின் சிற்றவையில் தங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83390

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் – 7 திருதராஷ்டிரரின் அறையை நெருங்கியபோது மெல்ல துரியோதனன் நடைதளர்ந்தான். “யாதவனே, உண்மையில் எனக்கு அச்சமாகவே இருக்கிறது” என்றான். “அஞ்சவேண்டாம், நான் இருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “அவரை கணிப்பது மிகவும் கடினம் யாதவனே” என்றான் யுதிஷ்டிரன். “நானும் அதனாலேயே அஞ்சுகிறேன்.” கிருஷ்ணன் ”நாம் சென்றுகொண்டிருப்பது இக்குடியின் மூத்தவரை சந்திப்பதற்காக…” என்றான். பூரிசிரவஸ் “அவர் இளவரசர்களை தாக்கினாரென்றால் நாமனைவரும் இணைந்தாலும் அவரை தடுக்க முடியாது” என்றான். “அஞ்சவேண்டாம். நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். நான் மட்டுமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/74424

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 73

பகுதி 15 : யானை அடி – 4 திருதராஷ்டிரரின் அறைநோக்கி செல்லும்போது துரியோதனன் “தந்தையை நான் சந்தித்தே நெடுநாட்களாகின்றது” என்றான். துச்சாதனன் “அவர் அவைக்கு வருவதில்லை” என்றான். துரியோதனன் “ஆம், சிறிய அன்னை சம்படையின் இறப்புடன் அவர் மிகவும் தளர்ந்துவிட்டார். அவளுடைய எரியூட்டல் முடிந்த அன்று மாலை தொடங்கிய உடல்நடுக்கம் பன்னிருநாட்கள் நீடித்தது” என்றான். சௌனகர் “ஆனால் சிறிய அரசியைப்பற்றி அவர் அதற்கு முன்னும் பின்னும் ஒரு சொல்கூட பேசியதில்லை” என்றார். அச்செய்தியை புதியதாக கேட்பவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73919

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 56

பகுதி 12 : நச்சுமலர்கள் – 1 திருதராஷ்டிரரின் அணுக்கச்சேவகரான விப்ரர் மெல்ல கதவைத்திறந்து கிருஷ்ணனையும் சாத்யகியையும் அவர்களை அழைத்துவந்த கனகரையும் தன் பழுத்த கண்களால் பார்த்துவிட்டு ஆழ்ந்தகுரலில் “யாதவர் மட்டும் வருவதாகத்தான் அரசர் சொன்னார்” என்றார். “நான் என் மருகனுடன் வந்துள்ளதாக சொல்லும்” என்றான் கிருஷ்ணன். விப்ரர் மூச்சு ஒலிக்கத்திரும்பி கதவை மூடிவிட்டு சென்றார். மூடியகதவின் பொருத்தை நோக்கியபடி அவர்கள் காத்து நின்றனர். மீண்டும் கதவு திறந்து விப்ரர் “உள்ளே செல்லுங்கள்” என்றார். கிருஷ்ணனுடன் அறைக்குள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73386

Older posts «