Tag Archive: வினதை

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-1

 தோற்றுவாய் வேசரநாட்டில் கருநீல நீரோடும் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் நாகர்குலத்து மூதன்னையான நித்யை அந்தியில் குடில் முன்பு மண் அகலை ஏற்றிவைத்து, தன் குலத்து மகள் விஷஹாரியின் வயிற்றில் பிறந்த சிறுமகள் மானசாதேவியை மடியில் வைத்துக்கொண்டு கதைசொல்ல அமர்ந்தாள். இளமகள் நித்யையின் கைகளைப்பற்றி தன் வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு “உம்” என்றாள். நித்யை ‘ம்ம்ம்’ ‘ம்ம்ம்’ என முனகிக்கொண்டு முன்னும்பின்னும் ஆடிக்கொண்டிருந்தாள். அந்த முனகலோசை அலையடித்துச் சுழன்றது. அதனூடாக முதுமகள் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தாள். நித்யை அந்த முரலலோசையை தூண்டிலாக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116121

வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49

பகுதி ஆறு : விழிநீரனல் – 4 முதுமகள் கர்ணனிடம் கைநீட்டி “வள்ளத்தில் ஏறு” என்றாள். கர்ணன் அதன் விளிம்பைத்தொட அதிலிருந்த அனைவரையும் சரித்துக் கொட்டிவிடப்போவது போல் அது புரண்டது. துடுப்புடன் இருந்த நாகன் சினத்துடன் “தொடாதே! இது ஆழமற்ற வள்ளம். படகல்ல” என்றான். கர்ணன் கைகளை எடுத்துக்கொண்டான். “இன்னொரு வள்ளம் மறுபக்கம் இருந்து பற்றிக்கொண்டால் மட்டுமே உன்னால் இதில் ஏறமுடியும்” என்றான் நாகன். கர்ணன் துடுப்பை வைத்துவிட்டு தன் படகில் எழுந்து நின்றான். “முட்டாள், என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/83773

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 2 காட்டின் ஒலிகள் சூழ குந்தியின் கதையை கேட்கையில் காடே அதை சொல்லிக்கொண்டிருப்பதாக அர்ஜுனன் நினைத்தான். பீமன் பெருமூச்சுடன் மெல்ல அசைந்து தலைக்குமேல் வைத்த கையை மாற்றிக்கொண்டான். கூகையின் குரலில் காடு மெல்ல விம்மியது. ஈரக்காற்று ஒன்று கடந்து செல்ல, நீள்மூச்செறிந்தது. இருளுக்குள் நீர்த்துளிகள் சொட்டும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பின்பு இலைகள் மேல் மீண்டும் மழை சொரியத்தொடங்கியது. “அந்த இரண்டாவது முட்டை?” என்று சகதேவன் துயில் கனத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66434

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48

பகுதி பதினொன்று : காட்டின் மகள் – 1 குந்தி மூச்சிரைத்தபடி மண்ணில் விழுவதுபோல அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு “என்னால் இனிமேல் நடக்கமுடியுமென்று தோன்றவில்லை” என்றாள். தருமன் “நாம் இங்கே தங்கமுடியாது. விடிவதற்குள் கங்கையைக் கடந்து மறுபக்கம் விரிந்திருக்கும் காட்டுக்குள் சென்றுவிடவேண்டும். காலையொளியில் மலையுச்சிகளில் இருந்து நம்மை எவரும் பார்க்கமுடியும்” என்றான். “என் உடல் நீண்ட பயணத்தை தாங்குமெனத் தோன்றவில்லை தருமா” என்றாள் குந்தி. பீமன் முன்னால் வந்து “நான் உங்களை தூக்கிக் கொள்கிறேன்” என்றான். குந்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66368

‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 49

பகுதி பத்து : வாழிருள் [ 1 ] ஆடி மாதம் வளர்பிறை ஐந்தாம்நாள் ஜனமேஜயனின் சர்ப்பசத்ரவேள்வி முடிந்து ஒருவருடம் நிறைவுற்றபோது ஆஸ்திகன் வேசரநாட்டில் கிருஷ்ணை நதிக்கரையில் புஷ்கரவனத்தில் தன் குலத்தினரின் கிராமத்திற்குள் நுழைந்தான். அவனுடைய வருகையை முன்னரே நெருப்பில் கண்டிருந்த மானசாதேவி குடில்முற்றத்தில் நாகபடக்கோலம் அமைத்து அதன்நடுவே நீலநிறமான பூக்களால் தளமிட்டு ஏழுதிரியிட்ட விளக்கேற்றி வைத்து அவனுக்காகக் காத்திருந்தாள். அவன் குலத்தைச் சேர்ந்த அன்னையரும் முதியவரும் அவனைக்காத்து ஊர்மன்றில் கூடியிருந்தனர். ஓங்கிய ஆலமரத்தின் மீதேறி அமர்ந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/45548