Tag Archive: விந்தன்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-53

போர் தொடங்கியதுமே அது செல்லும் திசை குறித்த உள்ளுணர்வொன்று உருவாவதை விந்தன் முன்னரே கண்டிருந்தான். முதல்நாள் முரசொலியுடன் கௌரவப் படைகள் எழுந்துசென்று பாண்டவப் படைகளை அறைந்தபோது அன்று அருங்கொலை நிகழப்போகிறது என்று அவன் அகம் படபடப்புடன் உணர்ந்தது. அன்று மற்றவர்கள் போரெனும் உணர்வே அற்றவர்கள்போல, ஒரு திருவிழாவின் தொடக்கமென்பதுபோல நகையாட்டும் களிச்சொற்களும் கூச்சல்களுமாக கிளர்ச்சி கொண்டிருந்தனர். போர் தொடங்கிய இரண்டு நாழிகைக்குள்ளாகவே பீஷ்மர் எதிரணியின் இளவரசர்களை கொன்றுகுவித்து முன்சென்ற செய்திகள் வரவரத்தான் ஒவ்வொருவரும் போரென்றால் என்னவென்ற உணர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114472

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52

அவந்தி நாட்டு அரசன் விந்தன் தன் தேரில் கௌரவப் படையின் எட்டாவது அக்ஷௌகிணியின் இரண்டாம் நிரையில் வில்லுடன் நின்றிருந்தான். சற்று அப்பால் அவனுடைய இரட்டையனும் அவந்தியின் இணையரசனுமாகிய அனுவிந்தன் அவனைப் போலவே கவசங்கள் அணிந்து, அவனுடையதே போன்ற தேரில் நின்றிருந்தான். விந்தன் அனுவிந்தனைவிட ஓரிரு நொடிகளே அகவையில் முந்தியவன். அந்த ஒரு நொடி அவன் அன்னையால் அவனுக்கு சொல்லப்பட்டது. உலகுக்கும் அவளால்தான் அது சொல்லப்பட்டது. தன் உள்ளத்தால் அவன் அதை பெருக்கிக்கொண்டான். நாழிகையும் நாளும் ஆண்டும் என்றாக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114449

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50

கோசல நாட்டரசன் பிருஹத்பலன் சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் தயங்கி நின்றான். அவனருகே வந்த தேர்வலன் “அரசே” என்றான். அவனிடம் “செல்க!” என கைகாட்டிவிட்டு அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வருவதற்காகக் காத்து நின்றிருந்தான். அவர்கள் ஒருவர் இருவராகும் விழிமயக்கு என அருகணைந்து தலைவணங்கியதும் “நாம் பேசவேண்டும்” என்றான். விந்தன் “தனியாகவா?” என்றான். “ஆம், இங்கே பேச இயலாத சில உள்ளன” என்றான் பிருஹத்பலன். “நம் குடிலுக்குச் செல்வோம்… கவசமணிய இன்னும் பொழுதுள்ளது” என்றான் விந்தன். விந்தன் பேசுகையில் அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114331

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49

பகுதி ஏழு : அலைகளில் திரள்வது – 7 இளைய யாதவர் அவையை நோக்கியபடி அசையாமல் நின்றிருந்தார், காற்றிலா இடத்தில் நின்றிருக்கும் சுடர் என. பானுமதி அசலையிடம் “மீண்டும் ஒருமுறை அறிவிக்க சொல்… அவர்கள் அவர் குரலை செவிமடுக்காமலிருக்கிறார்கள்” என்றாள். அசலை “அதைத்தான் கணிகர் விரும்பியிருக்கிறார். அவர்களுக்கு சூதன் கீழ் படைகொண்டு நிற்பதைப்பற்றி மட்டுமே இப்போது கவலை” என்றாள். பானுமதி “ஆனால் அவர் மேலும் முதன்மையான தூதுடன் வந்திருக்கலாம் அல்லவா?” என்றாள். அசலை புன்னகைத்தாள். இளைய யாதவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/106302

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 81

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 6 ஒரு சொல்லென எழுந்து அவளை சூழ்ந்துகொண்டான். நீலம் என்பது நிறமல்ல. பீலி என்பது நோக்கல்ல. ஆழி என்பது வடிவல்ல. சங்கமென்பது பொருளல்ல. குழலிழிந்து இப்புவிக்குவளை நிறைக்கும் இசை என அவள் அறிந்தாள். விழிப்பென்பதும் துயிலென்பதும் இருவகை இசையே என்று கண்டாள். இருப்பென்பதும் இன்மையென்பதும் அவ்விசையின் எழுச்சியும் வீழ்ச்சியுமே. ஆதலென்பதும் அழிதலென்பதும் அலைவளைவுகளே. அவளிருந்த இடமெங்கும் இசை நிறைந்திருந்தது என்று உணர்ந்தாள் செவிலி. அவள் கைபட்ட வெள்ளிக்கலங்கள் தங்களை மீட்டிக்கொண்டன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77851

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 80

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 5 மித்திரவிந்தை பிறந்த அவ்வருடம்தான் உஜ்ஜயினியை தனிநாடாக தங்களுக்கு பிரித்தளிக்க வேண்டுமென்று கோரி விந்தரும் அனுவிந்தரும் குலப்பெருமன்றை கூட்டினர். அவர்களின் அன்னையும் பட்டத்தரசியுமான மாளவஅரசி பார்கவியின் அணுக்கரான குலமூத்தார் சுருதகிருஷ்ணர் அவையில் எழுந்து ஜெயசேனர் யாதவ அரசியை மணந்ததனால் குலமிழந்து பெருமை குறைந்துவிட்டார் என்று அவரும் அவர் குலமும் எண்ணுவதாக அறிவித்தார். அவரை ஆதரித்து மூன்று குலத்தவர் கூச்சலிட்டனர். அதை எதிர்த்து பிறர் கூச்சலிட அரசி சினத்துடன் எழுந்து தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77842

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 79

பகுதி பன்னிரண்டு : இமையாநீலம் – 4 சிறகசைக்காமல் விண்ணுக்குச் சுழன்றேறும் இரு பருந்துகள் என நகர்மையத்தில் அமைந்த யாதவரின் அரண்மனை நோக்கி புரிசுழல் சாலையில் ஏறிச்சென்றபோது சாத்யகி மெல்ல மெல்ல ஒலி அவிந்து இன்மை என்றாகிவிட்டிருப்பதை திருஷ்டத்யும்னன் உணர்ந்தான். முன்னால் சென்றபோது தொடர்ந்து வரும் புரவியின் மேல் சாத்யகி இல்லையென்றே தோன்ற துணுக்குற்று இருமுறை திரும்பி நோக்கினான். ஒருமுறை சாத்யகியின் விழிகளை சந்தித்தபோது அவை தன்னை அறியவில்லை என்றுணர்ந்து திரும்பிக்கொண்டு அறியா அச்சம் ஒன்று தன்னுள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/77833