Tag Archive: விசும்பு

விசும்பு மதிப்பீடு

    புனைவுகள் எப்போதும் வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி சாராம்சப்படுத்துவதன் வாயிலாக வாழ்வின் பொருளை அல்லது பொருளின்மையை உணர்த்துவதாக அமைகிறவை. அறிதல்களுக்கான கருவிகள் பெருகப் பெருக புனைவுகளுக்குள்ளும் அக்கருவிகளின் தாக்கம் பிரதிபலிக்கவே செய்யும். மதம், தத்துவம், வரலாறு, மானுடவியல், உளவியல் எனப் பல துறைகளின் தாக்கம் புனைவுகளில் பிரதிபலிக்கும் போதுதான் ஒரு மொழியின் புனைவிலக்கியப் பரப்பு வளமானதாகவும் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்கும். அவ்வகையில் தமிழில் குறைவாக எழுதப்படும் புனைவு வகைமையான அறிவியல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/126544/

மின் தமிழ் பேட்டி 2

10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/69818/

விரிவெளி

மனிதன் புனைகதைகளை உருவாக்க ஆரம்பித்த காலம்முதலே புறவுலகை மாற்ற ஆரம்பித்திருக்கிறான். நான் இப்படிக் கற்பனைசெய்துகொள்வேன். கருப்பைக்குள் வளரும் கரு கருப்பையைப்பெரிதாக்குவதுபோல. மனித அகம் முடிவற்றது. அதன் சாத்தியங்கள் எண்ணற்றவை. ஆனால் வெளியே உள்ள உலகின் விதிகளுக்கேற்ப மட்டுமே அது தன்னை நிகழ்த்தியாகவேண்டியிருக்கிறது. இயற்பியல் விதிகளாலான உலகம். காரணகாரிய உறவின் சங்கிலியால் கட்டப்பட்ட உலகம். ஆதிசங்கரரின் உவமையை சொல்லப்போனால் நீர் வயலின் வடிவம் வழியாகவே தன்னை முன்வைக்கமுடிகிறது. புனைகதைகள் வழியாக அந்த எல்லையைத் தாண்டமுயல்கிறான் மனிதன். அதற்காகவே தேவதைக்கதைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/41888/

கடிதங்கள், இணைப்புகள்

கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும், நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும், உயிர்த் தேனையும், லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது… நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை…. மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்… காண்க; இணைப்பு மீனாட்சியின் பொன்விழா http://www.masusila.com/2010/11/blog-post_28.html — எம்.ஏ.சுசீலா,(M.A.Susila) புது தில்லி (தமிழ்ப்பேராசிரியர்-ஓய்வு,பாத்திமாக்கல்லூரி,மதுரை) D II 208 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10073/

நமது அறிவியலும் நமது புனைகதையும்

தமிழில் வேறெந்த அறிவியல்புனைகதைகளையும்பற்றி இத்தனை கவனம் குவிக்கப்பட்டதில்லை. இவ்வளவு நீண்ட தொடர் விவாதம் நிகழ்ந்ததில்லை.

Permanent link to this article: https://www.jeyamohan.in/7605/