Tag Archive: வால்மீகி

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35

பீமன் விசையுடன் நடந்து பாய்ந்து புரவியிலேறி அதை நாற்குளம்போசையுடன் விரையச்செய்தான். அவன் உளமறிந்ததுபோல் புரவி புதர்கள் மண்டிய பாதையில் தாவிச் சென்றது. சிறு ஓடைகளை தாவிக் கடந்தது. அதன் குளம்புகளில் பட்டு கூழாங்கற்கள் பறந்தன. பீமன் கடிவாளத்தை ஒரு கையால் பற்றியபடி பற்களைக் கடித்து உடற்தசைகளை இறுக்கி அமர்ந்திருந்தான். அங்கிருந்து விலகி செல்லச் செல்ல அவன் மெல்ல ஆறுதல் அடைந்தான். தன் அகம் அத்தனை அஞ்சியிருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான். எதன் பொருட்டு அஞ்சினேன் என தன்னையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121661/

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33

தூமவர்ணி அரைத்துயிலில் என விழிசொக்கி அமர்ந்திருந்த குட்டிக்குரங்குகளிடம் சொன்னது “சிதல்புற்றின் முன் அமர்ந்திருந்த கபீந்திரரிடம் வால்மீகி தன் கதையை சொன்னார். கபீந்திரர் அச்சொற்களை தன் விழிகளாலும் வாங்கி உள்ளமென ஆக்கிக்கொண்டார். ஆகவே இக்கதை இந்நாள் வரை இங்கே திகழ்கிறது. என்றும் திகழும்.” உண்மையில் ஒவ்வொரு அடிக்கும் நான் நம்பிக்கை இழந்துகொண்டிருந்தேன். அவ்வாறுதான் அது முடியுமென்றும் தோன்றியது. ஆனால் என் குடியின் எல்லை கடந்து நான் சென்றதும் என்னை நோக்கி களிக்கூச்சலிட்டபடி ஓடிவந்த மைந்தரைக் கண்டதும் நானே நூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121609/

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32

“இறுதி வெறுமை என்பது சாவு. ஆனால் அது வாழ்வில் ஒருமுறைதான் நிகழவேண்டும் என்பதில்லை. அது நிகழ்ந்து மீள்பிறப்பெடுத்தோர் முன்னிலும் ஆற்றல்கொண்டவர்கள் ஆகிறார்கள். தெய்வங்களுக்கு நிகரானவர்களாக நிலைகொள்கிறார்கள். ஆழுலகத்து தெய்வம் அல்லது விண்ணொளிகொண்ட தேவன். நான் கொடுந்தெய்வமென அத்தருணத்தில் பிறந்தெழுந்தேன்” என்று வால்மீகி சொன்னார். அருகே கபீந்திரர் அதைக் கேட்டு அமர்ந்திருந்தார். “இனிய குழந்தைகளே, கேளுங்கள். இது வால்மீகியின் கதை. என் குலமூத்தவரான கும்போதரர் நான் சிறுமியாக இருக்கையில் எனக்குச் சொன்னது. அவர்களுக்கு அவர்களின் மூத்தவர்கள் சொன்னார்கள். முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121573/

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-31

தூமவர்ணி தன் கால்களை அகற்றி வைத்து மரக்கிளையில் அமர்ந்து தன்னைச் சுற்றி குழுமிய குட்டிக் குரங்குகளை இரு கைகளாலும் அணைத்து உடலோடு சேர்த்து அவற்றின் மென்தலையை வருடியபடியும் சிறுசெவிகளை பற்றி இழுத்தபடியும் கொஞ்சியபடி கதை சொல்லத் தொடங்கியது. கதையின் ஆர்வத்தில் குழவிகளின் வால்கள் நாகக் குழவிகளென நெளிந்தன. அந்த ஒன்றுதலை அப்பாலிருந்து கண்ட பிற குரங்குகள் அருகணைந்து செவிகூர்ந்து மரக்கிளைகளில் அமர்ந்தன. சற்று நேரத்தில் கதை சொல்லும் குரங்கைச் சுற்றி கூடின. மிக அப்பால் கும்போதரன் கிளையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/121566/

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54

[ 15 ] அவை நிகழ்வுகள் முடிந்ததும் அறிவிப்பு மேடையில் ஏறிய நிமித்திகன் வலம்புரிச் சங்கை மும்முறை முழக்கினான். வெளியே வெள்ளிப்பேரிகைகள் இயம்பின. கொம்புகள் பிளிறின. தேவபுரியெங்கும் இந்திரனை வாழ்த்தி பேரோசை எழுந்தது, அவை நிறைத்து அமர்ந்திருந்த முனிவர்கள் எழுந்து அரிமலர்வீசி இந்திரனை வாழ்த்தினர். சாமரங்கள் அமைந்தன. சேடிகள் பின்னகர்ந்தனர். கைகளைக்கூப்பி முனிவரையும் அவையினரையும் வணங்கியபின் வலம் திரும்பி அவன் வெளியே நடந்தான். இடம் கொண்டு இந்திராணி உடன் சென்றாள். தேவர்க்கிறைவனின் மின்படை பொறிக்கப்பட்ட கொடியுடன் ஏவல்தேவன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93048/

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 33

[ 12 ] அருகிலெனத் தெரிந்தாலும் அந்தக் கடல் சேய்மையிலேயே உள்ளதென அர்ஜுனன் அறிந்திருந்தான். மலைகளும் கடல்களும் போன்ற பேருருவ இருப்புகள் அண்மையை நடிக்கத் தெரிந்தவை. அணுகுபவனை நோக்கி சேய்மையில் நின்று நகைக்கக்கூடியவை. அவன் அக்கரிய கடலை அணுக மேலும் நான்கு நாட்களாயின. அது முற்றிலும் ஓசையற்றிருந்தது, எனவே தன்னைக் கடலென்றே காட்டவில்லை. பெருமலைகள் ஒளிந்து அமர்ந்திருப்பதை அவன் கண்டிருந்தான். கடல் ஒன்று பதுங்கியிருப்பதை அப்போதுதான் கண்டான். கரும்புகை என முதலில் தோன்றியது. விண்சரிவில் தீற்றப்பட்ட ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/92487/

வால்மீகி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் நலமா?. ராமாயணம் பற்றி வலைத்தளத்தில் சில சந்தேகங்களைத் தேடியபோது இந்தத் தளத்திற்கு வந்து சேர்ந்தேன். http://valmiki.iitk.ac.in/ நமது நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் . தமிழ் ஹிந்து வலைத்தளத்திலும் ” ராமன் ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு ” எழுதிய ஆசிரியர் இதை மேற்கோள் காட்டி இருக்கிறார் அன்புடன் பன்னீர் செல்வம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/29759/