Tag Archive: வாரணாசி

வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -2

எம்.டி.யின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அசுரவித்து. அசுரவித்து என்பது பல வழிகளில் முக்கியமான வார்த்தை. ஒரு பெரிய புகழ்பெற்ற, செல்வம் மிகுந்த குடும்பம். அந்தக்குடும்பத்தில் வந்து பிறக்கும் ஒரு குழந்தையினுடைய தீய ஜாதக பலன் காரணமாக அது அழியும் என்றால் அந்தக் குழந்தைதான் அசுர வித்து. அது ஓர் அசுரனின் விதை. துரதிருஷ்டவசமாக ஏற்கெனவே சரிந்துகொண்டிருக்கும் குடும்பத்தில் குழந்தையாக வந்து பிறக்கும் இளைஞனின் வாழ்க்கையை சொல்கிறது எம்.டியின் நாவல். பாட்டி அவனை சின்ன குழந்தையாக இருக்கும்போதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61991

இந்தியப் பயணம் 17 – வாரணாசி

வாரணாசி என்ற குரல் காதில்விழாமல் நம்மில் பெரும்பாலானவர்களின் தினம் தொடங்குவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் குரலில் ‘வாரணசீ குலபதே மம சுப்ரபாதம்’ என்று கேட்டபடித்தான் காலைகள் விடிகின்றன. வாரணாசி ஆங்கிலத்தில் பனாரஸ். இன்னொரு பெயர் காசி. காலபைரவக்ஷேத்ரம் என்பதில் இருந்து வந்தது காசி என்ற சொல். வருணா மற்றும் அஸி என்ற இரு துணையாறுகளுக்கு நடுவே கங்கை பிறைவழிவில் செல்லும் 108 படித்துறைகளுக்கு மட்டும் வரணாசி என்று பெயர். பாலி மொழியில் பருணாசி என்று சொல்லப்பட்டு ஆங்கிலத்தில் பனாரஸ் ஆகியது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/660