Tag Archive: வானவன் மாதேவி

ஒரு தனிப்பட்ட விண்ணப்பம்

வானவன் மாதேவி இயலிசை வல்லபி சகோதரிகளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என் வாசகர்களுக்கு பரவலாக அறிமுகமான பெயர். மரபணுச்சிக்கலால் விளைந்த குணப்படுத்த முடியாத தசைச்சுருக்க நோயால் [ Muscular Dystrophy] பாதிக்கப்பட்டவர்கள் இருவரும். கடுமையான வலியுடன் போராடி விரைவாக முற்றிவரும் நோயுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் ஆனால் ஒருபோதும் தளராத ஊக்கமும் தணியாத வாசிப்பார்வமும் கொண்டவர்கள். அவர்களுக்கிணையான வாசகர்களை நான் குறைவாகவே கண்டிருக்கிறேன். தங்கள்நோயையும் வலியையும் சகமனிதர்களுக்குச் சேவைசெய்வதற்கான முகாந்திரமாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற சில வருடங்களாக அவர்கள் தனிச்சிறப்புக் கவனத்தைக் கோரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63344

ஏற்காடு இலக்கியமுகாம் – வானவன்மாதேவி

(குறிப்பு : தசைசிசைவு நோயால் பாதிப்பட்ட சகோதரிகள் வானவன் மாதேவி,இயலிசை வல்லபி இருவரும் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் ஆதாவா டிரஸ்ட் என்ற அமைப்பை சேலத்தில் நடத்திவருகிறார்கள் , (இவர்களைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய பதிவு) ஏற்காடு சந்திப்பு குறித்து வானவன் மாதேவி எழுதிய குறிப்பு )   இலக்கியம் ஏன் என்னை வசீகரிக்கிறது? என்ற கேள்வி அதற்கான பதிலை மெல்ல உணரும் தருணத்தில்தான் வந்திருக்கிறது . வாழ்வின் எல்லாப்பக்கங்களும் மூடிக்கொண்ட பிறகும் தளராமல் வெளிச்சம் தேடும் கண்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/37457

கோவை

பத்து வருடம் முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புத்தகக் கண்காட்சிகள் ஆரம்பித்தன என்றாலும் சென்னை, மதுரை கண்காட்சிகளை மட்டுமே பதிப்பாளர் கூட்டமைப்பு தொடர்ந்து நடத்துவதாக முடிவெடுத்திருக்கிறது. நெல்லை கண்காட்சி ஆரம்பத்திலேயே படுதோல்வி எனத் தெரிந்து அப்படியே விட்டுவிட்டார்கள். திருச்சி கண்காட்சியும் எடுபடவில்லை. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் புத்தகம் மட்டும் விற்பதில்லை. அது எழுத்தாளனாக என் அனுபவம்சார்ந்து நான் ஏற்கனவே சொல்லிவருவதற்கு ஒத்தே உள்ளது. தஞ்சை ஓர் அறிவுப்பாலைவனம் இன்று. அங்கிருந்து ஒருவாசகர் கடிதம் வருவதென்பது அனேகமாக சாத்தியமே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19791