Tag Archive: வாசகர் கடிதம்

டாக்டர்கள் என்னும் சேவைவணிகர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, சமீபத்தில் மருத்துவர்கள் மேல் பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய விமர்சனங்களை முன் வைத்து நீயா நானா நிகழ்ச்சி நடந்தது. அது சமூக ஊடகங்களில் ஒரு குறிப்பிடத் தக்க விவாதத்தை நிகழ்த்தியது. எதிர்பார்த்தது போலவே மருத்துவர்கள் அவர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டைப் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் அதற்கான பொறுப்பு தங்களுக்கு உள்ளது பற்றிய எந்த உணர்வும் இல்லாமல், தனது துறை சார்ந்த பாசம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தி, தன்னிடம் வரும் நோயாளிகள் அறிவற்று இருப்பதாகவும், TRP …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60765/

நிறம்

அன்புள்ள ஜெ, நிறவெறி குறித்த இந்த பதிவு என் நெஞ்சை வருடியது! http://aveenga.blogspot.com/2009/08/blog-post_08.html உங்கள் கருத்து? விஜயசங்கர் *** அன்புள்ள விஜயசங்கர், ஆத்மார்த்தமான பதிவு. நான் இதைப்பற்றி ஆழமாக நினைத்த ஒரு தருணம் சமீபத்தில் வந்தது என் பெண் சைதன்யா ஒருநாள் ”அப்பா எனக்கு ஐம்பது ரூபாய் வேண்டும்” என்று கேட்டாள். ”எதுக்குடி ஐம்பது ரூபாய்?” என்றேன். ”என்னோட ஃப்ரன்டு லாவண்யாவுக்கு பர்த்டே கிஃப்ட் குடுக்கணும்” வழக்கமாக இதற்கெல்லாம் இருபது ரூபாய்தான் கணக்கு. அதில் நாலைந்து பெண்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5971/

ஜே.ஜே.சில குறிப்புகள் தழுவலா?

நண்பர் ஜெயமோகனுக்கு, சமீபத்தில் ஒரு வலை தளத்தில் சற்று காட்டமான உள்ளீட்டை படித்தேன். இது ஜே ஜே somerset இன் moon and.. நாவலின் ஜெராக்ஸ் என்று சாடுகிறது.(ஆனால் அதற்கான காரணங்களை குறிப்பிடவில்லை) நானும் moon and six .. நாவலை உடனே வலையில் மேய்ந்து மேலோட்டமாக வாசித்தேன். ஓரளவு இரண்டு நாவலுக்கும் சார்பு உள்ளதாக உணர்ந்தேன் (moon and six சற்று நேர்க்கோடான கதை சொல்லல் முறையை பின்பற்றுவதாக உணர்கிறேன்.. ஆனாலும் தத்துவ ரீதியான குழப்பங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/229/

விவாதிப்பவர்களைப்பற்றி

அன்புள்ள ஜெயமோகன் உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே முறை? முரளி கணேஷ் அன்புள்ள முரளி ‘கல்வெட்டு பேசுகிறது’ பிப்ரவரி மாத இதழில் ஒரு செய்தி. பிரமிளுக்கான அஞ்சலிக்கூட்டத்தில் ஒரு முற்போக்கு எழுத்தாளர் அவரைக் கண்டித்துவிட்டு ‘செத்தபாம்பு என்பதனால் மேற்கொண்டு அடிக்காமல் விடுகிறேன்’ என்றாராம். இதில் வியப்படைய ஏதுமில்லை. நவீன இலக்கியத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/282/

எம்.எ·ப்.ஹ¤செய்ன் கடிதம்.

அன்புள்ள ஜெயமோகன், ஹிந்து தெய்வங்களின் திருவுருவங்கள் விக்டோரிய ஒழுக்கவியலாளர்களின் கட்டமைப்புக்கும் இரசனைக்கும் உருவானவை அல்ல என்பது சரியான விஷயம். ஒரு குறுகலான ஒழுக்கவிதியுடன் ஹிந்து திருவுருவங்களை உருவாக்க செய்யப்படும் முயற்சிகள் மடத்தனமானவை. ஆபத்தானவை. ஹுசைனின் ஓவியங்கள் தாக்கி அழிக்கப்பட்ட செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டிருந்தால் அவை நிச்சயமாக நம்மை வெட்கி தலைகுனியவே வைக்கும். அதே சமயம் அவரது ஓவிய உலகில் நுழைந்து நாம் பார்ப்பதும் அவசியம் என்றே நான் நினைக்கிறேன். ஹுசைனின் ஓவிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5135/

ஊடகங்களின் கள்ள மெளனம்

அன்புள்ள அண்ணா, சமீபத்தில் தன் முக நூல் பக்கத்தில் மார்க்கண்டேய கட்ஜி, தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான ஹெச் எல் தத்து பெருமளவில் வாங்கிக்குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றிய 100 பக்க ஆதாரங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டிற்கு அனுப்பி அதை உறுதி செய்து கொண்டு உண்மை இருப்பின் வெளியிட கோரி இருந்தார். இதை தன் முக நூல் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். (https://www.facebook.com/justicekatju/posts/969434869763726?fref=nf&pnref=story)ஆனால் இதை பற்றி எந்த ஊடகமும் வாயை திறக்க வில்லை.(http://www.thenewsminute.com/article/media-scared-investigating-chief-justice-dattus-assets-asks-katju). ஊடகங்களில் ஊழலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75414/

கதையறிதல்

அன்பின் ஜெய், மனத்தடை மடை திறந்ததால் எம் முதல் மடல், இணைய அறிவால் நிகழ்ந்த விபத்தில் இன்று வரை உங்கள் எழுத்தை பின்தொடரும் மீச்சிறு வாசகன். இணையத்தில் பரவலாக மேயும் தருணத்தில் வியாசர் சுகனை சந்திக்கும் அத்தியாயத்தில் அறிமுகம் ஆனது நம் வெண்முரசு, அக்கணம் பீமன் அறிந்து உண்ட அமுதஆலகாலம் போல் இன்று வரை என் சிந்தை முழுவதும் அதுவே. “திரௌபதி சிரித்தபடி “ஆனால் நஞ்சு என்பது அமுதத்தின் தங்கை என்கிறார்கள். அது இனியது என்று சொல்லப்படுவதுண்டு” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75180/

கண்ணுக்குத்தெரிபவர்களும், தெரியாதவர்களும்

அன்புள்ள ஜெ., இன்று அலுவலகம் விட்டு வரும் வழியில் அம்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பாக நிகழ்ந்துவிட்டிருந்த அந்த விபத்தை பார்க்க நேர்ந்தது. இரு வாலிபர்கள் இறந்து விட்டிருந்தார்கள். அவர்களருகே இன்னொருவர் அழுது கொண்டிருந்தார். நண்பராக இருக்கக்கூடும். தலைக்கவசம் இருந்திருந்தால் பிழைத்திருக்கலாமென்றார் அருகிலிருந்த ஒருவர். அழுதுகொண்டிருந்தவர் மட்டும் நினைவிலே இருந்தார். அவரைப்போலவே நானும் புழல் சாலையில் அழுதுகொண்டு நின்றிருக்கிறேன் ஒன்பதாண்டுகள் முன்பு. என் இரு நண்பர்களில் ஒருவர் தக்கலை மற்றவர் சூலூர்பேட்டை. நான்தான் ஐவிட்னஸ். கேஸ் இன்றுவரை விசாரணைக்குக்கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75173/

நிறம்- கடிதம் 2

சார், நிறம் பதிவு வாசித்தேன். யுவன் தொடர்பாக வாசித்தபோது நெகிழ்ந்தேன். அப்படியே என் அப்பாவை உணர்ந்தேன். அப்பா, எம்.ஜி.ஆர் நிறம் இருப்பார். அம்மா, ரஜினி நிறம். ஆனால் அவர்களது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலான இல்லறவாழ்வு நானறிந்து மிக மகிழ்ச்சியாகவே அமைந்தது. தான் சாகும் வரை, அம்மாவை சைக்கிள் கேரியரில் உட்காரவைத்து ஊரெல்லாம் பெருமையாக ரவுண்டு அடிப்பார் அப்பா. அவருடைய சைக்கிளை ‘காதல் வாகனம்’ (எம்ஜிஆர் பட டைட்டில்) என்று அக்கம் பக்கத்தில் கிண்டல் செய்வார்கள். சிறுவயதில் அம்மா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75324/

இணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்

அன்புள்ள ஜெ – சரவணகார்த்திகேயன் எழுதியிருப்பது தொடர்பாக ஒரு சிறு ‘வரலாற்றுக்’ குறிப்பு: இணையச் சமநிலை என்ற பெயரில் இன்று நிகழ்ந்துவரும் சர்ச்சை நமக்கு புதிதல்ல.தொண்ணூறுகளின் இறுதியில் இணையம் பரவலானபோதே இதன் முதல் போர் பற்றிக்கொண்டது. இணையம் மூலம் செயல்படும் தொலைபேசி தொழில்நுட்பம் (VOIP) இதன் கருப்பொருளாக இருந்தது. கணினியில் VOIP செயலி மூலம் இந்தியா உலகம் எங்கும் இலவசமாக பேசிவிடலாம், மாதந்திர போன் கட்டணம் வெகுவாக குறையும் என்ற நிலை வந்தது. VOIP பெரிதாக வந்தால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/75278/

Older posts «