Tag Archive: வாகைமண்

பச்சைக்கனவு

என் வலக்கையின் மணிக்கட்டு ஓரமாக ஒரு சிவந்தபுள்ளி. அது அரித்துக்கொண்டே இருக்கிறது. இனியதோர் இருப்புணர்த்தல். அதுதான் மழைப்பயணம் முடிந்து வந்த நினைவு. அட்டை கடித்த தடங்கள் சில அரித்து சிவந்து தடித்து புள்ளியாகி கொஞ்சநாள் நீடிக்கும். ஆனால் இம்முறை அட்டைக்கடி மிகக்குறைவு. ஏன் என்று தெரியவில்லை. அட்டைகள் பெருகிக்கிடக்கவேண்டிய ஈரச்சதுப்புகள் பலவற்றை தாண்டிக்கடந்தோம்,. சென்றமுறை கால்களெல்லாம் ஒட்டிக்கொண்டு நெளிந்த மேற்குமலையின் உரிமையாளர்களை பெரும்பாலும் காணமுடியவில்லை. இத்தனைக்கும் சென்றமுறை போல உப்புக்கரைசலுடன் நாங்கள் செல்லவுமில்லை. உப்பு வாங்கி காரிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100070

பருவமழைப் பயணம் 2012

2007 வாக்கில் நாங்கள் ஆரம்பித்தது ஜூலை மாதத்திய பருவமழைப்பயணம். அதற்கு முன் ஈரோட்டு பசுமைபாரத நண்பர்கள் தற்செயலாகச் செய்த ஒரு கேரள மலைப்பயணத்தில் அந்த இடத்தைக் கண்டடைந்திருந்தனர். பீர்மேட்டில் மிக மலிவான ஒரு தங்கும்விடுதி. பயணத்திட்டம் மிக எளியது. நண்பர்களின் கார்களில் அங்கே சென்று சுற்றுமுள்ள மலைப் பகுதிகளில் மழையில் நனைந்தபடி சுற்றி வருவது, அவ்வளவுதான். வழக்கம்போல இதுவும் இப்போது ஒரு ‘நாடறிந்த’ சடங்காக ஆகிவிட்டது. ஆகவே காதோடுகாதாக இதை இப்போது செய்கிறோம். அடுத்தமுறை முறையான அறிவிப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/28956