Tag Archive: வள்ளுவர்

எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…

சமூகத்தின் கூட்டுமனம் ஆளுமைகளைப் புனைந்துகொள்கிறது. அந்த ஆளுமைகளின் உடற்தோற்றத்திற்குச் சமானமாகவே அவர்களின் பங்களிப்பும் அதை அச்சமூகம் எதிர்கொள்ளும் விதமும் அதில் தொழில்படுகிறது. தமிழகத்தில் அவ்வாறு சென்றகாலங்களில் நாம் புனைந்துகொண்ட ஆளுமைச்சித்திரங்களை நினைவுகூர்ந்தால் இதை எளிதில் வகுத்துக்கொள்ளலாம்.   வள்ளுவர் ஒரு சைவத்துறவியின் சாயலுடன் புனையப்பட்டார். அவருடைய சமணப்பின்புலம் அச்சித்திரம் வழியாக நம் நினைவிலிருந்து மறைக்கப்பட்டது. கம்பன் ஷத்ரியத் தோற்றத்துடன் புலமைமிடுக்குடன் புனையப்பட்டான். அவனுடைய உவச்சர்குலம் அவ்வோவியத்தில் தெளிவாகவே தெரிகிறது.   இவர்களின் தோற்றம் நமக்குத்தெரியவில்லை. இவர்களைப்பற்றிய செய்திகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/100964

வள்ளுவரும் அமணமும்

வணக்கம் ஜெயமோகன் அண்ணா தற்போதுதான் கொற்றவை வாசித்து முடித்தேன். இறுதி அத்தியாயத்தை படிக்கும் போது ஒரு கணம் கண்மூடி இளம் வயதிலேயே இழந்த என் தாயை நினைத்து கொண்டேன். பொதுவாக நான் உணர்ச்சிவசப்படும் டைப் அல்ல ஆனால் இதை கடந்த மூன்று வாரங்களாக படித்து வருகையிலேயே பலவிதமான் மன எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் அடைந்தேன். விஷ்ணுபுரம் கூட இத்தனை பாதிக்கவில்லை(அதுவே ஓராண்டுக்கு முன்பு நான் படித்த உங்களின் முதல் எழுத்து). கொற்றவை படிக்க படிக்கவே சமணர் பற்றிய பல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/57187