Tag Archive: வளைகுடாப்பயணம்

அறமெனப்படுவது யாதெனின்…

  அன்புள்ள நண்பர்களே, இன்று ‘அறமெனப்படுவது’ என்னும் தலைப்பில் பேச என்னை அழைத்திருக்கிறார்கள். அடிப்படையான வினா இது. எவை வாழ்க்கையின் ஆதாரமான தத்துவநிலைப்பாடுகளை விளக்க முயல்கின்றனவோ அவையே அடிப்படைக் கேள்விகள். இதைப்போன்ற அடிப்படை வினாக்கள் எழும்போதெல்லாம் நாம் நம் ஆசிரியர்களை இயல்பாக நினைவுகூர்கிறோம். நான் நித்ய சைதன்ய யதியை நினைத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நம் ஆசிரியர்கள் நம்மிடம் அடிப்படை விஷயங்களைப் பற்றியே உரையாடுகிறார்கள். இல்லை, அவர்கள் எதைப்பற்றி உரையாடினாலும் அதெல்லாம் அடிப்படை விஷயங்களாக இருக்கின்றன. நித்யா ஒருமுறை குருகுலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26673

அறமெனப்படுவது – கடிதங்கள்

அன்பின் ஜெயமோகன் , மானுட அறமே மேலான அறம் என்ற உங்கள் கட்டுரை அருமை, அறுதியிட்டுக் கூறுவதே அறம் எனப்பட்டதா? குடும்ப அறம் காக்க முயலாமல், குல அறமும் காக்க முயலாமல், மானுட அறத்தைக் காத்ததினாலேயே கண்ணகி தெய்வம் ஆகி நின்றாளோ ?? நன்றி சிவகுமார் அன்புள்ள சிவகுமார், ஆம், அதனால்தான் கண்ணகி அறச்செல்வி என்று ஆசிரியராலேயே சுட்டப்படுகிறாள். ஜெ அன்புள்ள ஜெ, உங்கள் துபாய் உரை மிகச்சிறப்பாக இருந்தது. பொதுவாக உங்கள் கட்டுரைகளை விட உரைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26746

குவைத்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ. வளைகுடாப்பயணம் படித்து மகிழ்கின்றேன். திரு.சித்தநாதபூபதி பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவர் வெண்பாவுக்கு ஒரு நிரல் எழுதிய பெருமைக்குரியவர். அமெரிக்காவில் கண்டு உரையாடினேன். அவர் ஒரு பொறியாளர். தமிழ் வெண்பா இலக்கணத்தை உள்வாங்கிக்கொண்டு சிறப்பாக நிரல் உருவாக்கியிருந்தார். அப்பொழுதே நான் பாராட்டி என் பக்கத்தில் எழுதினேன். அவர் அங்குதான் இருக்கின்றார் என்பது அறிந்து மகிழ்ச்சி. அவர் இல்லத்தில் விருந்துண்டமை சிறப்பு. அனைவருக்கும் என் அன்பு. பயணம் சிறக்கட்டும். மு. இளங்கோவன் * வணக்கம் ஜெமோ நலமா? எப்படி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26705

வளைகுடாவில்… 4

குவைத்தில் நாங்கள் திட்டமிடாது கலந்துகொண்ட நிகழ்ச்சி நாஞ்சில்நாடனின் கம்பராமாயண விளக்க உரை. காலை பத்துமணிக்கு ஜெயகாந்தனின் வீட்டில் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் முப்பதுபேர் கலந்துகொண்டார்கள். குவைத்தின் முக்கியமான இலக்கிய வாசகர்கள் அனைவருமே வந்திருந்ததாகச் சொன்னார்கள். நாஞ்சில்நாடன் கம்பராமாயணத்தை அவர் பாடம்கேட்டது முதல் ஆரம்பித்து ஒவ்வொரு காண்டத்திலும் சில உதாரணப்பாடல்களை சுட்டிக்காட்டிப் பேசினார். நாஞ்சிலுக்கே உரிய உணர்ச்சிகரமான பேச்சு. வந்திருந்தவர்களில் பலருக்கு கம்பராமாயண அறிமுகம் இருந்தது ஆச்சரியமளித்தது. புதுக்கவிதை எழுதுபவரான பாம்பாட்டிச்சித்தன் சரசரவென சில கம்பராமாயணப்பாடல்களைச் சொன்னார். அவரது ஊரில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26665

வளைகுடாவில்… 3

காலையில் ஷார்ஜா விமானநிலையத்தில் குவைத்துக்காக விமானம் ஏறும்போது தூக்கக் கலக்கத்தில் போதைகொண்டவன் போல இருந்தேன். நானும் நாஞ்சிலும் ஒரு காபி சாப்பிட்டோம். எங்களுக்காக ஒரு பிலிப்பைன் பெண்மணி அவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டு இயந்திரத்தை ஓட்டி வடித்து எடுத்து ஆளுயர டம்ப்ளரில் காபியை கொடுத்ததனால் பத்துடாலர், ஐநூறு ரூபாய், இழப்பை மனம் தாங்கிக்கொண்டது. ஷார்ஜா விமானநிலையம் எர்ணாகுளம் பேருந்துநிலையம்போல ஒரே மல்லுமொழியில் தளும்பிக்கொண்டிருந்தது. மல்லுக்கள் வளைகுடாவைக் கொள்ளையடித்துத் திரும்புகிறவர்கள் போலத் தெரிந்தார்கள். ஐம்பத்திரண்டு இஞ்ச் டிவி என்பது இந்தியாவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26693

துபாயில்-கடிதம்

அன்புள்ள ஜெ, துபாய் நிகழ்ச்சியில் உங்களையும் நாஞ்சில் அவர்களையும் சந்தித்தது பேருவகை. கூடத்தில் நுழைந்ததும் முதலில் உங்களைக் கண்டேன். அதிகம் பேர் உங்களை சுற்றிலும் இல்லாதது ‘நாம் சந்திக்க ஒரு வாய்ப்பு’ என்று மகிழ்ச்சி. உடனேயே உங்களிடம் வந்தும்விட்டேன். வந்த பிறகு சுரேஷின் அதே தயக்கம் எனக்கும் உங்களிடம் பெயர் சொல்லி அறிமுகம் செய்து கொண்டதும், நீங்கள் மேலும் பேசத் தயாராக இருந்தது உள்ளுக்குள் பெருமகிழ்ச்சி கலந்த சங்கடம். நீங்கள் மிக இயல்பாகப் பேசத் தயாராக இருந்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26646

வளைகுடாவில்… 2

ஷார்ஜாவில் இரண்டாம் நாள் எட்டுமணிக்கெல்லாம் தயாராக இருந்தோம். பாலைவனத்தைக்காட்ட கூட்டிச்செல்வதாக சத்யா சொல்லியிருந்தார். சத்யா முந்தையநாள் நள்ளிரவில்தான் கிளம்பிச்சென்றிருந்தார். ஆனாலும் ஒன்பது மணிக்கு வந்துவிட்டார். நாங்கள் கிளம்பினோம். ஓமன் செல்லும் சாலை .கட்டிடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாதாரணமாக மாற ஆரம்பித்தன. ஒரு சாதாரண அரபு தேசம்போல. மணல்நிறமுள்ள சுவர்கள் கொண்ட இரண்டடுக்கு கட்டிடங்கள். கூசச்செய்யும் வெயிலின் விளைவான ஒரு வெறிச்சிடல். கார்களின் மேல்பக்கங்கள் கண்ணாடிப்பரப்புகளாக கண்களை வெட்டிவெட்டிச்சென்றன. பொதுவாக எந்த ஊர் என்ன இடம் என்பதைத் தெளிவாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26626

வளைகுடாவில்… 1

முதலில் நாகர்கோயிலைச் சேர்ந்த வாசகரான மாதவன்பிள்ளைதான் அறிமுகமானார். ஒருமுறை என் வீட்டுக்கு மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார். தொடர்ச்சியாக இணையதளத்தையும் நூல்களையும் வாசிப்பவர். அன்று பேசிப் போனபோது ‘ஒருமுறை அவசியம் குவைத் வரவேண்டும் சார்’ என்றார். ‘கண்டிப்பாக’ என்றேன். அப்படி என்னை உலகம் முழுக்க அழைக்கிறார்கள். சிலவே பயணமாகக் குதிர்கின்றன. ஆனால் சிலநாட்களுக்குப்பின் அவர் கூப்பிட்டுக் குவைத்துக்கு என்னை அழைக்க ஏற்பாடுகள் செய்வதாகச் சொன்னார். குவைத்தில் என் நண்பர் சித்தார்த் இருக்கிறார். அவரும் சேர்ந்துகொண்டார். மேலும் நல்ல வாசகர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/26594

வளைகுடா பயணம்

வரும் ஏப்ரல் 11 ,12 தேதிகளில் துபாய்க்கும் , 13 லிருந்து ஐந்து நாட்களுக்கு குவைத்துக்கும் நானும் நாஞ்சில்நாடனும் அங்குள்ள தமிழ்ச்சங்கம் ஒன்றின் அழைப்பின் பேரில் பயணமாகிறோம். நண்பர்களின் ஏற்பாடு. முழு நிகழ்ச்சி நிரல் பின்பு அறிவிக்கப்படும், நாஞ்சில் ‘மரபிலக்கிய அறம்’ பற்றியும் நான் ‘அறன் எனப்படுவது யாதெனின்’ என்ற தலைப்பிலும் உரையாற்றவிருக்கிறோம். தொடர்புக்கு துபாய்:senshe – [email protected] குவைத்:Siddrth [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/26087