கு.ப.ராஜகோபாலனின் ஒரு பழைய கதையில் [கனகாம்பரம்- தொகுப்பு] ஒருவன் கும்பகோணத்தில் தன் நண்பனை தேடிச்செல்கிறான். நண்பனுக்கு அப்போதுதான் திருமணமாகியிருக்கிறது. இவன் அங்கே செல்லும்போது நண்பன் இல்லை. அவனுடைய இளம் மனைவி மட்டும் தனியாக இருக்கிறாள். பெரிய அழகி அவள். அவள் இவனை வரவேற்று காபி போட்டுக் கொடுக்கிறாள். கணவன் நாளைதான் வருவான் என்கிறாள். இவனுக்கு கும்பகோணத்தில் செல்வதற்கு ஓர் இடமில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் இருக்கையில் அவளே மாடியில் தங்கிக்கொள்ளலாம் என்று சொல்கிறாள். அவள் சமைத்துப்போட்டதைச் சாப்பிட்டுவிட்டு இவன் …
Tag Archive: வலசைப்பறவை
Permanent link to this article: https://www.jeyamohan.in/47508
வலசைப்பறவை 5 : நீர்க்குமிழிகளின் வெளி
முன்பு விகடன் கேள்விபதில் ஒன்றில் இதழாளரான மதனிடம் ஒருவர் ‘வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது இரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு?’ என்று கேட்டார். மதன் ‘நிறைய தொலைக்காட்சி பார்த்து அறிவாளியாக ஆன எவரையாவது பார்த்திருக்கிறீர்களா?’ என்று பதில் சொன்னார். நேரடியான பதில். ஆனால் தொடர்ந்து சிந்திக்க வைப்பது. தொலைக்காட்சியும் ஓர் ஊடகம்தானே? நம்மவர் ஒருநாளில் ஐந்துமணிநேரத்தை சராசரியாக அதற்கு செலவிடுகிறார்கள். அவர்கள் எவரும் எளிய அளவில்கூட அறிவையோ சிந்தனைத்திறனையோ அடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஒருநாளில் அரை மணிநேரம் வாசிக்கும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/46092
வலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்
‘எந்த தத்துவமேதையும் பொதுச்சிந்தனையில் அதிகபட்சம் பத்துமேற்கோள்களாகத்தான் அறியப்படுவான்’ என்று ஒருமுறை என் ஆசிரியரும் கீழைத்தத்துவச் சிந்தனையாளருமான நித்ய சைதன்ய யதி சொன்னார். தத்துவமேதை ஹெகலின் எழுத்துக்களின் முழுத்தொகுப்பு நூல்கள் அடுக்கடுக்காக அவரது குருகுலத்து நூலகத்தில் இருந்தன. அந்த பல்லாயிரம் பக்கங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் அதைச் சொல்லிக்கேட்டது திகைப்பளிப்பதாக இருந்தது. ‘அப்படியென்றால் எதற்காக ஹெகல் இத்தனை பக்கங்கள் எழுதினார்?’ என்று நான் கேட்டேன். ‘ஒரு முதற்சிந்தனையை முன்வைத்து, அதன் மேல் எழும் அனைத்துக்கேள்விகளுக்கும் விடையளித்து வாதிட்டு நிறுவ அத்தனை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/46086
வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை
மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting நாவலில் ஒரு நிகழ்ச்சி. 1948ல் சோவியத் படைகள் செக்கோஸ்லாவாகியாவுக்குள் ஆக்ரமித்துக்கடந்து அந்நாட்டைக்கைப்பற்றி ஆட்சியமைக்கின்றன. செக் நாடு ருஷ்ய ஆதிக்க கம்யூனிச நாடாக அறிவிக்கப்படுகிறது. ருஷ்ய கம்யூனிஸ்டுத் தலைவரான க்ளெமெண்ட் கோட்வால்ட். பிராக் நகரின் பரோக் பாலஸ் என்ற மாளிகையின் பால்கனிக்கு வந்து தன்முன் கூடியிருந்த பல்லாயிரம் மக்களைநோக்கி ஆவேசமான உரையொன்றை நிகழ்த்தினார். அவருக்கு அருகே அவரது தோழரான விளாடிமிர் க்ளெமென்டிஸ் நின்றிருந்தார். பனிபெய்துகொண்டிருந்தது. கோட்வால்டின் தலை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/43411