Tag Archive: வருக்கை [சிறுகதை]

எண்ண எண்ணக்குறைவது, வருக்கை -கடிதங்கள்

வருக்கை [சிறுகதை] அன்புள்ள ஜெ   வருக்கை கதையை இந்த வரிசைக் கதைகளில் குறைவாகவே எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். நான் கண்டவரை ஒரு சின்ன விஷயம் அதில் உள்ளது. அதவாது பெண்களின் மனம். பெண்கள் ஏன் கள்ளன்களால் கவரப்படுகிறார்கள்? அது ஒரு அடிப்படையான  உயிரின் இயல்புதானா? ஏனென்றால் இப்படி பெண்களைக் கவர்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் எவருமே பெரிய உடல்வலிமை உடையவர்கள் அல்ல. அவர்கள் மூளைக்கூர்மைகொண்டவர்கள். நகைச்சுவையாக அதை வெளிப்படுத்துபவர்கள். நன்றாகப் பேசுபவர்கள்   பேசிப்பேசியே ஒருவன் தன்னை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130436

வருக்கை, ஆனையில்லா!- கடிதங்கள்

“ஆனையில்லா!” [சிறுகதை] அன்புள்ள ஜெ   ஆனையில்லா, வருக்கை, பூனை மூன்று கதைகளுமே ஒரே வரிசையில் வருகின்றன. அந்த சிறிய கிராமத்தின் அழகான சித்திரம். அதில் நான் முதலில் பார்ப்பது மத ஒற்றுமை. இந்து கிறிஸ்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இந்து கோயில் கமிட்டியிலேயெ சர்ச்சில் உள்ள டீக்கனார் உட்காந்திருக்கிறார். சாதிப்பிரச்சினை என்பது மாறி மாறிச் சீண்டிக்கொள்ளும் அளவிலேயே இருக்கிறது.   ஆனையில்லா கதையிலும் சரி பூனை கதையிலும் சரி உயர்சாதியான நாயர்களின் சரிவும் வீழ்ச்சியும் சொல்லப்படுகிறது. முன்பு வாளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130274

வருக்கை, ஆனையில்லா- கடிதங்கள்

வருக்கை [சிறுகதை] அன்புள்ள ஜெ   வருக்கை கதையை வாசித்துக்கொண்டிருந்தபோது தங்கன் என்ற பெயரும் பலாப்பழச்சுளைகளும் மனதிலே ஒன்றாக ஆகிவிட்டன. எங்களூரில் தங்கன்சுளை என்றுதான் சொல்வார்கள். பொன்னிறமான வரிக்கைச்சுளைகள். அவள் அந்த சம்புடத்தை எடுத்து முகர்ந்து பார்க்கிறாள். அதில் அந்தச் சுளைகளின் மணம். பொன்னிறத்தின் மணம். அது அவளை மலரச் செய்கிறது. கிருஷ்ணனின் மணம். மனம்கவர்ந்த கள்வனின் மணம். சோரன் என்றுதானே கிருஷ்ணனைச் சொல்வார்கள்   எஸ்.   அன்புள்ள ஜெ,   வருக்கை கதையில் கள்வனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130310

வருக்கை – கடிதங்கள்-1

வருக்கை [சிறுகதை] அன்புள்ள ஜெ,   வருக்கை கதையை ரசித்துப் படித்தேன். அந்தக்கதையின் மைய வரியே “கிருஷ்ணன் கள்ளன்லா, நல்ல வருக்கைக் கள்ளன்’. திருடர்களை ஏன் பெண்களுக்குப் பிடிக்கிறது என்றால் அவர்களிடம் கிருஷ்ணனின் அம்சம் இருக்கிறது என்பதனால்தான். மானசசோரன் என்று கிருஷ்ணனுக்குப் பெயர். தமிழிலே உள்ளங்கவர்கள்வன். அவனை யாருக்குத்தான் பிடிக்காது?   சுவாமி   அன்புள்ள ஜெ வருக்கை கதையின் அழகை பல கோணங்களில் வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஃபுல் ஃபார்மிலே இருக்கிறீர்கள். வாழ்க.   அந்தக்கதையில் கள்ளனுக்குக் கள்ளன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130269

வருக்கை [சிறுகதை]

  கண்ணன் பார்பர் ஷாப்பில் எனக்காக ஏழுபேர் காத்திருந்தனர். நான் அருகிலிருந்த சண்முகத்தின் வெற்றிலைபாக்குக் கடையில் “ஒரு பாக்கெட் வாசனை ஜிண்டான்”என்று சொன்னேன்.   சண்முகம் “பிள்ளை இண்ணைக்கு பள்ளிக்கூடம் லீவா?”என்றார்.   அதற்குள் அப்புப் பாட்டா என்னிடம் “பிள்ளை இஞ்ச வாரும்… தந்தியிலே பேச்சிப்பாறை வெள்ளம் என்ன மட்டம்னு பாத்துச் சொல்லும்” என்றார்.   நான் தந்தியை வாங்கிக் கொண்டேன். அது ஏற்கனவே பலரால் பலகோணங்களில் படிக்கப்பட்டு ஆறிப்போன அப்பளம் போலிருந்தது. ஒய்.விஜயாவின் முலைமேல் எவரோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/130203