Tag Archive: வரலாற்றெழுத்து

வரலாற்றை வாசிப்பதன் விதிகள்

அன்புள்ள ஜெயமோகன், “வரலாற்றெழுத்தின் வரையறைகள்” படித்தேன். உங்களின் சினமும், ஆதங்கமும் புரிந்து கொள்ளக் கூடியதே. கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழகம் துதிபாடிகளையும், அறிவீனர்களையும் சிம்மாசனத்தில் அமர்த்தி வளர்த்து விட்டுவிட்டது. அவர்களின் வழி வந்தவர்கள் செய்யும் “ஆராய்ச்சி” எப்படி இருக்கும் என்பதனைச் சொல்ல வேண்டியதில்லை. நம் தலையெழுத்து அப்படி. நீங்கள் கூறும் தகவல்களிலிருந்து சிறிது மாறுபட்டு, வேளாளர்கள் பற்றிய நான் படித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். பூர்வ வேளாளர்கள் கண்ணணின் வழிவந்தவர்கள் என்றும், அவர்கள் துவாரகையிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61262

வரலாற்றெழுத்தின் வரையறைகள் 3

இலங்கை வரலாற்றை எழுதும்போது… இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றெழுத்தின் வரலாறும் அதன் இன்றைய போக்குகளும் இலங்கையின் வரலாற்றெழுத்துக்கும் பெரும்பாலும் பொருந்துவதாகவே இருக்கும். என்னுடைய எல்லைக்குட்பட்ட வாசிப்பில் இருந்து அத்தகைய ஒரு முன்வரைவையே நான் கொண்டிருக்கிறேன். இந்தியப் பெருநிலத்திற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இலங்கைக்கு உண்டு. தெளிவாக எழுதப்பட்ட ஒரு குலவரலாற்று நூல் இலங்கைக்கு உள்ளது. இந்தியாவின் வரலாற்றிலேயே கணிசமான தருணங்களில் காலநிர்ணயம் மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மகாவம்சம் ஒரு குலவரலாறு மட்டுமே. ஒரு குலம் தனக்காக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43399

வரலாற்றெழுத்தின் வரையறைகள் 2

இந்திய வரலாற்றெழுத்தின் வரலாறு வரலாறு என்று நாம் சொல்வது சென்றகாலத்தில் நடந்தவற்றின் வரிசையை அல்ல. மாறாக சென்றகாலத்தில் நடந்தவற்றில் இருந்து நாம் இன்று வரிசைப்படுத்தி எழுதிக்கொள்பவற்றைத்தான்.அதாவது ஒரே சமூகம் வெவ்வேறு காலகட்டத்தில் தனக்கு வெவ்வேறு வரலாறுகளை எழுதிக்கொள்கிறது. நாம் இன்று தமிழ் வரலாறு என்று முன்வைக்கும் வரலாற்று வடிவமானது பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. நம்மிடம் தொல்வரலாறு இருக்கவில்லையா என்ன? இருந்தது, ஆனால் நவீனவரலாறு என நாம் சொல்வது முற்றிலும் வேறு. பழமையான வரலாறுகளுக்கும் நவீன வரலாற்றுக்கும் உள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43397

வரலாற்றெழுத்தின் வரையறைகள் 1

நாம் வரலாற்றை எப்படி எழுதிக்கொள்கிறோம்? நான் எழுதிய ‘ஈராறு கால்கொண்டெழும் புரவி’ குறுநாவலில் ஒரு காட்சி வரும். ஓரு சித்தர் ஞானமுத்தன் என்ற விவசாயியை ஒரு ஒரு மலைவிளிம்பில் நிறுத்தி அவனிடம் கீழே பார்க்கச் சொல்வார் ‘மண் மீதுள்ள வாழ்க்கை என்பது நீரின் ஒரு தோற்றம் மட்டும்தான்’ என்பார். ஞானமுத்தன் குழம்புவான். சட்டென்று அவன் கால்நழுவ அவன் அள்ளி எதையோ பிடித்துக்கொண்டு தப்புவான். அந்த அதிர்ச்சிக்கணத்தில் அவன் ஒருகணத்தில் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்வான் அவன் கீழே பார்ப்பான். விரிந்துகிடக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/43394

ஜடாயு இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ, நீங்கள் சொல்வது சரிதான். நம் மரபில், பண்பாட்டில் உள்ள பிரச்சினை அது என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், வரலாற்றெழுத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், தூண்டுதலையும், சுவாரஸ்யத்தையும் முதலில் மாணவர்கள் மனதில் உருவாக்க வேண்டுமே. இப்போதுள்ள பாடத்திட்டம் அதைச் செய்வதில் கடும் தோல்வியையே அடைகிறது. மிக மோசமாக எழுதப்பட்ட சலிப்பூட்டும் வரலாற்றுப் பாடங்கள் மாணவர்கள் வரலாற்றைக் கண்டு அஞ்சி ஓடவைக்கின்றன. அந்த ஆர்வத்தை உருவாக்கும் முகமாகவாவது அமர் சித்திரக் கதைகளைப் பாடத்திட்டத்தில் கட்டாயம் பயன்படுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/25037

வரலாறும் கதையும்

அன்புள்ள ஜெ, ‘கூடவே இன்னொன்றும் தோன்றியது. ஏன் குமாரபாலரை நாம் அறிந்ததே இல்லை? ராஜராஜ சோழனை ஏன் குஜராத்திகள் அறியவே இல்லை? ஹானிபாலை, நெப்போலியனை அறிந்திருக்கிறோம். சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான பிழைகளில் ஒன்று, எந்த வித வழிகாட்டுநெறிகளும் இல்லாமல் பாடத்திட்டங்களைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டமை. குறுகிய பிராந்தியவாதமும் இனவாதமும் அரசியல் நோக்குடன் நம் குழந்தைகள் மனங்களில் திணிக்கப்பட வழிவகுத்தது அது.’   http://www.jeyamohan.in/?p=24655 மிகச் சரியான அவதானிப்பு. அமர் சித்திரக் கதைகள் இதற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/24999