Tag Archive: வரலாறு

தகழி சிவசங்கரப்பிள்ளையின் ஏணிப்படிகள்

  கதையில், குறிப்பாக நாவலில் வாசிப்பார்வம் எப்படி உருவாகிறது? அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும்? சமகால வரலாற்று நாவல்களின் சவால் இது. சமகால வரலாற்றில் நாமறியாத தகவல்கள் குறைவு அபூர்வமான தகவல்களைப் பெரும்பாலும் கலைப்படைப்புகள் கண்டுபிடிப்பதில்லை. அவை தகவல் சார்ந்த புதுமைகளுக்காக முயல்பவை அல்ல. அறிந்தவற்றின் ஆழங்களையே அவை நாடுகின்றன. அறிந்த விஷயங்கள் மீதான புதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/222

அர்ச்சகர்கள், வரலாறு, கடிதங்கள்

ஜெ , கோவில் அர்ச்சகர்களைப் பற்றிய உங்கள் கோபம் நியாயமானதே , ஆனால் வீட்டின் உருப்படாத பிள்ளை விவசாயத்திற்கு அர்ப்பணிக்கப்படுவது போலத்தானே தமிழக கோவில் அர்ச்சர்களும் அந்த பணிக்கு வருகின்றனர்? அவர்களின் இன்றைய நிலைக்கு அவர்களா காரணம் , கேரள அர்ச்சகர்கள் எல்லாம் “பட்டரில் பெட்டனில்லை” என கம்பீரமாகத்தான் இருக்கிறார்கள் :) ஆனால் எதையும் போராடிப்பெறும் ஜனநாயக வலிமையின்மையும்் ,  ஒதுங்கிப்போகும் தன்மையும் சமூகத்தின் கடைக்கோடி ஆட்களாக ஆக்கிவிட்டது , ஆனாலும் அவர்கள்தானே இன்றைக்கும் ஆலயங்களை அழியாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/86339

ஒரு வரலாற்று நாயகன்

1975ல் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது எனக்கு வயது 13 தாண்டியிருந்தது. எட்டாம் வகுப்பு மாணவன். இருபது அம்சத் திட்டத்தைப் பற்றிய கட்டுரை,பேச்சுப்போட்டிகள் அப்போதெல்லாம் மாதம் இருமுறை நடக்கும். அனேகமாக நான் பரிசுபெறுவேன். ஒருகட்டத்தில் இருபதம்சத்திட்டத்தைப் பற்றிய சொற்பொழிவை கடைசியில் இருந்து ஆரம்பம் வரைக்கூட சொல்லும் திராணி உள்ளவனாக ஆனேன். இக்காலகட்டத்தில் நான் குமுதத்தின் தீவிர வாசகன். சாண்டில்யன் கனிந்திருந்த காலம், சுஜாதா விளைந்து வந்தார். அக்காலத்து குமுதன் கார்ட்டூன்களில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அடிக்கடி இடம்பெற்றார். சோடாப்புட்டிக் கண்ணாடி நீண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6347

கீதையின் முன்னிலையாளர்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் கீதை உரைத் தொகுப்பினைப் படிக்க ஆவல். “The Bhagavad Gita: A Biography” by Richard Davis எனும் நூலுக்கு மதிப்புரை எழுத முற்பட்ட போது உங்கள் தளத்திலுள்ள கீதை பற்றிய பதிவுகள் அந்நூலைப் புரிந்து கொள்ள உதவியது. அதை என் மதிப்புரையிலும் சுட்டிக் காட்டியே எழுதினேன். http://contrarianworld.blogspot.com/2014/12/the-bhagavad-gita-biography.html கீதை வர்ணாசிரமத்தை போதிக்கிறது என்று எழுதிய வாசகரின் கடிதத்திற்கு உங்கள் பதிலின் கடைசிப் பத்தி சுவாரசியமானது. அதற்கு முன், கீதை வர்ணாசிரமத்தை தூக்கிப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/81548

காந்தி, வரலாறு- கடிதம்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், இது என்னுடைய இரண்டாவது மின்னஞ்சல் கடிதம், முதல் கடிதம் இன்னும் பிரசுரமாகவில்லை, இருந்தாலும், துணிந்து இதை உங்களுக்கு எழுதுகிறேன். . ஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம்? என்ற தலைப்பில் Dec 19, 2012 அன்று வெளியிட்ட கேள்வி பதில் பகுதியின் மறு பிரசுரத்தை இன்று வாசித்தேன். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். இருந்தாலும், ”சரளாராணி சௌதராணியைப்பற்றி சொல்லிவிட்டேன் என்பதற்காக தமிழகத்தின் காந்திய அமைப்புகள் எவையும் ‘இன்றையகாந்தி’ நூலை வாங்கவில்லை” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80986

வரலாற்றெழுத்தும் மையக்கருத்தும்

ஜெ, வரலாற்றெழுத்தில் நான்கு மாறுதல்கள் கட்டுரையில் சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது என்று உள்ளது இது சரியா ,இல்லை இப்படி இருக்க வேண்டுமா ? “சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைத் தனிநிகழ்வுகளைக் கொண்டு ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது” கார்த்திக் அன்புள்ள கார்த்திக், சமூகத்தின் ஒட்டுமொத்த இயங்குமுறையைக் கொண்டு தனிநிகழ்வுகளை ஆராயும் போக்கு வழக்கொழிந்துள்ளது– என்பதே சரியானது. நீங்கள் சொல்வது நேர்மாறானது. மொமுக்லியானோ சொல்வதை இன்னும் எளிமையாக வரலாற்றுக்கு என ஒரு குறிப்பிட்ட இயக்கமுறையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/22206

எம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்

  1921இல் சென்னையில் பின்னி ஆலை வேலை நிறுத்தம் நடந்தது. இந்தியத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முக்கியமான போராட்டம் இது. திரு. வி.க. இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார். தொழிற்சங்க முன்னோடியான வாடியாவின் பங்களிப்பு இதில் இருந்தது. எம்.சி.ராஜா இந்தியாவில் தொழிற்சங்கப் போராட்டங்கள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. தொழிற்சங்க இயக்கமே குழந்தை நிலையில்தான் இருந்தது. மும்பை, கல்கத்தா, சென்னை போன்ற ஊர்களில் உள்ள ஆலை ஊழியர் நடுவேதான் அது அரும்பியிருந்தது.   இந்தியத் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆரம்பத்தில் அதற்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/5516

வையாபுரிப்பிள்ளை குறித்து

எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று என் துறைக்குத் தேவையான அளவுக்கு மட்டும் தெரிந்து கொள்பவன். என் கருத்துக்கள் ஒரு பொது நோக்கில் அறியக்கிடைத்தவையே. 1] எஸ்.வையாபுரிப்பிள்ளை முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையனவா ? இன்று அவரது இடம் என்ன ? அல்ல. எஸ்.வையாபுரிப்பிள்ளை தன் ஆய்வுகளை நிகழ்த்தி ஏறத்தாழ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுதத் துணிகிறேன். வகைப் படுத்தாமல் இலக்கியத்தை அறிந்து கொள்ளுவது சிரமம் என்பதனால், வரலாற்றுப் பின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு, எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற பிரிவினையைச் செய்யலாமே ஒழியச் சாதாரணமாக இப்படி ஒரு பிரிவினையைச் செய்வது அபாயகரமான ஒன்று. வகுப்பு வாதத்தின் பிடியில், அழிவை நோக்கி செல்லும் இந்த தேசத்தில், அது மேலும் பிளவு உருவாகவே வழி வகுக்கும். விமரிசன தளத்துக்கு அப்பால் வாசக தளத்தில் இப்பிரிவினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/370

2.மறைந்து கிடப்பது என்ன?

சாந்தோக்ய உபநிடதத்தில் ஆருணியாகிய உத்தாலகன் தன் மகன் ஸ்வேதகேதுவுக்குச் சொல்கிறான், மண்ணில் ஓடும் நதிகளெல்லாம் கடலையே அடைகின்றன. மாறுபட்ட சிந்தனைகளும் தரிசனங்களுமெல்லாம் இறுதியில் பிரம்மத்தையே சென்றடைகின்றன. ஐநூறுவருடத்துக்கு மேல் காலப்பழக்கமுள்ள  ஏதாவது ஒரு மதத்தில், ஒரு தத்துவசிந்தனைமரபில் இதற்கிணையான ஒரு முழுமைநோக்கு பதிவாகியிருக்கின்றதா? உலகசிந்தனைகளை இன்று நாம் இணையம் மூலம் எளிதாக தொட்டுச்செல்லமுடிகிறது. நீங்களே இதற்கான விடையைத்தேடிக்கொள்ளலாம். என் எளிய வாசிப்பில் நான் அபப்டி எதையுமே கண்டதில்லை. மனிதசிந்தனை வெளியில் இந்தியஞானமரபுடன் இணைநோக்கத்தகுதியான சிந்தனைமரபுகள் இரண்டே. தொன்மையான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1333

Older posts «

» Newer posts