Tag Archive: வண்ணக்கடல்

ஆசுரம்

அன்புள்ள ஜெ. வண்ணக் கடல் 66 இல் – சுவர்ணையின் செயல் – மிக உக்கிரமாக இருந்தது. மனம் சுழன்று கொண்டே இருந்தது. ஏற்கனவே தெரிந்த கதையிலும் மிகுந்த துயரம். ஏகலவ்யன் ஒவ்வொரு செயலும், சொற்களும் அவன் வில் வித்தை போன்றே சிறப்பாக..புதிய சிகரங்களுடன், சிறகுகளுடன் – அந்தரங்கமாக கண்ணீர் சிந்தினேன் – அந்த நிகழ்வில் சூழ்ந்திருந்த அனைவருக்காகவும்.. மிகச் சிறந்த நாடகத் தருணம். எனக்கு நவகண்டம் பற்றி அதிகம் தெரியாது. சில அம்மன் கோவில்களில், சிரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60312

கர்ணனின் கண்ணீர்

அன்புள்ள ஜெமோ, இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். பல முறை தங்களின் பல படைப்புகளுக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் ‘செயலின்மையின் மது’ தந்த மயக்கத்திலிருந்த படியால் எழுதவில்லை. ஆனால் இன்றைய(ஆகஸ்ட் 9) வண்ணக்கடலைப் படித்த பிறகு என் உணர்வுகளைக் கொட்டாவிட்டால் சாதாரண நிலைக்கு மீள்வது கடினம். வெண்முரசில் கண்களையும், மனதையும் நிறைக்கும் பல பகுதிகள் வந்திருந்தாலும், இன்றைய வண்ணக்கடலின் கர்ணனின் பட்டாபிஷேகம் பகுதி தங்களின் அறம் வரிசைக் கதைகள் தந்த அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60306

வண்ணங்களின் சுழி

வண்ணக்கடல் வண்ணக்கொந்தளிப்புகளின் கதை அல்ல. வண்ணத்திரிபுகளின் கதை. மகாபாரதத்தின் மாபெரும் அவலத்தை நிகழ்த்திய அடிப்படை விசைகளில் வெவ்வேறு காரணங்களால் வெளியேதள்ளப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், அடையாளமறுப்புக்கு உள்ளானவர்களின் வன்மம் முக்கியமானது. அவற்றை நோக்கி விரியும் புனைவுலகம் இது அந்தக் கதைகளை இணைக்கும் மையச்சரடாக உள்ளது இளநாகனின் மெய்த்தேடல். அது படிப்படியாக வளார்ந்து செல்கிறது. வெவ்வேறு நிலக்காட்சிகள் வழியாக. வெவ்வேறு சிந்தனை மரபுகள் வழியாக. மகாபாரதம் அனைவருக்குமான கதை. அனைவரும் தங்கள் கதைகளைக் கொண்டு சேர்த்துவைத்த களஞ்சியம். ஆகவே அது அசுரகுலத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60386

வண்ணக்கடல் நிறைவு

வெண்முரசு தொடரின் மூன்றாவது நாவலாகிய வண்ணக்கடல் இன்றுடன் முடிகிறது. என் வழக்கம்போல ஒரு புறவயமான வடிவத்தை மட்டுமே முடிவுசெய்தபின் எழுதத் தொடங்கினேன். நான் எழுதுவதென்ன என்பது எழுதும்போதே எனக்கும் தெரியவருவதன் ஈர்ப்பே என்னை எழுதச்செய்தவிசை. வண்ணக்கடல் என பெயரிட்டபோது இளைய பாண்டவர்கள்-கௌரவர்களின் உலகாக இது வரும் என நினைத்தேன். ஆனால் முதல் பத்து நாட்களுக்குள்ளேயே இதன் திசையும் இலக்கும் வேறு என நானே கண்டுகொண்டேன். மழைப்பாடல் மகாபாரதத்தில் உள்ள பெண்களினூடாகச் சொன்ன நாவல் என்றால் இது புறக்கணிக்கப்பட்டவர்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58235

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71

நிறைபொலி சூதரே, மாகதரே, பாடுங்கள்! தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது. பெருங்கடலைக் காணும்போது ஆறு தோன்றிய இடமெதுவென அறிந்துகொள்கிறார்கள். இப்பிரபஞ்சவெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது. வினாக்கள் என்பவை அதன் பல்லாயிரம் கரங்கள் மட்டுமே. அவை ஒவ்வொரு கணமும் துழாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் தளிர்முனைகள் உரியவர்களை கண்டுகொண்டு மெல்லச் சுற்றிவளைத்துக்கொள்கின்றன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58151

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70

பகுதி பத்து : மண்நகரம் [ 4 ] துரியோதனன் அவைக்களத்துக்கு கதையுடன் வந்தபோது துரோணர் சகுனியை களமிறங்கும்படி சொன்னார். புன்னகையுடன் வந்த சகுனி துரியோதனனுடன் அரைநாழிகைநேரம் தண்டுகோர்த்தான். அவன் கதை உடைந்து சிதறியபோது துரியோதனன் தன் கதையை அவன் தலையைத் தொடும்படி வைத்து எடுத்துக்கொண்டான். பின்னர் தம்பியர் துச்சகன், துச்சலன், ஜலகந்தன், சமன் ஆகிய நால்வரும் அவனை நான்கு திசைகளிலும் கதைகொண்டு தாக்கினர். அவன் அவர்கள் கதைகளை ஒரேசமயம் விண்ணில் தெறிக்கச்செய்தான். அதன்பின் விந்தன், அனுவிந்தன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58135

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69

பகுதி பத்து : மண்நகரம் [ 3 ] காஞ்சனம் எழுவதற்கு முன்னரே நீராடி ஈரம் சொட்டிய குழலுடன் தருமன் அரண்மனை இடைநாழியின் கருங்கல்தளம் வழியாக நடந்து உப சாலைக்குள் சென்றான். அங்கே இலக்குப்பலகையில் அம்பு தைக்கும் ஒலி கேட்டது. அவன் உள்ளே நுழைந்தபோதுதான் துரோணர் வில்லை தாழ்த்தியிருந்தார். அவன் வருகையை அவர் அறிந்திருந்தாலும் பொருட்டாக எண்ணவில்லை. “நம் கையிலிருந்து எழும் அம்பு தன் தன்மையை ஒருபோதும் உணரலாகாது. நம் ஆன்மா அதனுடன் பறந்துகொண்டிருக்கவேண்டும்” என்றார். “காற்றில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58109

நவீன துரோணர்

அன்புள்ள ஜெயமோகன், ஒரு இடைவெளிக்கு பின் எழுதுகிறேன். ஒவ்வொரு நாளும் படித்து மேலும் மேலும் என்று உள்ளே தள்ள முடியவில்லை என ஒரு மயக்கம் இந்திர விழா ஒரு ரம்யம். இளமையின் வேகமாய் – மலர்ந்த கனவு போல் நன்கு இருந்தது. பொங்கல் விழா சமயங்களில் பூ நோன்பு என்று என் இளைமையில் கண்ட காட்சி வந்து சென்றது….பெண்கள் காடு மேடு சென்று கூடைகளில் எடுத்து மாலையில் கூட்டமாய் கோவில் செல்கையில் அதில் கை விட்டு அள்ளி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58435

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 68

பகுதி பத்து : மண்நகரம் [ 2 ] அதிகாலையிலேயே நகரை சுற்றிவிட்டு அரண்மனையை ஒட்டிய களமுற்றத்துக்கு வந்த துச்சாதனன் துரியோதனனிடம் பணிந்து “களம் அமைந்துவிட்டது மூத்தவரே” என்றான். “நாளை படைக்கலப்பயிற்சிக்கு நாள்குறித்திருக்கிறார் பிதாமகர்” என்றான். “இப்போது அங்கே கொற்றவையை பதிட்டை செய்து குருதிப்பலி கொடுத்து களபூசை செய்துகொண்டிருக்கிறார்கள்.” கதைப்பயிற்சியை நிறுத்தி மெல்லிய மூச்சுடன் “நாளைக்கா?” என்று துரியோதனன் கேட்டான். “ஆம், விழாவில் இந்நகரத்து மக்கள் மட்டும் கலந்துகொண்டால்போதும் என பிதாமகர் எண்ணுகிறார் என்றார்கள். முன்னரே நாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58104

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67

பகுதி பத்து : மண்நகரம் [ 1 ] இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச் சொன்னார். “சிராவண மாதம் திருவோண நட்சத்திரத்தில் நூற்றெட்டு மலைக்குடிகளும் கூடும் அவ்விழாவில் நூற்றெட்டு தொல்குடிகளும் ஒற்றை உடலாக ஆகின்றன. இளையவர்களிடம் விளையாட அசுர கணத்து மூதாதையர் அனைவரும் உருக்கொண்டு எழுந்து வருவார்கள்” என்றார். “மூதாதையரா?” என்று இளநாகன் கேட்டான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/58059

Older posts «

» Newer posts