Tag Archive: வண்ணக்கடல்

வெண்முரசு நூல்கள் வெளியீட்டு விழா – 2014

  வெண்முரசு நூல்கள் மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் வெளியீட்டு விழா வரும் நவம்பர் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்த மேலதிக தகவல்களும், விரிவான நிகழ்ச்சி நிரலும் விரைவில் வெளியிடப்படும். தேதி : நவம்பர் 9, 2014, ஞாயிற்றுக்கிழமை. இடம் : சென்னை ம்யூசியம் தியேட்டர் அரங்கம் நேரம் : மாலை 5 மணி தொடர்புக்கு:  பாலா: +91 9842608169 வெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63987

நகரங்கள்

அன்புள்ள ஜெ சார் மழைப்பாடல், வண்ணக்கடல் இரண்டையும் ஒரே மூச்சாக வாசித்துமுடித்தேன். ஏற்கனவே நான் தொடராக வாசித்திருக்கிறேன். மழைப்பாடல் புத்தகம் கிடைத்தபோது அதை வாசித்து அதே சூட்டில் நிறுத்தாமல் வண்ணக்கடலையும் வாசித்தேன் இருநாவல்களிலும் நகரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அஸ்தினபுரம் அழுத்தமாக முன்னாடியே வந்துவிட்டது. அஸ்தினபுரத்தின் அத்தை டீடெய்ல்களும் இப்போது எனக்கே தெரியும் .ஒரு நல்ல வரைபடம் தயாரிப்பேன் [நான் ஒரு சிவில் எஞ்சீனியர்] அதன்பிறகு நகரங்கள் வந்துகொண்டே இருந்தன. சிபி நாட்டு தலைநகரம் விசித்திரமானது. பாறைகளை வெட்டித்துளைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63175

தென்னகசித்திரங்கள்

ஜெ, வெண்முரசு இருநாவல்களை இப்போதுதான் வாசித்துமுடித்தேன். மழைப்பாடல், வண்ணக்கடல். இரண்டும் இரண்டுவகையான அனுபவங்கள். நிலம் என்றவகையில் மகாபாரதம் நிகழும் இடங்களை மட்டுமே காட்டியது மழைப்பாடல். அஸ்தினபுரி, காந்தார நாடு, சதசிருங்கம் எல்லாம் கண்முன்னால் காட்சியாக வந்திருந்தது ஆனால் மகாபாரதம் நடக்காத இடங்களான தென்னாடு, வேசரநாடு கலிங்கநாடு போன்றவற்றையும் ஆசுரம் போன்ற  நிலப்பரப்பையும் விரிவாகவும் நுணுக்கமாகவும் காட்டியது வண்ணக்கடல் இந்த வேறுபாடு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா செந்தில் அன்புள்ள செந்தில் ஆம். பாரதம் என்றால் பாரத மண்ணேதான். மகாபாரதத்தில் மொத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63171

வண்ணக்கடல்- அன்னம்

அன்புள்ள ஜெ சார் நான் வண்ணக்கடல் நாவலை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அது தொடராக வந்தபோது வாசித்தேன். ஆனால் சரியான வாசிப்பு இல்லை என்று தோன்றியது. நூலாக வரும்போது மீண்டும் வாசிக்கலாமென்று நினைத்தேன். ஆனால் இன்னும் நூலே வந்துசேரவில்லை. ஆகவே மீண்டும் ப்ரிண்ட் எடுத்து வாசித்தேன். இதில் ஒரு வசதி என்னுடன் தியானப்பயிற்சிக்கு வரும் நண்பரும் அதை வாசிப்பார். நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். இது நாவலை மேலும் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது வண்ணக்கடலில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் தத்துவ விவாதங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63790

நீலமும் இந்திய மெய்யியலும்

அன்பு ஜெயமோகன், வெண்முரசின் எப்பகுதியையும் நான் படித்ததில்லை. மகாபாரதத்தின் கதைத்தொகுதியை உங்கள் எழுத்தின்வழி நீங்கள் அணுகும் முயற்சி மட்டுமே புரிந்திருந்தது. இயல்பான மகாபாரதக் கதைப்போக்கை அப்படியே கொண்டுவருவதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதையும் நான் அறிந்திருந்தேன். மகாபாரதம் எனும் காப்பியம் ஆதியின் மனிதகுல வரலாற்றைப் புனைவு கலந்து சொன்ன வாய்மொழிக்கதைகளின் தொகுப்பு என்பதான என் புரிதல் அதையும் தாண்டிய தத்துவத்தளத்திற்கு விரியக் காரணமாக இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதற்காக இவ்விடத்தில் உங்களுக்கு நன்றி பகர்கிறேன். எனினும், வெண்முரசில் வெளிப்பட்டிருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/63435

வண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்

வண்ணக்கடல் இம்மாதம் நூலாக வெளிவரவிருக்கிறது. படங்களை அச்செடுப்பதில் தாமதமாகிறது. அதற்கான தொழில்நுட்பச் சிக்கல்கள். வாசகர்களில் சிலர் வண்ணக்கடலை இப்போதுதான் வாசிக்கிறார்கள். அவர்களுக்காக வண்ணக்கடல் பற்றி வந்த கருத்துக்களின் ஒரு தொகுப்பு வண்ணக்கடல் எதிர்வினைகள் அனைத்தும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/63537

குருவின் தனிமை

ஜெ, வண்ணக்கடல் விட்ட அத்தியாயங்களை எல்லாம் சேர்த்து இப்போதுதான் வாசித்து முடித்தேன். புத்தகமாக வாசித்தாகவேண்டும் என்றும் தோன்றியது. ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது ஏராளமான உள்ளோட்டங்கள் தெளிவடைகின்றன இதில் எனக்குள்ள ஒரு பார்வை என்னவென்றால் இந்நாவலின் மையமே துரோணர்தான் . ஒரு பண்பாட்டின் ஆன்மாவே குருநாதர்தான். அவர் corrupt ஆகிவிட்டால் அது அங்கிருந்து எல்லா கேடுகளுக்கும் கொண்டுசெல்கிறது. கர்ணன் ஏகலைவன் எல்லாருடைய வன்மத்துக்கும் காரணம் அவர்தான் ஆனால் அவரது குருவான பரத்வாஜர்தான் இன்னும் ஆதிகாரணம். இப்படியே யோசித்துக்கொண்டு போனால் விதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62273

வண்ணச்சுழல் – சதீஷ்குமார்

பகடியுடன் தொடங்கும் வண்ணக்கடல் இளமையின் செழுமையை எதிர்நோக்க வைத்தது. மாறாக நாம் காண்பதோ ஆணவம், வன்மம், புறக்கணிப்பின் வலி. பெண்களின் அக விழைவுகளுடன் விரிந்த மழைப்பாடலுக்கு பின் வண்ணக்கடல் சிறுவயதில் கௌரவர் பாண்டவர்கள் கொள்ளும் நிலைகளை கோடிட்டு காட்டுகிறது. மாமதுரையில் தொடங்கி மிருத்திகாவதி வரை செல்லும் அஸ்தினபுரி நோக்கிய இளநாகனின் பயணமாக விரியும் இந்நாவலில் நாமும் பண்டைய இந்திய நிலப்பரப்பில் பயணிக்கிறோம். வெறும் இடங்களாக இல்லாமல் நம் ஆசிரியரின் எழுத்தில் நமது நிலப்பரப்பின் தனித்தன்மைகளை, அங்கு இயற்கையுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61894

வண்ணக்கடல் – பாலாஜி பிருத்விராஜ்

வண்ணக்கடலை இரண்டாவது முறை முழுமையாக வாசித்தபின் ஓர் காட்சி தொடர்ந்து நினைவில் வந்துகொண்டே இருந்தது. அர்ஜுனன் துரோணரின் குருகுலத்திலிருந்து அஸ்தினாபுரத்திற்கு வந்தபின் இளைய கௌரவர்களுடன் மரப்பந்து விளையாடும் காட்சி அது. ஆடலின் ஒரு கட்டத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் துனுக்குறல் “இப்பந்து மனிதர்களை வைத்து விளையாடுகிறதோவென”. மொத்த நாவலையும் இக்காட்சியை அச்சாக வைத்து மீண்டும் வாசிக்கலாம். வில்லும் கதையும் மனிதர்களை வைத்து விளையாடும் ஆட்டமாக நாவலை வாசிக்கலாம். ஆயுதம் என்பதுதான் என்ன? மனிதனின் காமகுரோதமோகங்களின் புறவடிவம் தானோ? அல்லது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61493

வண்ணக்கடல் – முரளி

அன்புள்ள ஜெயமோகன் , வண்ணக்கடல் படிக்கும் பொழுது சுழற்சியில் சிக்கியவன் போல இருந்தேன் ,படித்து முடித்த பிறகு சுழற்சி நின்று நிரோடத்தின் அடியில் வண்டல் படிவது போல செழுமையான ஒரு அடித்தளம் கிடைத்தது.இளநாகன் உலகம் முற்றிலும் யாதர்த்த நடையும் ,மூலக்கதை மந்திர உலகில் இருபது போல வடிவம் கொண்டுள்ளது ,மேலும் இளநாகன் வரும் பகுதிகள் ஒரு சிறு முன்னுரை போன்றும் ,பாரதத்தின் நில அமைப்பையும் அங்கிருந்த குலக்கதைகளையும் கூறுவது சிறப்பான ஒன்று .வாசகனின் கற்பனைக்கு சவால் விடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61462

Older posts «