Tag Archive: வணங்கான்

வணங்காதவர்கள்

இனிய ஜெயம், சமீபத்தில் தோழி ஒருவருக்கு, பி ஏ கிருஷ்ணன் எழுதிய ஒரு களிறு போதுமா எனும் கட்டுரையின் சுட்டியை அனுப்பி இருந்தேன். சிதம்பரம் நந்தனார் பள்ளி விழாவுக்கு சென்ற கிருஷ்ணன், அவ் விழாவுக்கு வந்த திருமா அவர்களை [திருமா வளவன்] அவரின் ஆளுமையை, கம்பீரத்தை காதலுடன் கண்டு, அக் காதல் குறையாமல் எழுதிய கட்டுரை. அங்கு திருமாவுக்கான அன்பை,ஆதரவை, எழுச்சியை காண்கிறார். பட்டத்து யானை. ஒரு சமூகத்தின் எழுச்சிக்கு ஒரு களிறு மட்டும் போதுமா? என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/76235

வணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி

இந்த இரண்டு கதைகளையும் இணைத்து ஒரு வாக்கியம் சொல்லவேண்டும் என்றால் அதை இப்படிச் சொல்லலாம்: நூறு நாற்காலிகளில் அமர்வது பெரிதல்ல, அப்படி அமர்ந்த பிறகு வணங்காதவர்களாக இருக்கவேண்டும். கேசவமணி கட்டுரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/60830

அறம் – சிக்கந்தர்

அன்புள்ள ஜெ. வணக்கம். சமீபத்தில் தங்களின் அறம் தொகுப்பை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். கிட்டதட்ட எல்லா கதைகளையும் கண்களில் தேங்கிய நீருடன்தான் வாசிக்க முடிந்தது. ஒரு கதை முடிந்து அடுத்த கதையை உடனடியாக வாசிக்க முடியாது வாசித்த கதை தந்த துயரத்தில்/அதிர்வில்/இன்னும் சொல்ல தெரியாத காரணங்களால் புத்தகத்தை மூடி வைத்து வெறுமனே பார்த்துகொண்டிருப்பேன். இந்த கதையில் மனவெழுச்சி எழுப்பும் எல்லா மனிதர்களிடமும் ஆதாராமான நீதி இருந்தது. இப்படியான மனிதர்கள் அருகி வருகிறார்கள் என்பதே நிதர்சனம் என்று நினைக்கிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/55360

இலட்சியவாதமும் வாழ்க்கையில் வெற்றியும்

அன்புள்ள திரு. ஜெயமோகன், வணக்கம் நலம் அறிய ஆவல், இபோதுதான் “அறம் ” புத்தகத்தை வாசித்து முடித்தேன், முன்பே உங்கள் வலைத்தளத்தில் ‘வணங்கான் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு’ வாசித்து உள்ளேன் . ஆனால் ‘அறம் ” புத்தகத்தை வாங்கவில்லை (ஆனால் ஓர் ஆண்டுக்கு முன்பே என் நண்பன் ஒருவனுக்கு அவன் திருமணத்திற்கு ‘அறம் ‘ புத்தகத்தை பரிசளித்தேன், இன்னொருவருக்கு ‘அறம் ‘ புத்தகத்தை சிபாரிசு செய்து சென்னை ‘நியூ புக் லேன்ட் இருந்து வாங்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/36510

கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தங்களது அறம் நூல் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் கதையான அறம் வாசித்து அதன் பாதிப்பில் இருந்து வெளி வர இயலாததால் தொடர்ந்து படிக்கவில்லை. நேற்று வணங்கான் வாசித்தேன். “மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு.” கடவுள் எத்தனையோ முறை இக்கட்டான சூழல்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அப்போதெல்லாம் மிகுந்த நன்றிமட்டுமே இருந்தது. உங்கள் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/23090

வணங்கான்,நேசமணி – கடிதம்

அன்பு ஜெயமோகனுக்கு, ‘வணங்கான்‘ நாஞ்சில் நாட்டில் நிலவிவந்த சமூகக்கொடுமையை மையப்படுத்திச் சமீபத்தில் வெளிவந்திருக்கும் நல்லகதை. நாஞ்சில் தமிழிலும், சில இடங்களில் நெல்லைத்தமிழிலும் மிக லாகவமாக கையாண்டிருக்கிறீர்கள். ஒரு முக்கிய குறிப்பை, சரித்திரம் தெற்றிவிடக் கூடாது என்பதற்காக இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மார்ஷல் நேசமணி தலைமை தாங்கி நடத்திய கட்சி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ். இது அன்றைய தமிழ்நாடு காங்கிரஸின் அங்கமல்ல. நேசமணியின் முழு அரசியல் வாழ்க்கை, அவரது வலது கரமும் அவர் இறக்கும் வரையிலும் அவரோடு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/13935

வணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்

அன்புள்ள ஜெயமோகன் சார், நலம் தானே? சோற்றுக்கணக்கு கதை படித்ததும் எனக்குள் எழுந்த முகம் “கறிசாப்பாடு” பாய் என்கிற பெரியவருடையது. பத்தாண்டுகளுக்கு முன் நான் ஓவியக்கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடன் சென்னைக்கு எடுத்து வந்தது ஏழ்மையை மட்டுமே. விளம்பர பலகைகள் வரைந்து கிடைக்கும் காசில் தான் படித்தேன். கையில் கிடைக்கும் பத்திருபது ரூபாயில் தெருக்கடைகளில் தான் பெரும்பாலும் சாப்பாடு. அதிலும் மட்டமான ஆரோக்கியமில்லாத உணவு. அப்போது மிக ஒல்லியாக இருப்பேன். கறி சாப்பாட்டிற்கு நாவு ஆசைப்படும் காலம். ஓவியக்கல்லூரிக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12467