Tag Archive: வடக்குமுகம்

கடிதங்கள்

அன்புள்ள ஜெயன், தங்களது குறுநாவல்கள் தொகுப்பை வாசித்துக் கொண்டு இருந்தேன். கிளிக்காலம், பரிணாமம், லங்கா தகனம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன. நீங்கள் சொல்வது போல, நாவல்களுக்கு உரிய உள்விரிவும், சிறுகதைக்கு உரிய உச்சமும் இணைந்து வரும் ஆக்கங்கள். தங்களது டார்த்தீனியம் படித்தேன், அந்த நடையும் வர்ணனைகளும் இயைந்து அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது, ஆனால் அதன் உள் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் இங்கே குறிப்பிடும் டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடு என்று புரிகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35669

வடக்குமுகம் [நாடகம்] – 6

(சிகண்டி வணங்கி விடைபெறுகிறான்) நிழல்: மீண்டும் நீ தவறவிட்டு விட்டாய். பீஷ்மர்: (மெதுவாக திரும்பி நிழல்கள் அளித்த தன் முதிய வேடத்தை எடுத்து அணிந்தபடி) ஆம். ஆனால் அது மட்டுமே சாத்தியம். நிழல்: ஏன் ? பீஷ்மர்: ஏனெனில் இது காலத்தின் இக்கரை. இங்கு இருந்து நாம் கூவும் எதுவும் மறுகரையில் ஒலிக்காது. (அம்புப்படுக்கையில் கால்களை நீட்டிக் கொள்கிறார்) ஆனால் இந்த அம்புகளின் எரியும் வலியை நான் என் உடல் முழுக்க உணர்ந்து கொண்டிருந்தேன் அப்போது. நிழல்: …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6159

வடக்குமுகம் [நாடகம்] – 5

[கர்ணன் அரங்கில் நுழைகிறான்) கர்ணன்: பிதாமகரை வணங்குகிறேன். பீஷ்மர்: உனக்கு புகழ் உண்டாவதாக. கர்ணன்: (அருகே வந்து) தாங்கள் என்னை ஒருபோதும் ஆயுளுடையவனாக இருக்கும்படி வாழ்த்தியதில்லை. பீஷ்மர்: அது ஏன் என உனக்கே தெரியும். கர்ணன்: இங்கு வந்து தங்களை சந்திக்கலாமா கூடாதா என்று என் மனம் ஊசலாடியது. பீஷ்மர்: உனக்கு மகிழ்ச்சி குறைந்திருக்கும். இந்த அம்புகள் அர்சுனனுக்குரியவை. கர்ணன்: பிதாமகரே. பீஷ்மர்: இனி நீ ஆயுதமேந்தலாம் அர்ஜுனனை வென்று அஸ்தினபுரியை கைப்பற்றலாம் . . . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6158

வடக்குமுகம் [நாடகம்] – 4

[பீஷ்மரது  நிழல் அவர் தோளைத் தொடுகிறது.) நிழல்: உன் உடைகள். உன்னுடைய முகம் இதோ. பீஷ்மர்: உம் (பெருமூச்சுடன் கை நீட்டுகிறார்) நிழல்: எந்த வேடங்களும் சீக்கிரமே நம் இயல்புகளாக மாறி விடுகின்றன. (பீஷ்மர் பதில் கூறாமல் மெல்ல தன்னுடைய உத்தரீயம் கச்சை ஆகியவற்றை களைந்து நிழலுக்கு தருகிறார். இன்னொரு நிழல் அவரது நரை முடியையும் தாடியையும் அளிக்கிறது. வயோதிக நடையுடன் மீண்டும் வந்து தன் அம்புப்படுக்கைமீது படுத்துக் கொள்கிறார். நிழல்கள் கலைந்தாடுகின்றன. போர்க்களத்து ஒலிகள் தொலைவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6157

வடக்குமுகம் [நாடகம்] – 3

அம்பை என்று சொல். எவ்வளவு அழகான வார்த்தை. உலகிலேயே அழகிய ஒலியல்லவா அது. சொல்லிவிடு. அம்பை என்று மட்டும் சொல்

Permanent link to this article: https://www.jeyamohan.in/6156

வடக்குமுகம் ( நாடகம் ) 2

பீஷ்மர்: யாரங்கே. காரியக்காரன்: பிரபு. பீஷ்மர்: இளவரசி அவள் விரும்பிய இடத்திற்குச் செல்ல ஆவன செய்யுங்கள். விசித்திர வீரியர்: என்னை அம்மா பார்க்க வேண்டும் என்றார்கள். இப்போது இந்தத் தகவலை அவர்களிடம்…. பீஷ்மர்: அவர்கள் அழைத்ததே இதற்காகத்தான் செல். (பெரூமூச்சுடன்) என் வணக்கத்தை கூறுக. (விசித்திர வீரியர் செல்கிறார்.) பீஷ்மர்: யாரங்கே ? ஒரு வீரன்: (வந்து வணங்கி) பிரபு யாரை அழைப்பது ? பீஷ்மர்: வேண்டாம். நீ எனக்கு சற்று மது கொண்டுவா. நில். சற்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6155

வடக்குமுகம் ( நாடகம் ) – 1

அரங்கு வெண்திரைப் பின்னணியும் அமர்வதற்கான ஓரிரு வெண்ணிறத் திண்டுகளும் கொண்ட மேடை .திண்டுகள் நகர்த்தக் கூடியவையாகவும் கனமற்றவையாகவும் இருக்கவேண்டும். . வேறு எவ்விதமான பின்னணியும் அரங்கப் பொருட்களும் இல்லை. மேடையில் எப்போதுமிருப்பவர்கள் பத்து பின்னணிப் பொது நடிகர்கள். நடனம் போன்ற அசைவுகள் கொண்டவர்கள். ஒரே போல இறுக்கமான, தனித்தன்மை ஏதும் இல்லாத உடையணிந்தவர்கள் இவர்கள். [தேவையென்றால் எண்ணிக்கை அதிகம் இருக்கலாம்.] அரங்கின் அனைத்து தேவைகளையும் இவர்கள் தங்கள் உடல்மூலம் நிரப்ப வேண்டும். போர்களத்துப் பிணங்கள், ஓநாய்கள், புரவிகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6151