Tag Archive: லோக்பால்

அண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா?

பலவருடங்களுக்கு முன்னர் காந்தியைக் கண்டடையும் தேடலில் இருந்த நாட்களில் அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராமத்திற்குச் சென்றிருக்கிறேன். அவரது சாதனைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். அவர் அந்த கிராமநிர்மாணத் திட்டங்களில் இருந்து இயல்பாகக் கிராமத்து ஊழல்களை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு வந்தார். இயல்பாகவே அந்தப்போராட்டம் மகாராஷ்டிர அரசியலில் இருந்த ஊழல்களுக்கு எதிரான போராட்டமாக மலர்ந்து இன்று இந்திய அளவிலான போராட்டமாக மலர்ந்திருக்கிறது. எல்லாவகையிலும் இது ஒரு காந்தியப்போராட்டம் என்பதற்கு அது வந்திருக்கும் வழியே சான்றாகும். காந்தியப்போராட்டத்தின் இயல்புகள் என ஆறு விஷயங்களைச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19815

அண்ணா ஹசாரே- ஊழலை மேலிருந்து ஒழிக்கமுடியுமா?

அன்புள்ள ஜெ, முன்பே சிலர் கேட்ட கேள்விகளில் உள்ள ஒரு விஷயத்துக்கு நீங்கள் பதிலே சொல்லவில்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதாவது ஊழலை ஒழிக்க மேல்மட்டத்தில் இருந்தா நடவடிக்கை எடுப்பது? கீழ்மட்டத்திலேதானே ஊழல் உள்ளது? கீழிருந்துதானே நடவடிக்கைகளை எடுக்க முடியும்? மக்கள் ஊழல் நிறைந்தவர்களாக இருக்கும்போது எப்படி மேல்மட்டத்திலே ஊழல் கண்காணிப்புக்காக ஓர் அமைப்பை உருவாக்கி ஊழலை ஒழிக்கமுடியும்? ஆகவே லோக்பாலால் என்ன பிரயோசனம்? நாம் ஒவ்வொருவரும் ஊழல் செய்யமாட்டோம் என்று நினைக்காமல் எப்படி ஊழலை ஒழிக்கமுடியும்? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19924

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

. இதை காங்கிரஸ் ஒரு வாய்ப்பாக உருவாக்கி இருக்கிறதா? அல்லது வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறதா? (ராகுலைக் கொண்டு வருவதற்கு) எனது பதில்: இதை காங்கிரஸ் உருவாக்கிய இயக்கம் கிடையாது. ஏனெனில் இது இரு முனையும் கூரான கத்தி இதை வைத்து காங்கிரஸ் பயன் அடைவதை விட பாதகமாக முடிவதற்கான வாய்ப்பு மிக அதிகம். தன் தலையில் மண்ணை வாரிப்போடும் வாய்ப்பை எவரும் வலிந்து உருவாக்க மாட்டார்கள். இதை விட எளிதாக ராகுலை உள்ளே கொண்டுவருவதற்கு இதை விட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20054

அண்ணா ஹசாரே-கடிதங்கள்

ஞாநியின் நேர்மை பத்தி பேச உங்களுக்கு யோக்யத இல்ல Mr.ஜெயமோகன் . அந்த அளவுக்கு நீங்க இன்னும் வளரல . தயவு செய்து உங்க கருத்துக்கு மறுப்பு எழுதுங்க அல்லது ஞாநியிடம் மன்னிப்பு கேளுங்க இல்ல நீங்க வாழ்வில் நினைத்த இலக்கை அடையவே முடியாது …..சத்தியமா…….. இப்படிக்கு திருநெல்வேலியில் இருந்து ஒரு பாமரன் . madhavan M Dear Jeyamohan sir, I made up my mind to write you someday for quiet …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20013

லோக்பால் போதுமா?

ஜெ, நேரடியாகக் கேள்விகளுக்கே வருகிறேன்: அன்னா அவர்களின் தனிப்பட்ட நேர்மை பற்றி எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. அன்னாவின் நோக்கத்தின் மீதும் எனக்கு எந்த ஒரு கேள்வியும் இல்லை. அவர் பின்பற்றும் அஹிம்சையையும் பரிபூரணமாக மதிக்கிறேன். எனக்கு இருக்கும் ஒரே கேள்வி, லோக்பால் மூலமாக என்ன சாதிக்கப் போகிறோம் என்பதுதான். ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் ஊழல் செய்பவர்களுக்கு வெண்சாமரமா வீச சொல்கிறது?. அவைகள் தோற்று போவதற்குக் காரணம் என்ன?. மேலும் அந்தக் குழுவில் இப்போதைக்கு அண்ணாவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19914

அண்ணா, இன்றைய பேச்சுவார்த்தைகள்

ஜெ, இன்று லோக்பால் சம்பந்தமான அனைத்துக்கட்சிக் கூட்டத்திலே என்ன நடந்தது என்று பார்த்திருப்பீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அருண் அருண், எற்கனவே நான் சொல்லிவந்ததுதான். எதற்காக இப்படி ஒரு மக்களியக்கம் தேவையாகிறது? இந்திய பாரளுமன்ற ஜனநாயக அமைப்பே ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றை ஒன்று கண்காணிப்பதையும் கட்டுப்படுத்துவதையும்தான் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது இன்று விசித்திரமான ஒரு நிலை. ஊழலில் சிக்கியுள்ள ஆளும்கட்சி ஊழலில் சிக்கிய முக்கிய எதிர்க்கட்சியை சகாவாகப் பார்க்கிறது. இருதரப்பும் ரகசியமாக ஒத்துப்போய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20091

காங்கிரஸும் அண்ணாவும்

அண்ணா ஹசாரேவை காங்கிரஸ் எதிர்கொள்ளும் விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் ஜனநாயக முறைப்படித்தானே செயல்படுகிறார்கள்? அதை நீங்கள் பாராட்டவில்லையா? சாமிநாதன் அன்புள்ள சாமிநாதன் இன்றைய செய்தி, சற்றுமுன் பார்த்தது. அண்ணா ஹசாரே போராட்டத்தை எதிர்க்க மதச்சிறுபான்மையினரை ஒருங்கிணைத்துள்ளது காங்கிரஸ் அரசு http://expressbuzz.com/nation/foxed-upa-government-tries-to-play-minority-card/306758.html இவர்கள் எல்லாருமே முன்னர் அண்ணாவை ஆதரித்துப்பேசியவர்கள். சட்டென்று நேரெதிராக திரும்புகிறார்கள். திருப்பப்படுகிறார்கள். அண்ணா ஹசாரே போராட்டம் உயர்சாதிப்போராட்டமாம், சில தலித் தலைவர்களை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது. அவர்கள் அண்ணா ஹசாரேவுக்கு எதிராகப் போட்டிப் போராட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20057

அண்ணா-எதிர்வினைகள்

“நாளையே விளம்பரத்துக்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் இருக்கும் அருந்ததி ராய் போன்றவர்களும் இப்படிக் கிளம்பக்கூடும்.” வந்து விட்டார்! இன்றைய இந்து நாளிதழில் அவரது ” நான் அன்னாவாக இல்லாமல் தான் இருப்பேன் ” என்ற கட்டுரையை யாராவது படித்தீர்களா..? அவர் கருத்து, ”அன்னாவின் வழிமுறைகள் வேண்டுமானால் காந்திய வழியிலிருக்கலாம். ஆனால் கோரிக்கைகள் கண்டிப்பாக அப்படி அல்ல ” அன்னாவின் போராட்டத்தை பல்வேறு வழிகளில் ஆய்வு செய்து எழுதப்பட்டு வரும் தொடர்கட்டுரைகளைப் படித்துக்கொண்டிருந்தபோது மேசையில் வந்து விழுந்தது பேப்பர். அருந்ததியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19963

அண்ணா ஹசாரே, ஞாநி, சோ

அன்புள்ள ஜெ, அன்னா ஹசாரேயின் போராட்டத்தைப்பற்றிய சர்ச்சைகளில் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் தொலைக்காட்சியில் வந்து அது ஒரு போலிப்போராட்டம் என்று வாதிடுகிறார்கள். லோக்பால் மசோதாவுக்கான தேவையே கிடையாது, இப்போதிருக்கும் சட்டங்களே போதுமானது என்று சொல்கிறார்கள். ஞாநி இப்போதே இருக்கும் சட்டத்தைக்கொண்டுதான் கனிமொழியையும் ஆ.ராசாவையும் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றார். அன்னா ஹசாரேயின் கூட இருப்பவர்களெல்லாரும் வட இந்தியர்கள் , மராட்டியர்கள் என்கிறார்கள். லோக்பால் அமைப்புக்காக அன்னா முன்வைக்கும் பட்டியலில் தமிழர்கள் இல்லை என்று சொன்னார். அதே கருத்தைத்தான் சோவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19834