Tag Archive: லோகித தாஸ்

லோகி.5, தனியன்

லோகி அவரது வாழ்க்கையில் செய்த ஆகப்பெரிய பிழை கஸ்தூரிமானை அவரே தயாரித்தது. இந்தியத்திரைவானில் எத்தனையோ பெரும் கலைஞர்களை கவிழ்த்தது தயாரிப்பு ஆசை. அந்த பொறி மிக வசீகரமானது. ஒரு கலைஞனுக்கு அவன் கலைமேல் அபாரமான நம்பிக்கை இருக்கும். தன் கலை வணிகவெற்றியாக ஆகி பணம் கொட்டுவதையும் அவன் கண்டுகொண்டிருப்பான். ஏன் தானும் சம்பாதிக்கக் கூடாது என அவன் மனம் எண்ணும் மேலும் வெற்றியின்போது கலைஞர்களுடன் எப்போதும் துதிபாடிகளும் ஒட்டுண்ணிகளும் சேர்ந்துகொள்வார்கள். புகழையும் பாராட்டையும் விரும்பும் கலைஞனின் மனத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3377

லோகி. 3, ரசிகன்

லோகிக்கு சின்னவயசு நெல்சன் மண்டேலாவின் சாயல் கொஞ்சம் உண்டு. ஆனால் லோகி நல்ல கருப்பு இல்லை. மாநிறம் என்றே சொல்லிவிடலாம். சுருண்ட கூந்தலை தோளில் புரளவிட்டிருப்பார்.  அவரது கழுத்து குறுகியது, தடித்தது. பின்பக்கம் பிடரிமயிரும் முன்பக்கம் தாடியும் அதை மறைத்துவிடும். குள்ளமானவர். தொப்பை உண்டு. ஆனால் சுறுசுறுப்பான உடலசைவுகள். காலையிலேயே எழுந்து நடக்கச்செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. லக்கிடியில் என்றால் கிராமச்சாலைகளில் நெடுந்தொலைவு செல்வார். ஏதாவது ஒரு டீக்கடையில் புகுந்து டீ குடிப்பார். அங்கேயே மாத்ருப்பூமியும் மலையாள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3352

லோகி,2. கலைஞன்

லோகித தாஸின் கிரீடம் என்ற படம் அவரை ஒரு நட்சத்திர எழுத்தாளராக ஆக்கியது. மோகன்லாலை சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியது.  இந்தியமொழிகளில் அந்தப்படம் மீண்டும் மீண்டும் பல்வேறு வடிவங்களில் அவதாரம் கொண்டிருக்கிறது. மகனை ஒரு இன்ஸ்பெக்டர் ஆக்கவேண்டும் என்ற கனவுடன் வாழும் கான்ஸ்டபிள் அப்பா. அப்பா ஒரு கேடியால் தாக்கப்படுவதைக் கண்டு மனம்பொறாமல் அவனை தாக்கமுனைந்து தானும் கேடியாகிவிடுகிறான் சேதுமாதவன். கடைசியில் கேடியைக் கொன்று சிறைக்குச் செல்கிறான்.  இன்ஸ்பெக்டர் வேலைக்கு தேர்வு ஆணை வருகிறது ‘சேதுமாதவனுக்கு வேலைக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3322

லோகி 1..காதலன்

முகம் பார்க்கும் கண்ணாடி முன் நீண்டநேரத்தைச் செலவிடுவார் லோகித தாஸ். காலையில் எழுந்ததுமே பல்விளக்கிவிட்டுச் செய்யும் முதல் வேலையே அதுதான். அதிகாலையில் எழுவது அவரது வழக்கம், நாலரை மணிக்கு. பல்தேய்த்ததுமே சிலபல ஆயுர்வேதக் கலவைகள் உண்பார். பின்னர் இன்னொருமுறை பல்தேய்ப்பார். அதன்பின் கண்ணாடிமுன் நல்ல ஒளியில் மூக்குக் கண்ணாடி போடு நின்றபடி முகத்தை பரிசோதனைசெய்வார். நரைக்கு மிக நுட்பமாக சாயம்பூசுவார். விலை உயர்ந்த சாயம் வைத்திருந்தார். அவர் முகத்தில் ஒருநாள்கூட நாம் நரையின் துளியை பார்க்க முடியாது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3314

லோகி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் லோஹிததாஸ் மரணம் குறித்த உங்கள் பதிவு இப்பொழுது படித்தேன். சில நாட்களுக்கு முன்பாகத்தான் அவரது நகைச்சுவை உணர்வை உங்கள் மீசை பதிவில் எழுதியிருந்தீர்கள். மலையாள சினிமா உலகம் மற்றுமொரு அற்புதமான கதை சொல்லியை இழந்து விட்டது. அவர் இயக்கிய படங்களை விட அவர் திரைக்கதை எழுதிய பல படங்கள் என்னால் என்றும் மறக்க முடியாதவை. அனைத்துமே அழுத்தமான திரைக்கதைகள். கிரீடம், முத்ரா,தசரதம், பரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா போன்று சிபி மலையிலுடன் அவர் சேர்ந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3310

அஞ்சலி: லோகித தாஸ்

நேற்று திரிச்சூரில் இருந்து கரண்ட் புக்ஸ் கெ.ஏ.ஜோணி கூப்பிட்டிருந்தார். பேசிக்கொண்டிருந்துவிட்டு பொதுவாக லோகித்தாஸ் எப்படி இருக்கிறார் என்று கேட்டேன். கடந்த ஒருவருடமாக லோகி திரிச்சூரில்தான் குடியிருந்து வருகிறார். ஜோணி சாகரிகா என்ற தயாரிப்பாளர் எடுக்கவிருக்கும் படத்துக்காக திரைக்கதை எழுத. மோகன்லால் நடிப்பதாக இருந்தது. அதன் விவாதத்துக்காக நான் சென்று அவருடன் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். அப்போதுதான் நாடகவிழாவையும் பார்த்தோம். இரண்டுமாதம் முன்பு கூப்பிட்டபோது மோகன்லால் படத்தின் திட்டத்தை கைவிட்டுவிட்டதாகவும் பிரித்விராஜை வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாகவும் மனிரத்தினம் படம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3293