Tag Archive: லலிதை

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27

பகுதி ஒன்பது: 2. காத்திருத்தல் விதைகோடி உறங்கும் வெண்பாலை நிலம் நான். விரிந்து வான் மூடிய வெறும்நீலப் பெருவெளி நீ. கருக்கொள்ளா அன்னையின் முலைததும்பும் அமுதம் நான். நெய்யுண்டு கனன்றாடி விண் எழுந்து விலகும் எரி நீ. ஒருமுறை நாதொட்ட இசைவெள்ளம் ஒழியாது நிறைந்திருக்கும் ஆலயமணி நான். கிளையசைத்து காற்றிலெழும் கருங்குருவி நீ. நீ சென்ற வழியெனத் தெரிபவை உன் பாதத்தடங்களல்ல. இமைப்பழிந்த என் விழிநீர்க்குளங்கள். கார்காலம் வந்து சென்றது. கானகத்துக் குயில்களும் பாடல் மறந்தன. என் இல்லத்து முற்றத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61681/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22

பகுதி ஏழு: 3. அதுவாதல் கொல்லும் குழல். கல்லைத் தொட்டெழுப்பி பெண்ணாக்கும் கழல். காரிரும்பின் உள்ளே கனிவெழுப்பும் தழல். காற்றாகி உருகி இசையாகிப் பெருகி நிறைந்திருக்கும் இருளே. குருதியுமிழ்ந்து இவ்வண்டப்பெருவெளியை ஈன்றிட்ட அருளே. என் ஐம்புலன்களும் குழவிகளாகி முட்டிமுட்டி மோதிப்புரளும் முலைகிளர்ந்த பன்றி. பசித்த வாய்திறந்து ஈன்ற மகவை மென்று நாசுழற்றும் சிம்மம். தின்று தின்று தானே எஞ்சி தன் வாலை தான் விழுங்கும் நாகம். நாகமணி நீலம். என் நெற்றிப்பொட்டில் விழுந்த எரிவிண்மீன். விண்ணிழிந்து மண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61436/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 21

பகுதி ஏழு: 2. அகம் அழிதல் முத்தமிட்டு மீட்டும் இசைக்கருவியென பிறிதொன்றில்லை. சிறகிலெழுந்த இசையை விஷக்கொடுக்கிலும் உணர்ந்த முதற்கருவண்டு முத்தமிட்டு முத்தமிட்டு துளைத்து எழுந்த பொன்மூங்கில் அறிந்திருக்காது மூங்கில்குலமே அதன் வழியாக இசைகொள்வதை. தன்னுள் எழுந்த முதல் இசையைக்கேட்டு தானே திகைத்து காற்றோடி எழுந்த மூச்சு நிலைக்க அசைவழிந்திருக்கும். பின்னர் ஒவ்வொன்றையும் ஒலியாக்கி உணர்ந்திருக்கும். மண்ணிலூறிய உப்பை. நீர் பெருக்கை. இலைகளறியும் காற்றை. கிளைகள் வளைந்தாடும் நடனத்தை. ஒளிபெருகும் வானை. வான் நோக்கிய மலர்தலை. மலர்கொண்ட கனிதலை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61376/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20

பகுதி ஏழு: 1. ஆடை நெகிழ்தல் “முலைநுனியில் விழியிரண்டு திறக்கும் நாளொன்றுண்டு பெண்ணே. அக்கருவிழிகள் ஒளிகொண்டபின்னர் நீ காணுமுலகு பிறிதொன்றாகும்” என்றாள் மூதன்னை முகாரை. அன்று அவள் முன் அமர்ந்திருந்த ஆயர்குலச்சிறுமியர் வாய்பொத்தி கண்மிளிர நகைத்து உடல் நெளிந்தனர். ”தண்பாறை கரந்துள்ள தணலை, தளிரெழுந்த மரத்தின் அனலை அன்று அறிவீர். கைதொட்டறியா வெம்மையை உங்கள் கண் தொட்டறியும். ஒளிந்துகொள்ள ஒரு மனம் தவிக்க ஒளிர்ந்து எழ ஒரு மனம் இழுக்க, கன்று இழுக்கும் கயிறைப்போல் உள்ளம் இறுகிநிற்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/61321/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13

பகுதி ஐந்து: 1. பீலிவிழி ஆயர்சிறுகுடிகளின் அடுக்குக்கூரை புல்நுனிப் பிசிறுகள்தான் வான்மழையின் வருகையை முதலில் அறிந்துகொண்டன. இளங்காலை எழுகையிலேயே சிட்டுக்குருவியின் சிறகதிர்வென அவற்றை காற்று மீட்டும் சிற்றொலி எழுந்துகொண்டிருந்தது. சூழ்ந்த மலர்க்கிளைகள் சிந்தைகூரும் யானைச் செவிகளென அசைவற்றிருக்க இலைகளில் காதல் கொண்ட கன்னிவிழிகளின் ஒளியும் துடிப்பும் எழுந்தது. நனைந்த முரசுத்தோலாகியது காற்றுவெளி. அதில் ஈசல்கூட்டமென ஒட்டிச் சிறகடித்தன தொலைதூரத்து ஒலிகள். நீரில் கிளையறைந்து முறிந்துவிடும் பெருமரக்கூட்டங்கள் என செவியதிர எழுந்தன அண்மை ஒலிகள். ஊழ்கத்தில் இருந்தது மண். அதன் மேல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60948/

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3

பகுதி ஒன்று: 3. முகிழ்முலை கனிதல் முதற்கரிச்சான் காலையை உணர்வதற்குள் சிற்றில் மூலையில் புல்பாயில் எழுந்தமர்ந்த ராதை தன் சுட்டுவிரலால் தோழியைத் தீண்டி “ஏடி, லலிதை” என்றழைத்தாள். அவிழ்ந்த கருங்கூந்தல் நெற்றியில் புரள, அழிந்து பரவிய குங்குமம் கொண்ட பொன்னுதலுடன் துயில் ததும்பும் விழிகளால் நோக்கி “என்னடி?” என்று லலிதை முனகினாள். “என்னுடன் வருகிறாயா?”என்று மெல்லியகுரலில் ராதை கேட்டாள். “எங்கே?” என லலிதை திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள். சிற்றகல் ஒளியில் செம்மை மின்னிய முகத்தைக் கண்டு “என்னடி இது? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/60570/