Tag Archive: லட்சுமி ஹாம்ஸ்டாம்

‘இயல்’ விருதின் மரணம்

சில வருடங்களுக்கு முன்னால் ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தபோது கண்ட காட்சி. கல்லூரியின் உயர்தர வரவேற்பறைக்குள் பேராசிரியர்கள் கால்மேல்கால்போட்டு அமர்ந்து ஆங்கிலத்தில் நாட்டார் கலைகளைப்பற்றி உரையாடிக் கொண்டு உயர்தர விருந்தை உண்டுகொண்டிருந்தார்கள். வெளியே மண்தரையில் அமர்ந்து நாட்டுப்புறக்கலைஞர்கள் புளிசாதப் பொட்டலங்களை வாங்கி பரப்பிவைத்து தின்றுகொண்டிருந்தார்கள். பல லட்சம் செலவில் நடந்த அந்நிகழ்ச்சியே அக்கலைஞர்களைப்பற்றி ஆராயும்பொருட்டுதான். தமிழ் இலக்கியத்திலும் எப்போதும் இந்நிலைதான். வாழ்க்கையின் ஆழத்திலிருந்து வேர்விட்டு எழுந்துவந்து அசலான கலைப்படைப்புகளைப் படைக்கும் கலைஞன் இங்கு எங்கும் கைகட்டி கூசி அரங்குக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/146