குறிச்சொற்கள் லட்சுமணன்

குறிச்சொல்: லட்சுமணன்

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24

கௌரவர்களின் வெற்றிச்சங்கொலி ஓர் அறைகூவலென எழ பாண்டவப் படை வளையும் வில்லின் நாண் என தளர்ந்தது. “தளருமிடத்தில் தாக்குக... விரிசல் விழுந்த இடத்தை உடைத்து உட்செல்க... அங்கே அனைவரும் வேல்முனை என குவிக!”...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-23

லட்சுமணன் பீஷ்மரை முதலில் பார்த்தபோது அவரும் விஸ்வசேனரும் உரையாடிக்கொண்டு வருவதை கண்டான். தன் அம்பையும் வில்லையும் எடுக்க குனிந்தபோதுதான் அதிர்ச்சிகொண்டு நிமிர்ந்து பார்த்தான். பீஷ்மர் தனக்குள் என தலைகுனிந்து கையசைத்து மெல்ல முணுமுணுத்தபடி...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-22

புரவிகள் பெருநடையிட தன் படையணிக்குச் செல்லும்போது லட்சுமணன் நிறைவுற்றிருந்தான். துருமசேனன் “முதலில் அவர்களை சந்திக்கவேண்டாமே என எண்ணினேன். உங்கள் உளம் விழைந்ததனால் சென்றேன். ஆனால் நீங்கள் அவர்களை சந்தித்தது நன்று என இப்போது...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-21

லட்சுமணன் அவையிலிருந்து வெளியே வந்து குளிர்காற்றை உணர்ந்தபோது மேலும் களைப்படைந்தான். கால்கள் நீரிலென நீந்தி நீந்தி அவனை கொண்டுசெல்வதுபோல தோன்றியது. வெளியே அவனுக்காகக் காத்து நின்றிருந்த துருமசேனன் அருகணைந்து “களமொருக்குதானே அடுத்த பணி,...

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-20

துரியோதனன் அவைக்குள் நுழைவதுவரை கலைந்த சொற்களின் முழக்கம் அங்கு நிறைந்திருந்தது. கைகளை கூப்பியபடி அவன் முதல் வாயிலினூடாக உள்ளே நுழைந்து தன் பீடத்தை நோக்கி செல்ல அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர். பீடத்தில் அமர்ந்து...

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-3

முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69

ஏழு : துளியிருள் – 23 இந்திரகோட்டத்தின் மணியாகிய பிரபாகரம் முழங்கியதும் நிமித்திகன் மேடையேறி உரத்த குரலில் “அனைத்து வெற்றிகளும் சூழ்க!  அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் ஆணையின்படி இங்கு இதோ போர்க்களியாட்டு தொடங்கவிருக்கிறது....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67

ஏழு : துளியிருள் - 21 தேர்நிரை பேரவை முற்றத்தை அடைந்ததும் அங்கு நின்றிருந்த சிற்றமைச்சர் அவர்களை நோக்கி ஓடிவந்து புரவிகள் குளம்பூன்றி நிற்கவேண்டிய இடத்தை கைவீசி காட்டினார். தேர்கள் நின்றதும் கொம்புகள் பிளிறி...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 65

ஏழு : துளியிருள் - 19 அஸ்தினபுரியின் கோட்டை கரிய கடல்அலை உறைந்ததுபோல தெரியத்தொடங்கியது. அதன் உச்சிமாடங்களில் அமைந்திருந்த முரசுகளில் ஒன்றின் தோல்வட்டத்தில் பட்ட காலையொளி அவர்கள் கண்களை வெட்டிச்சென்றது. முற்ற முகப்பில் முகபடாம் அணிந்து...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 64

ஏழு : துளியிருள் – 18 சுருதசேனன் கங்கைப்பெருக்கின் எதிர்த்திசையில் எட்டு பாய்களை விரித்து அலைகளில் ஏறியமைந்து சென்றுகொண்டிருந்த அரசப்பெரும்படகின் சற்றே தாழ்ந்த முதன்மை அறையை நோக்கி மரப்படிகளில் இறங்கிச்சென்று விரற்கடை அளவுக்குத் திறந்திருந்த கதவருகே நின்றான். உள்ளே...