Tag Archive: லஞ்சம்

கோட்டிகள்

மற்ற ஊர்களை விட நாகர்கோயிலில் கோட்டிகள் கொஞ்சம் அதிகம். இந்தக் காலகட்டத்தைக் கண்டு எரிச்சலுற்றுத் தன்னைக் கோமாளிகளாக ஆக்கிக்கொண்டவர்கள், தங்கள் விமர்சனத்தை நக்கலாக வெளிப்படுத்துபவர்கள் என அவர்களைச் சொல்லலாம். தக்கலை தொலைபேசிநிலையத்துக்கே ஒருவர் வருவார். காலை எழுந்ததும் எல்லா அரசு அலுவலகத்துக்கும் சென்று தேங்கிக்கிடக்கும் பொதுமக்கள் சம்பந்தமான, ஏழைகள் சம்பந்தமான விஷயங்களை விசாரித்து நடவடிக்கை இல்லாவிட்டால் புகார்கொடுப்பார். கையில் எப்போதுமே நூறுக்கும் மேல் புகார்க் கடிதங்கள் இருக்கும். ஒருமுறை ஏதோ தாசில்தார் ஒரு கிழவியிடம் பணம் எதிர்பார்த்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/17700