Tag Archive: ரைவதமலை

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 53

பகுதி ஐந்து : தேரோட்டி – 18 காலைவெயில் ஒளி கொண்டுவிட்ட போதும் வானத்தில் மங்கலாக நிலவு தெரிந்தது. அர்ஜுனன் தரை முழுக்க விண்ணிலிருந்து உதிர்ந்து பரவியது போல கிடந்த யாதவர்களை மிதிக்காது ஒவ்வொருவராக தாண்டி காலெடுத்து வைத்து நடந்தான். இரவு நெடுநேரம் களிவெறியும் கூச்சலுமாக திளைத்து உடல் சோர்ந்து படுக்கும்போது அவர்கள் அங்கு முள்ளும் கல்லும் இல்லாமல் இருப்பதை மட்டுமே பொருட்டென கொண்டிருந்தார்கள். வெயிலில் புழுதியிலும் சருகிலுமாக அவர்கள் கிடந்ததை காணும்போது போர்க்களம் ஒன்றின் அந்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80418

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 52

பகுதி ஐந்து : தேரோட்டி – 17 ரைவத மலையின் அடிவாரத்தில் இருந்து பெருகி மேலெழுந்த யாதவர்களின் கூட்டம் பெருவெள்ளமொன்று மலையை நிரப்பி மேலெழுந்து கொண்டிருப்பது போல் தோற்றமளித்தது. சருகுகளும் செத்தைகளும் நுரைக்குமிழிகளும் அலைகளுமென அது பெருகி வர அதன் விளிம்புவட்டம் குறுகிக்குறுகி மலைமுடி நோக்கி சென்றது. அவர்கள் எழுப்பிய பேரோசை எதிரொலிக்க மலைப்பாறைகள் அனைத்தும் யானைகளென எருமைகளென பன்றிகளென பெருச்சாளிகளென உயிர்கொண்டு ஓசையிடத் தொடங்கின. எக்கணமும் அவை பாய்ந்து எழுந்து பூசல் கொள்ளுமென்று தோன்றியது. அர்ஜுனன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80374

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51

பகுதி ஐந்து : தேரோட்டி – 16 ரைவதகர் விண்ணேகிய நாளை கொண்டாடுவதற்காக யாதவர்கள் கஜ்ஜயந்தபுரிக்கு முந்தையநாளே வந்து குழுமத் தொடங்கியிருந்தனர். துவாரகையை சுற்றியிருந்த பன்னிரு ஊர்களிலிருந்தும் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் தனித்தனி வண்டி நிரைகளாக வந்தனர். தொலைதூரத்தில் மதுராவில் இருந்தும் மதுவனத்தில் இருந்தும் கோகுலத்திலிருந்தும் மார்த்திகாவதியிலிருந்தும்கூட யாதவர்கள் வந்திருந்தனர். வலசைப்பறவைகளின் தடம்போல கஜ்ஜயந்தபுரியில் அவர்கள் வருவதற்கும் தங்குவதற்கும் நெடுங்காலம் பழகிப்போன பாதைகள், தங்குமிடங்கள், உபசரிப்பு முறைமைகள் உருவாகியிருந்தன அவர்களுக்கென கட்டப்பட்ட ஈச்சை ஓலை வேய்ந்த கொட்டகைகளில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80366

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50

பகுதி ஐந்து : தேரோட்டி – 15 ரைவத மலையின் பின்பக்கமாக சென்ற செம்மண் பாதை, சுட்டுவிரல் தொட்டு நீட்டிய செங்காவிக்கோடு போல கரும்பாறைகளைச் சுற்றியும் செம்மலைச்சரிவுகளில் இறங்கியும் வளைந்தேறியும் சென்றது. இருபக்கமும் முட்கள் செறிந்து சாம்பல் நிறம் கொண்டு நின்ற செடிகள் பகைமையுடன் சிலிர்த்திருந்தன. உச்சிப்பாறைகளின் மேல் வரையாடுகளின் நிரை ஒன்று மெல்லிய தும்மலோசை எழுப்பியபடி கடந்து சென்றது. காலையில் அவ்வழி சென்ற அருகப் படிவர்களின் காலடிகள் செம்மண் புழுதியில் படிந்து அப்போதும் அழியாமல் எஞ்சியிருந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80326

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49

பகுதி ஐந்து : தேரோட்டி – 14 விருந்தினர் இல்லமாக இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டிருந்தது ரைவதமலையில் இருந்தவற்றிலேயே பெரிய இல்லம். ஆனால் துவாரகையின் மாளிகையுடன் ஒப்பிடுகையில் அதை சிறிய குடில் என்றே சொல்லவேண்டும் என அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். அதன் வாயிலில் நின்ற ஏவலன் தலைவணங்கினான். இளைய யாதவர் இயல்பாக “உள்ளே வருக” என்றபின் நுழைந்து குறடுகளை காலாலேயே உதறிவிட்டு துள்ளி மஞ்சத்தில் விழுந்து மல்லாந்து படுத்து ஒரு தலையணையை எடுத்து மார்பின்மேல் வைத்துக்கொண்டார். அவரிடம் எப்போதுமிருக்கும் அந்தச் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80305