Tag Archive: ருக்மரதன்

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை – 1 விஜயை தேரின் முகப்புச்சாளரத்தின் சிறு திரையை மெல்ல விலக்கி அப்பால் ஏவுபீடத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியிடம் “அணுகிவிட்டோமா?” என்றாள். அவன் “முதல் காவல்நிலை தெரிகிறது, அரசி” என்றான். “நன்று” என்றபின் அவள் திரையை மூடிவிட்டு இருக்கையில் சாய்ந்தாள். அவளருகே தாழ்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த முதிய சேடியான அபயை “பெருஞ்சாலை வந்துவிட்டதே காட்டுகிறது, நகர் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்றாள். வெறுமனே அவளை நோக்கிவிட்டு விஜயை விழிதிருப்பிக்கொண்டாள். அவள் பேச விரும்புகிறாளா இல்லையா என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/105329/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 65

பகுதி 13 : பகடையின் எண்கள் – 6 காலையில் ஏவலனின் மெல்லிய ஓசை கேட்டு பூரிசிரவஸ் விழித்துக்கொண்டான். அவன் வாழ்த்துக்களை சொல்லிவிட்டு தலைவணங்கியபோதுதான் மத்ரநாட்டில் இருப்பதை உணர்ந்தான். தலை கல்லால் ஆனது போலிருந்தது. எழுந்தபின் மீண்டும் அமர்ந்து சிலகணங்கள் கண்களை மூடி குருதிச்சுழிப்பை நோக்கிக்கொண்டிருந்தான். கீழே விழுந்துகொண்டிருப்பதைப்போலவும் வானில் தொங்கி ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் தோன்றியது. முந்தையநாளிரவு வந்து படுத்தபோது அறைமுழுக்க நீராட்டறைக்குள் இருப்பதுபோல நீராவி நிறைந்திருந்தது. கணப்புக்குள் எரிந்த கனல்துண்டுகளின் ஒளியில் நீராவியை நோக்கியபடி படுத்திருந்தான். மூச்சுத்திணறுவதுபோல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73666/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 64

பகுதி 13 : பகடையின் எண்கள் – 5 படைத்துணைவனாகிய சகன் தொடர்ந்து வர பூரிசிரவஸ் அவைக்குச்சென்றபோது அவைநிகழ்ச்சிகள் முடியும் நிலையில் இருந்தன. அவனுக்காகத்தான் அனைவரும் காத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. ஏவலன் அவனுடைய வருகையை சொன்னதும் சுதீரர் அவனை அவைக்கு அறிவித்தார். வாழ்த்தொலிகள் நடுவே அவைபுகுந்து தலைவணங்கினான். அவைநடுவே சல்லியர் அரியணையில் அமர்ந்திருக்க அருகே இடப்பக்கம் அவரது பட்டத்தரசி விப்ரலதை அமர்ந்திருந்தாள். வலப்பக்கம் நிகரான அரியணையில் த்யுதிமான் இருக்க அவருக்கு மறுபக்கம் அவரது பட்டத்தரசி பிரசேனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73639/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 63

பகுதி 13 – பகடையின் எண்கள் – 4 மத்ரநாட்டுக்கு பூரிசிரவஸ் அறியா இளமையில் ஒருமுறை வந்திருந்தான். அன்று வந்த ஒரு நினைவும் நெஞ்சில் எஞ்சியிருக்கவில்லை. அன்னையுடனும் அரண்மனைப்பெண்களுடனும் அரசமுறைப்பயணமாக மலைப்பாதை வழியாக மூடுவண்டிகளில் வந்ததும் இருபக்கமும் செறிந்திருந்த மரக்கூட்டங்களை நோக்கியபடி கம்பளிக்குவைக்குள் சேடியின் மடியில் சுருண்டு அமர்ந்திருந்ததும் மட்டும் சற்று நினைவிலிருந்தன. சௌவீரமும் மத்ரமும் எல்லைப்புறச்சாலைகளை அமைப்பதற்கு முந்தைய காலம் அது. அன்று மத்ரநாடே பால்ஹிகர்களுக்கு நெடுந்தொலைவு. மத்ரநாட்டு அரசர் சல்லியரின் முதல்மைந்தன் ருக்மாங்கதனை பட்டத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73613/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26

பகுதி 7 : மலைகளின் மடி – 7 இரவிலேயே செய்திவந்துவிட்டது, மத்ர நாட்டிலிருந்து சல்லியரும் அவரது மைந்தர்களான ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவரது இளையவரும் உத்தரமத்ரநாட்டின் அரசருமான தியுதிமானும் வந்துகொண்டிருப்பதாக. செய்திசொன்ன தூதன் மேலும் ஒரு சொல்லுக்கு தயங்க சோமதத்தர் “சொல்” என்றார். “இளவரசி விஜயையையும் தியுதிமான் அழைத்துவருகிறார். அது மரபல்ல” என்றான் தூதன். “ஆம், ஆனால் பிதாமகர் வந்திருப்பதனால் அழைத்து வரலாமே?” என்றார் சோமதத்தர். “இருக்கலாம். ஆனால்…” என்றபின் தூதன் “அரண்மனையில் நிகழ்ந்த பேச்சுகளைக்கொண்டு நோக்கினால் நம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/71125/