Tag Archive: ரிஷபர்

‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41

[ 12 ] நாகவேதம் முழங்கிக்கொண்டிருந்த வேள்விச்சாலையிலிருந்து பிறர் நோக்கை கலைக்காது எழுந்து வெளியே சென்ற ஜராசந்தனின் நடை மாறுபட்டிருப்பதை அனைவரும் கண்டனர். காமிகர் அவனுடன் பணிந்தபடியே ஓடி அருகணையாமல் ஆணைகளுக்காக செவி காத்தார். ஜராசந்தனின் வலத்தோள் எழுந்து வலக்கால் சேற்றில் அழுந்தப்பதிந்திருந்தது. குடைக்காரன் அவனை அணுக அஞ்சி அகலே நின்று தயங்க அவன் மழைப்பீலிகளை ஊடுருவி நடந்தான். சைத்யகத்தின் நாகதெய்வமான அர்ப்புதனின் ஆலயத்தின் முகப்பில் அவன் நின்று மூன்றுதலை நாகம் படமெடுத்த முடிசூடி நின்றிருந்த நாகதேவனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/87550

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 47

பகுதி ஐந்து : தேரோட்டி – 12 ரைவதமலை உச்சியில் அமைந்த அரண்மனைக்குச் செல்லும் உருளைப்பாறைப் படிக்கட்டால் ஆன பாதையின் இரு புறங்களிலும் பிரிந்து சென்று நூற்றுக்கணக்கான கொடிவழிப் பாதைகள் ஒவ்வொன்றும் ஓர் அருகர் ஆலயத்தையோ அடிகள் பொறிக்கப்பட்ட ஊழ்கப்பாறையையோ சென்றடைந்தன. அருகர் ஆலயங்கள் கற்பாறைகளை அடுக்கி மேலே மரப்பட்டைக்கூரையுடன் அமைக்கப்பட்டிருந்தன. கூம்புவடிவக்கூரையின் முகப்பில் அந்த அருகருக்குரிய அடையாளம் பொறிக்கப்பட்ட வெண்கொடி பறந்தது. அருகர்அடிகள் அமைந்த பாறைகளின் அருகே சுவஸ்திகம் பொறிக்கப்பட்ட கொடிகள் பறந்தன. அருகே அப்பாறையிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80271

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 46

பகுதி ஐந்து : தேரோட்டி – 11 கஜ்ஜயந்தபுரியின் நடுவே அமைந்த ரைவத மலையின் அடிவாரத்தில் அமைந்த அங்காடிக்கு சப்தமரின் வணிகக்குழுவுடன் அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. தெற்கிலிருந்து வந்த குளிர்காற்று புழுதியை அள்ளி அங்கிருந்த நூற்றுக்கணக்கான தோற்கூடாரங்களின் மீது பொழிந்தது. அதற்குள் மரவுரி போர்த்தி உடல் ஒடுக்கி படுத்திருந்தவர்கள் அவ்வொலியைக் கேட்டு துயிலுக்குள் குளிர்மழையில் நனைந்தனர். பொதிவண்டிகளை அவிழ்த்து அத்திரிகளையும் காளைகளையும் அங்கு அறையப்பட்டிருந்த தறிகளில் கட்டிக் கொண்டிருந்த வணிகர்கள் எழுப்பும் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80252

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 45

பகுதி ஐந்து : தேரோட்டி – 10 நீலாஞ்சனையின் இறப்பு அரண்மனையை ஆழ்ந்த அமைதியில் ஆழ்த்தியது. அவைநடுவே தன் கலையின் உச்சகணத்தில் அவள் மறைந்தது நல்லூழ் என ஒரு சாராரும் அவைநடுவே ஓர் இறப்பு நிகழ்ந்தது தீயதேதோ தொடர்வதற்கான அறிவிப்பு என இன்னொரு சாராரும் பேசிக்கொண்டனர். ஏதோ நிகழவிருக்கிறது என அனைவரும் அறிந்திருந்தனர். தன் மஞ்சத்தறையில் நாட்டிய சிலை என அரசர் அமர்ந்திருப்பதை நகரமே அறியலாயிற்று. அவரை அணுக அஞ்சி அரசியும் இளையோரும் அவரது அணுக்கச்சேவகனும் அறைவாயிலிலேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/80218

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 92

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை – 5 நள்ளிரவில் மூன்றாம் சாமத்தின் தொடக்கத்துக்காக பெருமுரசு ஒலித்தது. மிதுனராசிக்கு இடம்பெயர்ந்த வியாழன் ஊதப்பட்ட அனல்துண்டு போல சந்திரன் சூடிய மணிமுடியில் ஒட்டியிருந்து ஒளிவிட்டது. காலடியில் ரோகிணி ஊசி முனை போல சுடர்ந்து அமர்ந்திருந்தாள். சந்திர வட்டம் முகிலில் முழுமையாக மறைந்து பின்னர் மறுபக்கம் வெளிப்பட படபடத்தபடி காகம் ஒன்று மரத்தில் இருந்து எழுந்து வானில் சுழன்று பின் அமைந்தது. காம்பில்யத்தின் தெற்குக்கோட்டை வாயிலின் அருகே பெருவீதியின் மும்முனையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/70068

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35

பகுதி ஏழு : பூநாகம் – 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என் ஆசிரியர் காலடியில் வைக்க அப்போது உயிர் மட்டுமே என்னிடம் இருந்தது. நான் சென்று ஏகலவ்யனை எதிர்கொள்கிறேன் என்றேன். ‘இல்லை, நீ என் பொறுப்பு. என் மைந்தனுக்கும் மேலானவன்’ என்று ஆசிரியர் சொன்னார்” துரியோதனன் தொடர்ந்து சொன்னான். குருநாதர் இமயகுருகுலத்தில் கல்விபயின்றுகொண்டிருந்த இளவல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66010

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25

பகுதி ஐந்து : நெற்குவைநகர் [ 5 ] தான்யகடகத்தின் அறச்சாலைக்கு இளநாகனும் கீகடரும் விஸ்வகரும் அஸ்வரும் இரவில் வந்துசேர்ந்தனர். பகல்முழுக்க நகரத்தில் அலைந்து மக்கள் கூடுமிடங்களில் பாடிப்பெற்ற நாணயங்களுக்கு உடனடியாகக் குடித்து உண்டு கண்சோர்ந்து ஒரு நெல்கொட்டகையில் படுத்துத் துயின்று மாலைகவிந்தபின் விழித்துக்கொண்டு அந்தி கனக்கும்வரை மீண்டும் அங்காடியில் சுற்றியலைந்து களைத்தபின் அங்காடியிலேயே ஒரு வணிகரிடம் கேட்டு அறச்சாலையை அறிந்து அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் வரும்போது நள்ளிரவாகி நகர் அடங்கியிருந்தபோதிலும் அறச்சாலையின் பொறுப்பாளர்களாக இருந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/56817

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 46

பகுதி ஒன்பது : மொழியாச்சொல் [ 3 ] மீண்டும் நினைத்துக்கொண்டதுபோல மழை தொடங்கியது. மாலைநேரத்து மழைக்கே உரிய குளிரும் இருளும் அறைகளுக்குள் நிறைந்தன. சாளரக்கதவுகளில் சாரல் அறைந்த ஒலி கேட்டபடி பிருதை தன் அறைக்குள் தனித்திருந்தாள். அவளுடைய நெற்றிப்பொட்டு மட்டும் மெல்ல அதிர்ந்துகொண்டிருக்க சுட்டுவிரலால் அதை அழுத்தியிருந்தாள். வெளியே மெல்லிய காலடியோசையுடன் அனகை நெருங்கிவந்து கதவை விரலால் சுண்டினாள். ‘ம்’ என்றாள் பிருதை. அனகை உள்ளே வந்து வணங்கி கதவைத் தாழிட்டாள். பிருதை ஏறிட்டுப்பார்த்தாள். “மாத்ரநாட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47657

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 44

பகுதி ஒன்பது : மொழியாச்சொல் [ 1 ] மார்த்திகாவதியின் கொம்பொலி முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதலில் அது ஒரு கனத்த எருதின் குரல் என்றுதான் விதுரன் நினைத்தான். கொம்பு பிற இடங்களைப்போல வெண்கலத்தால் ஆனதாக இல்லாமல் எருதின் கொம்பினால் ஆனதாகவே இருந்தது. கொம்பை ஊதிய சேவகன் மும்முறை தலைவணங்கி தன் மர மேடையிலிருந்து இறங்கியதும் சபையில் அமைதி பரவியது. வெளியே பெய்து கொண்டிருந்த சிறு மழையின் மெல்லிய ஒலி மட்டும் அந்த விரிந்த மண்டபத்தை நிறைத்திருந்தது. கூரையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47711

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43

பகுதி எட்டு : பால்வழி [ 5 ] மாளிகையை அடைந்து, நீராடி உடைமாற்றி வந்து முகமண்டபத்தில் விதுரன் அமர்ந்ததும், காத்திருந்த ஒற்றர்கள் அவனுக்கு செய்திகளைச் சொல்லத் தொடங்கினர். யாதவ குலத்தைச் சேர்ந்த பதினெட்டு குடித்தலைவர்கள் சுயம்வரத்துக்கு வந்திருப்பதாகவும் ஷத்ரியர்கள் எட்டுபேர் வந்திருப்பதாகவும் ஒற்றன் மித்ரன் சொன்னான். ஷத்ரியர்களில் மாத்ர நாட்டின் இளவரசன் சல்லியன் மாத்திரமே முக்கியமானவன் என்றபோது அவன் கண்களின் வளைக்குள் அசையும் எலியின் அசைவுபோல ஒன்று நிகழந்ததை விதுரன் கண்டான். “உம்” என்றான். “சல்லியரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/47571

Older posts «