Tag Archive: ராமராஜ்யா

பிழை [சிறுகதை] -2

” அதை எங்கே பதிவுசெய்தார்கள்? என்றேன் “அங்கேதான்…ஆனால் அது பதிவாக நான்குமாதமாகியது. படம் வெளிவருவதற்குள்ளேயே பாட்டு பிளேட்டாக வந்து ஆயிரக்கணக்கில் விற்றுவிட்டது. காலையில் அந்தப்பாட்டின் படப்பிடிப்புக்காக சைக்கிளில் போகும்போது சாலை முழுக்க அந்தப்பாட்டுதான் கேட்டுக்கொண்டிருக்கும். அந்தப்பாட்டு வழியாக நான் எங்கெங்கோ போய்விட்டேன். ஆகவே அந்தப்பாட்டின் உக்கிரத்தைக் காட்சிகள் தொடவே முடியாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் எடிட்டிங் டேபிளுக்குப் படத்தின் நெகட்டிவ் வந்தபோது எனக்குப் பெரிய ஆச்சரியம். அந்தப்பாட்டு அப்படியே காட்சியாக இருந்தது…நீ,இன்றும்கூடக் கொஞ்சம் தேடினால் அந்தப்பாட்டைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29737

பிழை [சிறுகதை] 1

”சகோதரா, சின்ன விஷயங்களில் என்னதான் கிடைத்தாலும் பெரிய விஷயங்களுக்குப் பக்கத்திலே இருந்துகொண்டிரு. அதுதான் வாழ்க்கை” லட்சுமண் ரானே சொன்னார். காசியில் அவரும்தான் தாடி மீசையுடன் பிச்சை எடுத்து கஞ்சா இழுத்து படிக்கட்டில் தூங்கி வாழ்ந்தார். ஆனால் அவர் சுவாமி மகராஜ் கிடையாது. ஏனென்றால் அவருக்குக் காவி இல்லை. பிடிவாதமாக அதைக் கட்ட மறுத்துவிட்டார். கும்பிடுகள் விழுவதுடன் சில்லறையும் அதிகம் கிடைக்கும். அவ்வப்போது சகசாமியார்களிடமே கையேந்தவேண்டியிருக்காது. ஆனால் லட்சுமண் ரானே தன்னை எப்போதும் ” என் பெயர் லட்சுமன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/29750