Tag Archive: ராமச்சந்திர குகா

ஜனநாயகத்தின் காவலர்கள்

ஜெ, இந்த பழைய இணைப்பை படித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை http://www.telegraphindia.com/1000908/editoria.htm#head3 ராஜேஷ். அன்புள்ள ராஜேஷ் நினைவில்லை. நாம் அறியாத விஷயமில்லை. ஆனால் குகா அதைச்சொல்லும்போது ஒரு அழுத்தம் ஏறுகிறது நன்றி ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/61738

காந்தியும் மேற்கும் -குகா

ராமச்சந்திர குகா அவரது தெளிவுக்காகவும் சுயநோக்குக்காகவும் நான் எப்போதுமே மதிக்கும் சிந்தனையாளர். அவர் எழுதிய ஒரு நல்ல கட்டுரையின் தமிழாக்கம் காந்தி டுடே இணைய இதழில் இந்தியாவின் வருங்கால அரசியலைத் தீர்மானிக்கும் முக்கிய சந்திப்புக்காக 1931 ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் காந்தி.அங்கு ஒரு பத்திரிகையாளர் மேற்குலக நாகரீகத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று வினவினார் .அதற்கு காந்தி “அது ஒரு நல்ல யோசனை என்றே நான் எண்ணுகிறேன் ” என்றார் . சரளமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21410

குகா-இந்திரா

அன்பின் ஜெ., இந்திராவின் ஆட்சியை இந்தியாவின் இருண்ட காலம் என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லலாம். ஒரு ஒட்டு மொத்தப் பார்வையில் இது சரியே. அவரின் பங்களிப்புகளும் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது என் எண்ணம். அவை பின்வருமாறு: 1. வங்கிகள் தேசமயமாக்கப் பட்டு, ஊரகக் கிளைகள் துவங்கப்பட்டது – பணப் பரிமாற்றத்துக்கு பாரதமெங்கும் ஒரு கட்டமைப்பு ஏற்பட்டது. இன்று அவை வங்கிகளின் தொழிலுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கின்றன. ஓரளவு, ஊரக மத்திய தரப்பு மக்களுக்கேனும் பயன்படும் ஒரு கட்டமைப்பு – இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20580

அண்ணா ஹசாரே சாதிவெறியரா?

குழும விவாதத்தில் ஒருவர் அண்ணா ஹசாரேபற்றி இன்று இடதுசாரிகளில் சிலர் முன்வைக்கும் சில குற்றச்சாட்டுகளைச் சொன்னார். அண்ணா ஹசாரேவின் ராலேகான் சித்தி கிராம அமைப்பில் தலித்துக்கள் அசைவம் சாப்பிடத் தடை இருந்தது. அப்படி சாப்பிட்ட தலித்துக்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டார்கள். இரண்டு, அங்கே ஜனநாயகமே இல்லை. பஞ்சாயத்து தேர்தல்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அவர் பிராமணிய வெறியர், சர்வாதிகாரி. இதைச் சொன்ன ஒரு இடதுசாரி கட்டுரையாளர் இதையெல்லாம் அவரே சென்று பார்த்தது போல எழுதினாராம். அதற்கு நான் எழுதியபதில் இது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/20487

காந்தியின் தேசம்

  என் நண்பர் ஒருவர் சொன்னார். ஓர் இடதுசாரி அவரிடம் சொன்னாராம்,  ராமச்சந்திர குகா எழுதிய ‘இந்தியவரலாறு-காந்திக்குப்பிறகு’ என்ற இருபாகங்களினாலான சமகால வரலாற்று நூல் ஓர் இந்துத்துவநூல் என்று.ஒருவேளை ராமச்சந்திர குகா இந்த விமர்சனத்தை வேறெங்கிருந்தும் சந்தித்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். நான் ஆச்சரியத்துடன் கேட்டேன் ‘ஏன் அப்படிச் சொல்கிறார்?’ என்று .அது, ’இந்தியாவைப் புகழ்ந்து பேசுகிறது’என்று அந்த நண்பர் சொன்னாராம். நம் இடதுசாரிகள் அளவுக்கு விசித்திரமான பிறவிகளை வேறெங்கும் பார்க்கமுடியாது. இங்கே இடதுசாரி அரசியல் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/19590

காந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்…

ராமச்சந்திர குகாவின் இந்த புகழ்பெற்ற நூலின்மீது ஓர் அடிப்படைக்கேள்வியை எழுப்பிக்கொள்ளலாம். ஏன் காந்திக்குப் பின்? ஒரு திருப்புமுனைப்புள்ளியாக அல்லது வரலாற்றின் ஒரு புதிய காலகட்டத்தின் தொடக்கமாக குறிப்பிடவேண்டுமென்றால் இந்தியசுதந்திரத்தையே குறிப்பிடவேண்டும். அதுவே வழக்கமும் கூட. ஆனால் குகா காந்திக்குப் பின் என்கிறார். ஏன்? அதற்கான விடை இந்த நூலில் நேரடியாக இல்லை. முன்னுரையில் குகா சுதந்திரத்துக்கு முந்தைய வரலாற்றை ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்யமும் காந்தி என்ற மாமனிதரும்’ என்ற வரி மூலம் குறிப்பிடுவதைக் காணலாம். அவரது மனச்சாய்வு காந்தி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/6186

டி.ஆர்.நாகராஜ்,குகா-அர்விந்துடன் உரையாடல்

அன்புள்ள ஜெ:தமிழாக்கத்திற்கு நன்றி. டி.ஆர்.நாகராஜின் பத்தியை ஆங்கிலத்தில் கொடுத்தற்கு மன்னிக்கவும். நானே தமிழில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பொழுது இருந்த மனநிலையில் முடியவில்லை).டி.ஆர்.நாகராஜ் எழுதிய அந்தப் பத்தியில் , ”முழுமையான பார்வைக்காக காத்திருக்கும் ஒருவர் செயல்படப்போவதேயில்லை. வரலாற்றில் குதிக்கப்போவதுமில்லை”, என்ற வாக்கியம் கூர்மையானது.வரலாறு மட்டும் அன்றி அனைத்து துறைகளுக்கும் இது பொருத்தமானது என்று எனக்குத் தோன்றுகிறது. உதாரணமாக, கணிப்பொறி மற்றும் சாஃப்ட்வேர் துறைகள் மெல்ல மெல்ல பொறியியலில் இருந்து வடிவமைப்பு (design) முறைமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறன. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3156