நான் நம் பெரும்பான்மை மார்க்ஸியர்கள் மேல் சொல்வது இதே குற்றச் சாட்டைத்தான். அவர்கள் தங்கள் மூடத்தனத்தால் ஒரு பழம் பெரும் பாரம்பரியம் அன்னிய ஏகாதிபத்திய சக்திகளால் வேருடன் கெல்லி அழிக்கப்படும் கொடூரமான வரலாற்று அநீதிக்கு துணை நிற்கிறார்கள். அதன் கருவியாகச் செயல்படுகிறார்கள். ஒருநாள் இதற்காகவும் அவர்கள் வருந்துவார்கள். இது நீங்கள் எழுதிய வரி. இதை என்னால் சரியாகப்புரிந்துகொள்ள முடியவில்லை. மார்க்ஸியர்கள் பழபெரும்பாரம்பரியத்தை அழிக்கிறார்கள் என்றால் எந்தப்பாரம்பரியத்தை? அஸீஸ் அன்புள்ள அஸீஸ், இந்துமதம், இந்துசிந்தனை மரபுதான். இந்தச் சொல் …
Tag Archive: ராமகிருஷ்ணர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/74909
அறிதலை அறியும் அறிவு
நான் பிரம்மசூத்திரத்தைப் பற்றி முதலில் கேள்விப்பட்டது பாரதியின் உரைநடையில். இடிப்பள்ளிக்கூடத்தில் பிரமராய வாத்தியாருடன் பாரதி பிரம்மசூத்திரம் சங்கர பாஷ்யத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போது அன்னிபெசண்ட் ஆதரவாளரான வேதவல்லி அம்மையார் வந்து அவர்களை நாடு பற்றி எரிகையில் வேதாந்தம் பேசும் கோழைகள் என்று வசைபாடி ஆண்களுக்கு திராணி இல்லாவிட்டால் வெள்ளைக்காரனிடம் பேசி சுதந்திரத்தைப் பெற பெண்கள் போகிறோம் என்றெல்லாம் எள்ளிநகையாடி, நாளிதழை மூஞ்சிமேல் தூக்கி வீசி செல்கிறாள். பாரதி தெரிந்துதான் அங்கே பிரம்மசூத்திரத்தை பேசுவதாக வைத்திருக்கிறார். ஏனென்றால் ‘முட்டவரும் காளையிடம் வேதாந்தம்பேசுவது’ …
Permanent link to this article: https://www.jeyamohan.in/54763