குறிச்சொற்கள் ராதை

குறிச்சொல்: ராதை

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3

பகுதி ஒன்று: 3. முகிழ்முலை கனிதல் முதற்கரிச்சான் காலையை உணர்வதற்குள் சிற்றில் மூலையில் புல்பாயில் எழுந்தமர்ந்த ராதை தன் சுட்டுவிரலால் தோழியைத் தீண்டி “ஏடி, லலிதை” என்றழைத்தாள். அவிழ்ந்த கருங்கூந்தல் நெற்றியில் புரள, அழிந்து...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2

பகுதி ஒன்று: 2. மணிநீல மலர்க்கடம்பு உடல்தீண்டாது உளம்தீண்டாது உயிர்தீண்டி எழுப்பியது எது? செவிநுழையாது சிந்தையறியாது சித்தமறிந்தது எது? விதைவிட்டெழுந்த முளை போல அணிமலர் பாயில் எழுந்தமர்ந்து மெய்ப்பு கொண்ட தன் உடலை தன்...

‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1

பகுதி ஒன்று: 1. திருப்பல்லாண்டு ‘உலகறிந்து எழுந்தவர் ஒருங்குணர்ந்து உய்ந்திடும் ஒரு பொருள் நீ’ என்று சிறுகரிச்சானின் முதற்குரல் எழ விழித்தெழுந்து மைநீலம் விலக்கி மணித்தளிர் சிலிர்த்துக்கொண்டது மால்திகழ் பெருஞ்சோலை. முகைப்பொதியவிழ்ந்த பல்லாயிரம் இதழிமைகளைத்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 57

பகுதி எட்டு : கதிரெழுநகர் அதிகாலையில் கங்கைக்குச் சென்றுகொண்டிருந்த துரோணரின் இருபக்கமும் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் நடந்துகொண்டிருக்க அவர்களுக்கு சற்றுப்பின்னால் கர்ணன் நடந்துசென்றான். "ஸ்மிருதிகள் என்பவை நினைத்திருக்கப்படவேண்டியவை. ஏனென்றால் நினைத்திருக்கப்பட்டால் மட்டுமே அவை நீடிக்கின்றன. மண்ணில்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 56

பகுதி எட்டு : கதிரெழுநகர் பிரம்மமுகூர்த்தத்திற்கு முன்னதாகவே எழுந்து கர்ணனைத் துயிலெழுப்புவது அதிரதன் வழக்கம். "நீ இன்று கிருபரின் மாணவன். சூதர்குலத்தில் இருந்து கிருபரின் மாணவனாகச் செல்லும் முதல் சிறுவன் நீ... உன்னால்தான் சூதர்குலத்துக்கு...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 55

பகுதி எட்டு : கதிரெழுநகர் குதிரைச்சூதர் தெரு தெற்கே சூதர்களின் பயிற்சி முற்றத்துக்கு மேற்காக இருந்தது. மரப்பட்டைக்கூரை கொண்ட சிறுவீடுகள் தோள்தொட்டு நிரை வகுத்திருந்தன. ஒவ்வொரு குடிலைச்சுற்றியும் கொட்டில்களில் குதிரைகள் நின்றிருக்க அவற்றுக்கு உடல்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 54

பகுதி எட்டு : கதிரெழுநகர் அஸ்தினபுரியின் கோட்டைமுகப்புக்கு அவர்களின் ஒற்றைக்காளை வண்டி வந்தபோது அதிகாலை. இருள் விலகாத குளிர்ந்த வேளையில் பொறுமையிழந்து கழுத்து அசைக்கும் காளைகளின் மணியோசைகளும், சக்கரங்களில் அச்சு உரசும் ஓசைகளும், மெல்லிய...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 52

பகுதி எட்டு : கதிரெழுநகர் ராதை திண்ணையில் அகல்விளக்கை ஏற்றிவைத்து உணவை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அதிரதன் "அவன் வருவான்... இன்று அவன் மேல் எத்தனை கண்கள் பட்டிருக்கும் தெரியுமா? கண்ணேறு என்பது சுமை. அது நம்மை...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 50

பகுதி எட்டு : கதிரெழுநகர் கங்கை வழியாகவும் மாலினி வழியாகவும் அங்கநாட்டின் சிற்றூர்களில் இருந்தெல்லாம் மக்கள் படகுகளில் சம்பாபுரிக்கு வந்து இறங்கிக்கொண்டே இருந்தனர். சைத்ரமாதத்துக் கொடும்வெயில் காரணமாக எல்லா படகுகளிலும் ஈச்சைமரத்தட்டிகளாலும் மூங்கில்தட்டிகளாலும் கூரையிட்டிருந்தனர்....

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 38

மார்த்திகாவதிக்கு வடக்கே இருந்த பித்ருதீரம் என்னும் காட்டுக்குள் அரசர்களுக்குரிய மயானம் இருந்தது. அங்கே அஷ்டாம்பையரின் சிறிய ஆலயம் ஒன்றிருந்தது. செங்கல்லால் இடுப்பளவு உயரத்தில் கட்டப்பட்ட கருவறைக்குள் ருத்ரசர்ச்சிகை, ருத்ரசண்டி, நடேஸ்வரி, மகாலட்சுமி, சித்தசாமுண்டிகை,...