Tag Archive: ராதை

“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8

சூரியவட்டத்தில் ஆடுஅமை களத்தில் தன் கிணைப்பறையை மீட்டியபடி முதல் சூதரான அஜர் பாடினார். தோழரே, விஜயத்துடன் களம் நின்று பொருதும்பொருட்டு புறப்படும்போது அங்கநாட்டரசர் கர்ணன் தன் அன்னையாகிய ராதையை பார்க்கும்பொருட்டு சென்றார். அவரது பெற்றோர் நகருக்கு வெளியே ஒதுங்கிய மாளிகையில் எவருடனும் இணையாமல் தனித்து வாழ்ந்தனர் அப்போது. சூதர்களல்லாதவர்கள் மேல் அவர்கள் வஞ்சம் கொண்டிருந்தனர். சூதர்களை அவர்கள் பொருட்டென எண்ணவில்லை. கர்ணன் களம்செல்லப்போவதில்லை என்ற செய்தி அரண்மனையெங்கும் பரவி அங்கிருந்து அங்கநாட்டிலும் சூழ்ந்திருந்தது. ஷத்ரியர் தங்கள் அவையிலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/120826/

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61

[ 25 ] அர்ஜுனன் எழுந்து நின்று கிளம்பும்பொருட்டு இயல்பாக ஆடைதிருத்தியபோது திடுக்கிடலை உணர்ந்தான். ஆணின் ஆடையில் தானிருப்பதை உணர்ந்ததும் பதற்றத்துடன் ஓடிச்சென்று ஆடியில் நோக்கினான். பொருந்தா ஆடையுடன் அங்கு தெரிந்த உருவத்தை அவனால் அரைக்கணம்கூட நோக்கமுடியவில்லை. “யாரங்கே?” என்று கூவினான். அப்பால் சிற்றறைக்கதவு திறந்து உள்ளே வந்த கந்தர்வ ஏவலர் பணிந்தனர். “எனக்குரிய ஆடைகளை எடுங்கள்… உடனே” என்றான். அவர்கள் தலைதாழ்த்தினர். அவனை ஏழு கந்தர்வமகளிர் அழைத்துச்சென்று பெண்டிருக்கான அணியறையில் தீட்டப்பட்ட வெள்ளியாலான பேராடிமுன் அமரச்செய்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/93451/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 8

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 5 முதற்புலரியில் விழித்தபோது அன்னையின் சொல்லே கர்ணனின் நினைவில் எழுந்தது. தன் மஞ்சத்தில் கண்விழித்துப் படுத்தபடி உடைந்த எண்ணங்களை தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான். அன்றிரவு ராதை அதிரதனிடம் பேசியிருப்பாள். ராதை அதிரதனிடம் பேசுவதே குறைவு. அவர்தான் பேசிக்கொண்டிருப்பார். எங்கே அவர் நிறுத்தவேண்டும் என்று மட்டும்தான் அவள் சொல்வாள். சிறு சொற்களால், விழியசைவால், மெய்யுணர்த்தலால். ஆனால் அதன்பின்னர்தான் அவருக்கு சொல்வதற்கு மேலும் சொற்கள் இருக்கும். அவற்றை கர்ணனிடம் சொல்லத்தொடங்குவார். “இவளைப்போன்ற அடங்காக்குதிரைகளை  புரவிநூலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82103/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 7

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 4 அங்க நாட்டிற்கு கர்ணன் குடிவந்தபோது சம்பாபுரியின் அரண்மனை வளாகத்திற்குள் குடியிருப்பதற்கு ராதை உறுதியாக மறுத்துவிட்டாள். அதிரதனுக்கு அதில் பெருவிருப்பிருந்தது. “இல்லை, ஒருபோதும் அங்கு நாம் குடியிருக்கப்போவதில்லை” என்று ராதை சொன்னபோது பதைக்கும் கீழ்த்தாடையுடன் அவளையும் கர்ணனையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம். அதுவே உகந்தது” என்றார் அதிரதன். “எங்களுக்கு சூதர்களின் குடியிருப்பிலேயே இல்லம் ஒன்றை ஒதுக்கு” என்றாள் ராதை. “ஆம். அங்கும் மாளிகைகள் உண்டல்லவா?” என்றார் அதிரதன். “மாளிகை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82034/

‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 6

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3 அணியறை விட்டு கர்ணன் நடக்கத்தொடங்கியதும் சிவதர் அவன் பின்னால் சென்றபடி “தாங்கள் இத்தருணத்தில் இக்கோலத்தில் மூத்த அரசியைப் பார்ப்பது…” என்று நீட்டினார். “ஏன்?” என்றான் கர்ணன். “அரசணிக்கோலம் அவர்களை இன்னும் நிலையழியச் செய்யும்” என்றார். கர்ணன் “ஒற்றை ஆடை உடுத்து தோல் கச்சை அணிந்து தேரோட்டி என அவள் முன் சென்றால் உளம் மகிழ்வாளா?” என்றான். சிவதர் ஒரு கணம் தயங்கியபின் “ஆம், அவ்வண்ணமே எண்ணுகின்றேன்” என்றார். கர்ணன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/82197/

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 72

பகுதி 15 : யானை அடி – 3 துரியோதனன் பெருங்கூடத்திற்கு வந்தபோது கர்ணனும் துச்சாதனனும் துச்சலனும் அங்கே இருந்தனர். இரு உடன்பிறந்தாரும் எழுந்து நின்றதிலும் கர்ணன் தன் கையிலிருந்த சுவடியை மறித்துவிட்டு முகம் தூக்கியதிலும் மெல்லிய செயற்கைத்தனம் இருந்ததை அவன் பார்த்தான். ஆனால் சிரித்தபடி சென்று பீடத்தில் அமர்ந்து “மன்னியுங்கள், சற்று பிந்திவிட்டேன்” என்று அவன் சொன்னது அதைவிடவும் செயற்கையாக இருந்தது. “சிசுபாலரிடமிருந்து மீண்டும் ஓர் ஓலை வந்திருக்கிறது” என்றான் கர்ணன். “என்ன?” என்று துரியோதனன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/73898/

கிருஷ்ணன் வருகை

அன்புள்ள ஜெ நீலம் நாவலில் கண்ணன் இருந்தான். ஆனால் அது பாகவதக் கண்ணன். அவன் குணாதிசயம் வேறு. அவனை நீங்கள் காட்டிய நிறமும் வேறு. அந்தக்கண்ணன் இங்கே வெண்முரசில் தொடர்ந்து வரப்போவதில்லை என்றும் தெரிந்தது காவியக்கண்ணன் எப்படி எப்போது அறிமுகமாகப்போகிறான் என்பதை எண்ணிக்கொண்டே இருந்தேன். அந்தக்கண்ணனை ராதையின் பார்வையில் காட்டிய நீங்கள் இங்கே அர்ஜுனனின் பார்வையில் காட்டிவிட்டிருக்கிறீர்கள். அதற்கு முன் துரியோதனனின் பார்வையில் குறிப்பு வந்துவிடுகிறது. உதடுகள் புன்னகைப்பதை பார்த்திருப்பீர்கள், உடலே புன்னகைப்பதை அவனில் பார்க்கலாம் என்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/66331/

காளி

அன்புள்ள ஜெ நீங்கள் வெண்முரசில் காளி என்ற படிமத்தை நிறையவே பயன்படுத்துகிறீர்கள். பாய்கலைப்பாவை, கொற்றவை, காளி என்றெல்லாம் பெண்களை உருவகப்படுத்தும் வரிகள் ஏராளமாக வருகின்றன. அம்பை பாய்கலைப்பாவையாகச் சுட்டிக்காட்டப்படுகிறாள். ராதையும் தன்னை காளியாக உணரும் இடம் வருகிறது இந்து மத ஆராய்ச்சியாளரும் வைணவருமான என் நண்பர் இது பெரிய பிழை என்றும் மகாபாரதக் காலக்கட்டதிலும் அதற்கு முன்பு வேதங்களிலும் காளி என்ற தெய்வமே இல்லை என்றும் சொல்கிறார். காளி என்பது குப்தர்காலகட்டத்தில் உருவாகி வந்த போர்த்தெய்வம் என்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62955/

குழலிசை

அன்புள்ள ஜெயமோகன் நீலம் வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விதமான போதைநிலைதான் இருந்தது. அதன்பிறகு கடிதங்களையும் கூடவே வந்துகொண்டிருந்த படங்களையும் பார்த்துப்பார்த்துதான் என்னுடைய எண்ணங்களை நான் வளர்த்துக்கொண்டேன். நீலம் என் வாசிப்பில் ஒரு மாஸ்டர்பீஸ். நீங்கள் எழுதியதிலும்கூட அதுதான் மாஸ்டர்பீஸ் என்று சொல்வேன். சிறந்தநாவல் என்றால் என்னென்ன இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறதோ அதெல்லாமே இந்த சின்னநாவலில் இருப்பதை பெரிய ஆச்சரியம் என்றுதான் சொல்வேன். மூன்று கதாபாத்திரங்கள்தான். ராதை, கிருஷ்ணன், கம்சன். ஆனால் மூன்றுபேருடைய வாழ்க்கையின் ஒட்டுமொத்தமும் இந்த நாவலுக்குள் இருக்கிறது. நல்ல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62860/

உடலின் முழுமை

அன்புள்ள ஜெ சார், நீலத்தை வாசித்துவாசித்துத் தீரவில்லை. கண்ணனைச் சின்னக்குழந்தையாக உருவகம் பண்ணிய இடத்தில் இருந்து முதியவராக கொண்டு வந்து நிறுத்தியது வரை ஒரே மனமே கற்பனைசெய்திருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருந்தது. அந்தச்சின்னக்கண்ணனை எழுதும்போதுகூட நீங்கள் அவனை பெரியவராக, வினைமுடித்து வானம் போகப்போகக்கூடியவராக நினைத்திருந்தீர்கள் என்பதே வியப்புதான். என் மனசிலே இருந்து சின்னக்கண்ணன் தவறவே இல்லை.ஒரு குழந்தையைப்பற்றி எல்லாவற்றையுமே சொல்லிவிட்டீர்கள் அது சின்னப்பிள்ளையாக இருந்தபோது நீங்கள் எழுதியவரிகளை திரும்பப்போய் வாசித்தபோது ஏற்பட்ட பிரமிப்பு அதிகம் அம் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62846/

Older posts «