Tag Archive: ராஜ மார்த்தாண்டன்

அண்ணாச்சி – 4

  ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணாச்சி சட்டென்று கண்ணீர் விட்டு அழுதார்.” எதையோ நம்பி என்னமோ செஞ்சாச்சு…குடும்பத்த காப்பாத்தல்ல. பிள்ளையளுக்கு ஒண்ணுமே செய்யல்ல. ஒரு நல்ல துணி எடுத்து குடுத்ததில்லை. நல்லா படிகக் வைக்கல்லை…ஒண்ணுமே செய்யாம போறேன்..” ஏற்கனவே பலமுறை கேட்ட அழுகைதான். ஆனால் அப்போது கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் கேட்டபோது வயிற்றைக் கலக்கியது. பிழைத்துக்கொண்டபின் அவர் சென்னை செல்லவில்லை. விருப்ப ஓய்வு கொடுத்தார். கண் எதிரிலேயே அவர் மீண்டு வந்தார்.  புல் கருகிப்போயிருந்தாலும் ஒரே மழையில் மீள்வது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2948

அண்ணாச்சி – 3

    ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் குடிகாரன் குறிப்புகள் என்று ஒரு பகுதி வரும். கட்சியிலிருந்து நீக்கபப்ட்ட வீரபத்திரபிள்ளை குடிகாரனாகி தெருவில் இறப்பார். அவரது முழுமைபெறாத டைரி அது. அந்தக் குறிப்புகளைப் பற்றி அண்ணாச்சிஎன்ன சொல்கிறார் என்ற ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாதென எண்ணியிருந்தேன். அண்ணாச்சி நாவலை வாசித்துவிட்டு குமுதத்தில் தமிழில் வெளிவந்த சிறந்த பத்து நாவல்களில் ஒன்று என்று சொல்லியிருந்தார்.   2002ல் அண்ணாச்சி  அவரது திஉவல்லிக்கேணி  நாகராஜ் மேன்ஷன் அறையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2945

அண்ணாச்சி – 2

  ராஜமார்த்தாண்டன் சிறுவயதில் ஒருவகையான அழகுடன் இருப்பார் என்று சுந்தர ராமசாமி அடிக்கடி சொல்வதுண்டு. பின்பக்கம் தோள் வரை வளர்த்து விரித்துப்போட கருங்கூந்தல் உண்டு அவருக்கு. நல்ல நீளமான முகம். கருமையாகப் பளபளக்கும் சருமம். அவரது கண்கள் மிக அழகானவை. சிறுவயதில் ஒளிவிடும் நல்ல பல்வரிசையும் இருந்தது. அத்துடன் புன்னகையை அழகாக ஆக்கும் முக்கியமான அம்சமும் அவரிடம் இருந்தது. அவருக்கு உண்மையிலேயே மனிதர்களைப் பிடிக்கும். அவரது மனிதநேயம் என்பது ஒரு கோட்பாடோ நம்பிக்கையோ நிலைபாடோ அல்ல. அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2928

அண்ணாச்சி – 1

  சுந்தர ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்தேன். 1986 டிசம்பர் மாதம். மெல்லிய மழைச்சாரல் இருந்த அந்திநேரம். அப்போது இருவர் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தார்கள். சுந்தர ராமசாமி எட்டிப்பார்த்தார். ”வாங்கோ” என்று என்னை அழைத்தார் ”ஒருத்தரை இண்டிரடியூஸ் பண்ணி வைக்கிறேன்…உங்களுக்கு அவரை ரொம்பப்பிடிக்கும்னு நெனைக்கறேன்…” நான் எழுந்தேன். சுந்தர ராமசாமி ”அவா ரெண்டுபேரும் உள்ள வரமாட்டாங்க.. யானைமேலே வராங்கன்னு நெனைக்கிறேன்” நான் சிரித்துவிட்டேன். யானைமேல் அமர்ந்திருப்பவர்களின் அசைவு அவர்கள் உடலில் இருந்தது. சுந்தர ராமசாமி வீட்டுமுன்னால் அப்போது அலங்காரக்கொடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2925

அண்ணாச்சி:கடிதங்கள்

அன்புள்ள மோகன், எந்த ஒரு கதையிலும், கட்டுரையிலும் ஏதோ ஒரு வரி நம்மைப் பாடாய்ப் படுத்தும். உங்களின் எழுத்து அதில் கொஞ்சம் ஸ்பெஷல். ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளில் மனம் லயித்து கிடக்கும். ‘அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன்’ பற்றி தாங்கள் எழுதியுள்ள வர்ணனையில் ‘உயர் அழுத்த மின்சாரம் ஓடும் மெல்லிய கம்பி போன்றவர்’ என்னும் வரி ஒன்று போதும், அவரது சுபாவத்தைச் சொல்ல.  ‘வித்தியாசமான தோற்றமும் ஆளுமையும் கொண்ட ஆண்களை பெண்கள் சட்டென்று விரும்புவார்கள். கைவிட்டதிலும் ஆச்சரியமில்லை, அபப்டிப்பட்ட ஆண்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2987

ராஜமார்த்தாண்டன் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ, அண்ணாச்சி‍யின் மரணச்செய்தி‍யை தங்களின் வலைப்பதிவில் படிக்கும் நேரம், அவரின் “பார்வையாளனின் சோகம்” கவிதை நினைவில் வந்து நின்றது. சாலையில் நடக்கும் விபத்தினை விமிர்சிக்கும் பார்வையாளனின் துயர விமர்சனமாக அந்தக் கவிதை இருக்கும். கவிதை‍யானது இப்படி முடியும்..(முழுக்கவிதை தங்களிடம் இருந்தால் பிரசுரிக்கவும்) “போர்க்களத்தில் உயிர் துறந்தால் வீரமும் தியாகமும் அதற்குண்டு இது போலான மரணங்களுக்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்?” ஆங்கில வழியில் படித்த என் போன்ற‍வர்களைத் தமிழ்க்கவிதை பக்கம் திருப்பிய பெருமை அண்ணாச்சி அவர்களையே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2941

ராஜமார்த்தாண்டன் அஞ்சலி,சென்னை

  கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம் நாள்: ஜூன் 14, 2009 நேரம்: மாலை 5:30 இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர். தலைமை: சுகுமாரன் பங்குபெறுவோர்: ஞானக்கூத்தன் ஆ.இரா.வேங்கடாசலபதி யூமா வாசுகி மற்றும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்.    இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி  அனைவரையும் அன்புடன் அழைக்கிறது  காலச்சுவடு — Visit us at http://www.kalachuvadu.com

Permanent link to this article: https://www.jeyamohan.in/2965

ராஜ மார்த்தாண்டனுக்கு நினைவஞ்சலி

06.06.2009 அன்று சாலை விபத்தில் காலமாகிய கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலிக் கூட்டம் இடம்: 36, Salamander Street  Scarborough, ON காலம்: 14.06.2009 ஞாயிறு, பிற்பகல் 6.30 மணி தொடர்புகட்கு: (647) 237-3619, (416) 500-9016

Permanent link to this article: https://www.jeyamohan.in/2935

ராஜமார்த்தாண்டன் கடிதங்கள்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் மரணமான செய்தி என்னை மிகவும் துயரத்துள் வீழ்த்தியது. நம்பவே மனசு மறுக்கிறது. கவிஞர் ராஜமார்த்தாண்டனை  ஆரம்பத்தில் பெயரளவில் அறிந்திருந்தாலும் அவரது கவிதைகளை படித்துப் பார் என ஒரு ஊக்கிவிப்பைத் தந்தவர் வெங்கட் சாமிநாதன். இதன் பின் அவரது கவிதைகளை தேடித்தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.  ஈழத்து கவிதைகள் பால் வெகு அக்கறை கொண்டிருந்தார். இவர் போண்றவர்களின் இழப்பு ஈழத்து இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பு. கடந்த ஜனவரியில் வெளியான எனது இருள்-யாழி கவிதைத் தொகுப்பில் பின் இணைப்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2887

ராஜமார்த்தாண்டன்

ஜூன் ஏழாம்தேதி காலை ஆறுமணிக்கு வசந்தகுமார் சென்னையில் இருந்து கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் வந்துசேர்ந்தார். இரவெல்லாம் நல்ல மழை கொட்டிக்கொண்டிருந்தது. காலையிலும் மழை. நான் கார் வரச்சொல்லியிருந்தேன். வீட்டில் இருந்து காலை ஒன்பது மணிக்கு கிளம்பினோம். கிளம்பும்போதும் மழை. போகும்வழியிலேயே  அ.கா.பெருமாளை அவர் வீட்டில் இருந்து கூப்பிட்டுக்கொண்டோம். மழையிலேயே கன்யாகுமரி சாலையில்சென்றோம். சுசீந்திரத்தில் இருந்து மலர்மாலை வாங்கிக்கொணோம். சுசீந்திரம் கன்யாகுமரி சாலை மிக அழகானது. குளங்கள். நீர் நிறைந்து வழியும் ஓடைகள். மழைத்திரைக்கு அப்பால் ஓங்கிய மருத்துவாழ் மலை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2881

Older posts «