Tag Archive: ராஜ் கௌதமன்

பாட்டும் தொகையும் – கடிதங்கள்

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் விஷ்ணுபுரம் விழா: இலக்கியமெனும் களிப்பு அன்புள்ள ஜெ பாட்டும்தொகையும் ஆவணப்படம் பார்த்தேன். அற்புதமான ஒரு ஆவணப்படம். இயற்கையாக எடுக்கப்பட்டிருந்தது. பின்னணிக்குரல் இல்லாமலிருந்தது ஒரு சிறப்பு. பின்னணிக்குரல், தொகுப்புரையாளன் குரல் ஒருவகையில் ஆவணப்படம் எடுப்பவரின் இடர்பாட்டையே காட்டுகிறது. அது வெளியே இருந்து ஒலிக்கிறது. உள்ளிருந்து போதிய குரல்கள் கிடைக்கவில்லை என்பதற்கான சான்று அது. ஒரு இடத்தைப்பற்றிச் சொல்லும்போதோ தத்துவம்பற்றிச் சொல்லும்போதோதான் பின்னணிக்குரல் ஒலிக்கவேண்டும். பேராசிரியரின் கவனமில்லாத உடல்மொழி, அலைபாயும் நடை, அவருடைய முகத்தில் மாறிமாறி வரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116789

பாட்டும் தொகையும் ஆவணப்படம் : கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளதால் விஷ்ணுபுர விழாவுக்கு வர இயலவில்லை.விழா குறித்த எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் கடிதங்கள் வாயிலாகவும்,உங்கள் கட்டுரை,   காணொளிகள் வாயிலாகவும் விழா பற்றித்.தெரிந்து கொள்ள முடிந்தது. ஒவ்வொருவரும் வேறுபட்ட கோணங்களில் விழாவைக் காட்டினார்கள்.இரண்டு நாட்களின் நேர நிர்வாகமும்,நிகழ்ச்சி நிர்வாகமும் பிற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல,எல்லா விழாக்களுக்கும் ஒரு பாடம்.உச்சத்தை எட்டிவிட்டதாக அரங்கசாமியும், கிருஷ்ணனும் மகிழட்டும்.ஆனால் மெருகூட்டுவதற்கு முடிவேயில்லை.ராஜ் கௌதமன் பற்றிய ஆவணப் படம் ஒரு அற்புதம்.தமிழ் இலக்கியக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116695

அயோத்திதாசரின் மாற்றுப்புராண அழகியல்

இந்தியாவின் பண்பாட்டின் நெடுங்கால உறைநிலை கலங்கி புரண்ட ஒரு காலகட்டம் என்று பதினெட்டாம் நூற்றாண்டைச் சொல்லலாம். இங்கே இருந்த புராணமரபை வெளியே நின்று பார்க்கக்கூடிய ஒரு பார்வையை ஐரோப்பியர்கள் நமக்களித்தனர். அக்காலகட்டத்தில் ஐரோப்பிய தாக்கத்துடன் இந்தியச்சூழலில் எழுந்துவந்த நவீனச் சிந்தனையாளர்கள் அனைவரிடமும் புராணங்களை நிராகரிக்கக் கூடிய குரலை நாம் பார்க்கமுடியும். உதாரணமாக சுப்ரமணிய பாரதி புராணங்களைப்பற்றிச் சொல்லும்போது கடலினைத் தாண்டும் குரங்கும்–வெங் கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும், வடமலை தாழ்ந்ததனாலே–தெற்கில் வந்து சமன்செய்யும் குட்டை முனியும் நதியி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/68373

வரலாற்றின் தன்னிலைகள்

காலனிய காலத்தில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடைய தார்மீக வீழ்ச்சியையும் கலாச்சாரச் சீரழிவையும் இறுதி அதிகாரத்தில் தென்காசியில் நிகழும் இரவுவிருந்து வைபவத்தைக் கொண்டு ஆங்கிலேயரின் பேச்சுமுறையில் வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆசிரியர் வருணித்துச் செல்லுவது தமிழ்ப் புனைகதையில் ஓர் அபூர்வ நிகழ்வெனச் சொல்லலாம். வெள்ளையானை -ராஜ் கௌதமனின் விமர்சனம்

Permanent link to this article: https://www.jeyamohan.in/45059