Tag Archive: ராஜாஜி

மபொசி,காமராஜ், ராஜாஜி..

அன்புள்ள ஜெ, இந்தக்கருத்தை உங்கள் மீதான மாற்றுக்கருத்தாக முன்வைக்கவில்லை. எனக்கு தமிழக அரசியலில் அந்த அளவுக்கு பழக்கம் இல்லை. நான் பிறந்ததே எண்பத்திரண்டில்தான். ஆனால் வழக்கமாக கேள்விப் படும் சில விஷயங்களை தெளிவுப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். திராவிட இயக்கத்தவரின் மேடைகளில் சொல்லப் படும் கருத்துக்கள்தான். அதாவது தமிழகத்தின் எல்லைகளை பாதுகாப்பதில் ராஜாஜியும் காமராஜும் தோல்வியடைந்து விட்டார்கள். காமராஜ் கவனக் குறைவாக இருந்த காரணத்தால்தான் பீர்மேடு,தேவிகுளம் பகுதிகள் பறிபோயின. முல்லைப் பெரியாறு அணை தமிழகத்துக்கு கிடைக்கவில்லை. ராஜாஜி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11070

வெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை

நண்பர்களே, ஜெயமோகன் மகாபாரதத்தை மறுபடியும் எழுதப் போகிறேன் என்று அறிவித்தபோது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: தினமும் எழுதுவது என்பது தவம். மகாபாரதக் கதையை மறுபடியும் எழுவது பெருந்தவம். உங்களால்தான் இது முடியும். என்னைப் பொறுத்தவரையில் நமது இதிகாசங்களை அப்படியே பார்க்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவற்றை ஒப்பனையிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உங்களைப் போல மிகத் திறமையான ஒப்பனையாளராக இருந்தாலும்! ஜெயமோகனின் பதில் எனக்கு திருக்குறள் ஒன்றை நினைவிற்கு வரவழைத்தது. சொல்லுக சொல்லைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/65750

பெரிதினும் பெரிது

மறைந்த மலையாள திரைக்கதை ஆசிரியர் லோகிததாஸ் எனக்கு அண்ணனின் இடத்தில் இருந்தவர். பெரும்புகழ்பெற்ற அவரது சினிமாக்கள் மீதெல்லாம் யாரேனும் அது தன் கதை என்று சொல்லி வழக்கு தொடுப்பதுண்டு. சமரசத்துக்கு வந்தால் பைசா கேட்கலாமே என்ற எண்ணம்தான். அப்படி ஒரு வழக்கு பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெற்றது. லோகிததாஸிடம் நீதிபதி கேட்டார் ‘இந்தக் கதை உங்களுடையதா?’ லோகிததாஸ் சொன்னார் ‘இல்லை’ நீதிமன்றத்தில் அதிர்ச்சி. ‘அப்படியென்றால் யாருடைய கதை?’ என்றார் நீதிபதி லோகிததாஸ் சொன்னார் ‘வியாசனின் கதை. நான் மகாபாரதத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/62268

ராமாயணம்-கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு மகாபாரதத்தைத் தழுவி வந்த பல கதைகளை நாவல்களாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து வந்துள்ளேன். ஆனால், ராமாயணத்தைத் தழுவிய புத்தகங்களை இதுவரை நான் அறிந்ததில்லை. இருந்தால் சொல்லவும். அனுமனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, ராவணனின் தரப்பில் இருந்து கதை சொல்வது போலவோ, அந்த மாதிரிப் புத்தகங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்தால் சொல்லுங்கள். Regards Suresh Kumar http://crackedpots.co.in/ எனக்குத்தெரிந்து ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகன் மட்டுமே ராமாயணம் சார்ந்து தமிழில் எழுதப்பட்டுள்ளது. அகலிகை கதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21745

ராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்

வணக்கம். ஐயா கோதண்டராமன் எழுதியிருப்பது மிக ஆழமாக சிந்திக்கவேண்டியது. அதுவும் இந்த காலத்தில் அரசு மானியத்தில் தனியார் நடத்தும் பள்ளிகளில் எந்த அளவுக்கு அநியாயங்கள் நடக்கிறது என்பதை நினைத்தால் கல்வி வியாபாரம் ஆவதை நினைத்தால் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது, எத்தனையோ பள்ளிகள் நல்லமுறையில் நடக்கலாம். நான் அவர்களை இதில் சேர்க்கவில்லை. * ஆசிரியர் தேர்வு முறையில் பணம் கொடுத்தவர்களுக்குதான் முதலிடம். ஆசிரியரின் திறன் கொண்டு அவர்களை மதிபிடுவதில்லை. இதனால் மாணவர்களின் கல்விக்குத்தான் பங்கம் விளைவிக்கிறார்கள். இந்த ஆசிரியர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11626

ராஜாஜி ஒரு கடிதம்

வணக்கம். இன்று தான் ராஜாஜியின் குலக்கல்வி பற்றிய உங்கள் 27.12.2010 பதிலைப் பார்த்தேன். சரியாகச் சொல்லியுள்ளீர்கள். காமராஜரின் மதிய உணவுத்திட்டம் அமலுக்கு வருவதற்கு முன் ஆசிரியப் பணியில் சேர்ந்தவன் என்ற முறையில் என் கருத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் வேலை பார்த்தது அரசு மானியம் பெறும் ஒரு தனியார் நடுநிலைப் பள்ளி. மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்துத் தான் – அதாவது, ஆண்டு இறுதியில் சராசரி மாணவர் வருகையை 20 ஆல் வகுத்து வரும் எண்ணிக்கையில் தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11410

ராஜாஜி,மபொசி_ கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு தங்கள் வலையில் படித்த இந்த கட்டுரை பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. 50 வருடங்களாக காமராஜ் ஓரளவும், ராஜாஜி முழு அளவும் திராவிட கட்சி பிரச்சாரங்களால் பெரிய வில்லன்களாகவே சித்தரிக்கப் பட்டுள்ளனர். உங்கள் கட்டுரை தற்காலத்தில் திராவிட பிரச்சாரத்திரைகளை நீக்கி, அந்தக்கால ஆவணங்கள் மூலம் அந்த மனிதர்களின் சாதனைகளையும், தோல்விகளையும் பார்ப்பதில் முதல் முயற்சி. இது இன்னும் சிந்தனையாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்படுமானால் தமிழ்நாடு `இருட்டு யுகத்திலிருந்து` வெளியே வரலாம். திராவிட பிரச்சாரகர்கள், ஹிஸ்டெரிகலாக, ராஜாஜி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/11164