Tag Archive: ராஜமார்த்தாண்டன் விருது

குமரகுருபரனுக்கு ராஜமார்த்தாண்டன் விருது

குமரகுருபரனின் கவிதைத்தொகுதியான ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ இவ்வருடத்தைய ராஜமார்த்தாண்டன் கவிதை விருதுக்குத் தேர்வாகியிருக்கிறது. நாகர்கோயில் நெய்தல் அமைப்பால் அளிக்கப்படும் விருது இது முதல் தொகுதிக்கே அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியான செய்தி. குமரகுருபரனுக்கு வாழ்த்துக்கள். இத்தருணத்தில் எப்போதும் கவிதைக்குள் நெஞ்சழுந்தி வாழ்ந்த நண்பர் ராஜமார்த்தாண்டன் அண்ணாச்சியை நெகிழ்வுடன் நினைத்துக்கொள்கிறேன் ஜெ வலியிலிருந்து தப்ப முடியாத தீவு மீறல்களின் கனவு

Permanent link to this article: https://www.jeyamohan.in/79111

ராஜமார்த்தாண்டன் விருது

விமர்சகர் ராஜமார்த்தாண்டன் நினைவாக வழங்கப்படும் கவிதைவிருது இம்முறை தாணு பிச்சையாவின் ’உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ என்ற கவிதைத்தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. 2009 ஆம் வருடத்துக்கான விருது இது. கவிஞர்கள் சுகுமாரன், க.மோகரங்கன், இதழாளார் கவிதா முரளிதரன் ஆகியோர் நடுவர்களாக அமைந்து விருதைத் தேர்வு செய்திருக்கிறார்கள். ரூ 10000மும் விருது பத்திரமும் அடங்கிய இவ்விருது 2011 ஜனவரி 30 அன்று நாகர்கோயில் ஏ.பி.என் பிளாசா அரங்கில் காலை பத்துமணிக்கு நிகழும் விழாவில் அளிக்கப்படுகிறது. தேவதேவன் விருதை வழங்குகிறார் தாணு பிச்சையாவுக்கு வாழ்த்துக்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/10911