Tag Archive: ராஜமார்த்தாண்டன்

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்

  மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம். என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க வாழ்த்துகிரேன். இருபதுவருடங்களுக்கும் மேலாக அவர் மீது ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவன் நான். ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் பலகோணங்களில் விவாதமும் புரிந்திருக்கிறார். ஆனால் நான் என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலை அவருக்குத்தான்  சமர்ப்பணம் செய்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/578

கடிதங்கள்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு, சென்ற வாரம் தொழில் நிமித்தம் சீனா சென்றிருந்தேன். குறிப்பாக ஷாங்காய் மற்றும் பீஜிங் நகரங்கள். எனக்கு சாதாரணமாகவே சீனாவின் கட்டுப்பாடு மிக பிடிக்கும். ஒரு பத்து பதினைந்து வருடங்களில் இரு நகரங்களை இப்படி மாற்ற முடியும் என்பதற்கு இவ்விரு நகரங்களும் ஒரு எடுத்துக்காட்டு. நகர அமைப்பு அதற்கான உள்கட்டமைப்புகள் சாலைகளின் மேன்மை வாகன நடமாட்டத்தில் ஒரு கட்டுப்பாடு ,பொது இடங்களில் மக்கள் நடத்தையில் ஒரு ஒழுக்கம். ஆனால் சாதாரண மக்கள் சீன கலாச்சாரத்திலிருந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/21398

அண்ணாச்சி

நம் மண்ணின் எல்லா எழுத்தாளர்களுடனும் அல்லது அவர்களுடைய படைப்புகளுடுனாவது ஓரளவு பரிச்சயம் உள்ளவன் நான். அண்ணாச்சியை தவிர. மருந்துவாழ் மலையைப் பற்றி அறிய ஒரு முறை நெய்தல் கிருட்டிணனுடன் அண்ணாச்சியை சந்திப்பதாக இருந்ததும் தவறிப்போனது. ஒரு கட்டத்தில் தான் எதையுமே சாதிக்கவில்லை என்ற துயரம் அவருக்கு இருந்ததாக பதிவு செய்துள்ளீர்கள். அண்ணாச்சி போன்ற கர்ம யோகிகளுக்கு அது ஒரு பொருட்டேயில்லை. “பொறவு?” அந்த ‘பொறவு’தானே ஒரு விதமான puzzle-உடன் நம் எல்லோரின் வாழ்க்கையையும் முன் நகர்த்திக் கொண்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/3030

உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்

தமிழ் இலக்கிய திறனாய்வாளரான ராஜமார்த்தாண்டனின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி உயிர் எழுத்து சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அட்டையில் ராஜமார்த்தாண்டனின் அழகான புகைப்படம். புகைப்படம் எடுத்தது யாரென்று குறிப்பிடப்படவில்லை. உள்ளே சுகுமாரன் எழுதிய ‘நண்பர் அண்ணாச்சி’ என்ற கட்டுரை முதலில் உள்ளது. ராஜமார்த்தாண்டன் தினமனியில் உதவியாசிரியராக இருந்த காலகட்டத்தில் மாலன், ஞாநி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து அளித்த ஊக்கத்தால் முக்கியமான மொழியாக்கங்களையும் கவிதைகளையும் தினமணி இதழில் கொண்டுவந்ததையும் சிறந்த பேட்டிகளை வெளியிட்டதையும் சுகுமாரன் நினைவுகூர்கிறார். ‘ராஜமார்த்தாண்டனின் விமரிசனப்போக்குகள்’ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/591

ராஜமார்த்தாண்டன் 60- விழா : படங்கள்

நிஜம் நேற்றைப்போலவே இன்றைப்போலவே ஏதுமின்றி கடந்துபோயிற்று நாற்பத்தாறாவது ஆண்டும் காலையிலும் மாலையிலும் உடன்வரும் நெடிய நிழலை உச்சிப்போதில் நாய்க்குட்டியென காலடியில் பதுங்கிவரும் நிழலை அறிவேன் அறிந்திலேன் இதுவரை நிழலின் நிஜத்தை ராஜ மார்த்தாண்டன் ராஜ மார்த்தாண்டன் கொடிக்கால் அப்துல்லா ராஜமார்த்தாண்டனை வாழ்த்துகிறார் நாஞ்சில் நாடன் நாஞ்சில் நாடன் விமரிசகர் ந.முருகேசபாண்டியன்  கொடிக்கால் அப்துல்லா ஜெயமோகன்   கூட்டத்தில் ஒரு பகுதி  அ.க.பெருமாள் அறிமுக உரை எம்.எஸ். வாழ்த்துரை   சுரேஷ்குமார இந்திரஜித் வாழ்த்துரை சுகுமாரன் வாழ்த்துரை நெய்தல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/581

ராஜமார்த்தாண்டன் 60- விழா

விழா இலக்கிய விமரிசகரும், சிற்றிதழாளரும், கவிதைவரலாற்றாசிரியருமான ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது ஆண்டு நிறைவு விழா நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் நாகர்கோயில் ஆர்.ஓ.ஏ.கலையரங்கத்தில் 26-7-08 மாலை ஆறுமணிக்குத்தொடங்கியது. நாஞ்சில்நாடன் கோவையில் இருந்துவந்து வடிவீஸ்வரத்தில் அவரது தம்பி வீட்டில் தங்கியிருந்தார். நான் அலுவலகத்தில் இருந்து முன்னரே வந்து குளித்து உடைமாற்றி ஒரு ஆட்டோவில் ஏறி அவரது வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து இன்னொரு ஆட்டோவில் இருவரும் அரங்குக்கு வந்தோம். அங்கு குளச்சல் மு யூசுப் போன்ற நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆறுமணியளவில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/577