Tag Archive: ராஜகோபாலன்.ஜா

பத்து ஆசிரியர்கள் 10- ராஜகோபாலன்

உங்களைப்பற்றி..(கல்வி/ பணி/ குடும்பம்)? திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் சொந்த ஊர். அப்பா ஜானகிராமன், அம்மா நாகலட்சுமி. இளங்கலை வணிகவியலும், வணிக மேலாண்மையில் முதுநிலையும் கற்றேன். காப்பீட்டுத் துறையில் பயிற்சிப் பணியில் இருபது ஆண்டுகள் அனுபவம். தற்போது மனித வளப் பயிற்சி & மேம்பாட்டு ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கி நடத்து வருகிறேன். மனைவி சுபாஷிணி டாடா நிறுவனத்தில் பணிபுரிகிறார். மகன் விஸ்வஜித் நான்காம் வகுப்பில் படிக்கிறார். இலக்கிய பரிச்சயம் எப்படி நிகழ்ந்தது? ஆதர்சங்கள் யார்? மூன்றாம் வகுப்பு கோடை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129138

ஆட்டத்தின் ஐந்து விதிகள்- ராஜகோபாலன் முன்னுரை

1998 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத பின்மதியத்தில் நடந்த நீண்ட உரையாடல் ஒன்றின் முடிவில் நான் படித்துக்கொண்டிருந்த கல்லூரியின் முதுநிலை தொழில் மேலாண்மைத் துறை இயக்குனர் திரு.சிவராஜன் அவர்கள் என்னிடம் சொன்னார் – “நீ ஒரு சிறந்த பயிற்றுனராக வர முடியும் என நம்புகிறேன்”. முதுநிலை மாணவனாக அதற்கு முந்தைய நொடி வரை நான் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறேன் என்பது குறித்த எண்ணம் ஏதும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அந்த நொடியிலிருந்து இருபது ஆண்டுகளைத் தாண்டிய இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/129136

விமரிசன வடை

அன்பின் ஜெ, அதிகமும் பேசிய விஷயம்தான். ஆனாலும் தொடர் நிகழ்வு. அச்சு ஊடகங்கள் இருந்தபோது ஒரு விமரிசனத்திற்கு அதை எழுதுபவர் யார் என்ற மதிப்பீடு இருந்ததாகவே நினைக்கிறேன். ஒரு குறைந்த பட்ச நிரூபணமாவது இருக்கும் ஒருவரே விமரிசனம் எழுத இயலுமாய் இருந்தது. ஆனால் இணையம் வந்த பின் அந்த இடம் பொதுவெளி ஆகிவிட்டிருக்கிறது. அதனால் இதைப் போன்ற “கவையாகி, கொம்பாகி காட்டகத்தே ” நிற்கும் அறிவில் வல்லார் பலரும் கருத்து சொல்ல வந்துவிட்டனர். இவர்களுக்காவே இன்றைய எனது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/12455